அமெரிக்க வெளியுறவு கொள்கையின் இன்னொரு தோல்வி.. ஹவுதிகளை ஒடுக்க முடியவில்லை!
துபாய்: யேமனில் ஹவுதிகளுக்கு எதிராக அமெரிக்கா நடத்தி வரும் குண்டு வீச்சு தாக்குதல்கள் தோல்வியில் முடிந்துள்ளது. ஹவுதிகள் இந்தத் தாக்குதல்களைத் தாக்குப்பிடித்ததோடு, இஸ்ரேலிய பிராந்தியத்திற்குள் ட்ரோன்களை அனுப்பி தாக்குதல் நடத்தியுள்ளனர். இது அமெரிக்க வெளியுறவுக் கொள்கையின் பெரும் தோல்வியாகக் கருதப்படுகிறது.
ஹவுதி அமைப்பினர், 2023 அக்டோபரில் தொடங்கிய இஸ்ரேலிய-பாலஸ்தீன மோதலில் பாலஸ்தீன ஆதரவு ஹமாஸ் அமைப்புடன் இணைந்து செயல்பட்டனர். இதன் விளைவாக, இஸ்ரேலிய பிரதேசத்தை நோக்கி ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை தாக்குவதற்காக அனுப்பி வைத்தனர்.இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, இஸ்ரேலிய விமானப்படை யேமனின் ஹோடெய்டா துறைமுகத்தைத் தாக்கியுள்ளது. இதில் குறைந்தது ஆறு பேர் உயிரிழந்துள்ளனர். இந்தத் தாக்குதல், செங்கடல் பகுதியில் பதற்றம் அதிகரிப்பதற்கும், முழு அளவிலான மோதலுக்கு வழிவகுப்பதற்கும் வாய்ப்புள்ளது.

ஹவுதிகளின் வெற்றி: ஜூலை 19ம் தேதி இஸ்ரேல் பிராந்தியத்தின் உள்ளே ஹவுதிகள் ட்ரோன் தாக்குதல் நடத்தியிருந்தனர். இந்தத் தாக்குதல்கள் ஹவுதிகளுக்கு அடையாள வெற்றியாகக் கருதப்படுகிறது. இதன் மூலம், ஹவுதிகளின் பலமும், அரசியல் செல்வாக்கும் உள்நாட்டிலும், பிராந்திய ரீதியாக உயர்ந்து வருகிறது.
அமெரிக்காவின் தோல்விகள்: ஹவுதிகளுக்கு எதிரான ஏழு மாத கால அமெரிக்க தலைமையிலான நடவடிக்கை பெரும் பொருட் செலவை ஏற்படுத்தியுள்ளது, ஆனால் எந்தப் பலனையும் தரவில்லை. இந்தத் தாக்குதல்களால் ஹவுதி தரப்பில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. மேலும், செங்கடல் பகுதியில் கப்பல் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா மற்றும் அதன் கூட்டாளிகள் நடத்திய தாக்குதல்கள் எதுவும் ஹவுதிகளை முடக்கி நிறுத்தவில்லை. இதனால், செங்கடல் பகுதியில் கப்பல் போக்குவரத்து பாதிக்கப்பட்டு, கப்பல் கட்டணம்தான் தாறுமாறாக உயர்ந்துள்ளது. அமெரிக்க அதிபர் ஜோ பிடன் கூட இந்த தாக்குதல்கள் பயனற்றவை என்று ஒப்புக் கொண்டார். ஆனால், அவர் இந்த தாக்குதல்களை நிறுத்த மறுத்துவிட்டார்.
அமைதிக்கு ஆபத்து: ஹவுதி அமைப்பினரின் தொடர்ச்சியான தாக்குதல்கள் மற்றும் அமெரிக்காவின் தோல்விகள், மத்திய கிழக்கு பகுதியில் ஒரு பெரிய போரை ஏற்படுத்தும் அபாயத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த பிரச்சனைக்கு ஒரு தீர்வு காணப்படாவிட்டால், இந்த பிராந்தியத்தில் நீண்ட காலமாக அமைதி நிலவ வாய்ப்பில்லை.
இஸ்ரேலிய-பாலஸ்தீன மோதல்: இதையெல்லாம் சுட்டிக்காட்டியுள்ள அல்ஜசீரா ஊடக கட்டுரை, ஹவுதிகள் தங்கள் தாக்குதல்களை நிறுத்த ஒரே வழி, இஸ்ரேலிய-பாலஸ்தீன மோதலை முடிவுக்குக் கொண்டுவருவதே என அறிவுறுத்துகிறது. ஆனால், அமெரிக்கா அதைச் செய்யத் தவறிவிட்டது. பைடன் நிர்வாகத்தின் மற்றொரு தோல்வி இதுவாகும் என்கிறது அந்த கட்டுரை.
-
கிரிப்டோகரன்சிக்கு மொத்தமாக வேட்டு வைத்த அமெரிக்கா.. நினைத்துகூட பார்க்காத அடி.. கலங்கி நிற்கும் ஈரான்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ












Click it and Unblock the Notifications