கிறிஸ்துமஸ் தாத்தாவை தேடும் அமெரிக்க ராணுவம்.. தனி இணையதளமே உருவாக்கிய விமான படை!
கிறிஸ்துமஸ் தாத்தா எங்கு இருக்கிறார் என்று கண்டுபிடிக்கும் இணையதளம் அமெரிக்க ராணுவத்தால் உருவாக்கப்பட்டு இருக்கிறது.
நியூயார்க்: கிறிஸ்துமஸ் தாத்தா எங்கு இருக்கிறார் என்று கண்டுபிடிக்கும் இணையதளம் அமெரிக்க ராணுவத்தால் உருவாக்கப்பட்டு இருக்கிறது. 1995ல் நடந்த ஒரு நிகழ்வின் காரணமாக இந்த இணையதளம் உருவாக்கப்பட்டு இருக்கிறது.
மேலும் இதன் மூலம் கிறிஸ்துமஸ் தாத்தா எங்கு இருக்கிறார் என்பதை எளிதாக கண்டுபிடிக்க முடியும். உலகத்தில் இருக்கும் பலரும் இந்த இணையதளத்தை தேடி பார்த்து வருகின்றனர்.
இந்த இணையதள உருவாக்கத்திற்கு பின்பு நெகிழ்ச்சியான கதை ஒன்று இருக்கிறது. தற்போது இந்த இணையதளம் உலகம் முழுக்க வைரல் ஆகி இருக்கிறது.

ராணுவத்தின் இணையதளம்
அமெரிக்காவின் விமான படை தற்போது 'www.noradsanta.org' என்ற இணையதளம் ஒன்றை நடத்தி வருகிறது. இந்த இணையதளம் 3டி தொழிநுட்பத்தில் இயங்க கூடியது. இதில் கிறிஸ்துமஸ் தாத்தா எந்த இடத்தில் இருக்கிறார் என்பதை கண்டுபிடிக்கலாம். எந்த நாட்டிற்கு எல்லாம் சென்று இவர் பரிசுகளை தருகிறார் என்றும் பார்க்கலாம்.

செயல்பாடு எப்படி
இது முழுக்க முழுக்க விமானப்படையின் ரேடாரை கொண்டு அதி நவீன தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. அந்த இணையத்தில் இருக்கும் கிறிஸ்துமஸ் தாத்தா மீது கிளிக் செய்யும் போது அவர் எங்கே இருக்கிறார், எவ்வளவு பரிசுகளை கொடுத்து இருக்கிறார் என்பதை தெரிந்து கொள்ள முடியும். இந்த இணையம் உலகம் முழுக்க ஹிட் அடித்து இருக்கிறது.

என்ன விஷயங்கள் செய்வார்கள்
இந்த இணையத்தில் இருக்கும் கிறிஸ்துமஸ் தாத்தா உண்மையானவர் இல்லை என்றாலும் பலரும் இதை விரும்புகிறார்கள். முக்கியமாக சிறுவர்கள் இதை அதிகம் விரும்புகின்றனர். மேலும் அமெரிக்க அதிபர் டிரம்ப், இவங்கா டிரம்ப் ஆகியோர் கூட இதில் ஒருநாள் கிறிஸ்துமஸ் தாத்தாவாக செயல்பட்டனர்.

அழகிய வரலாறு
இந்த இணையத்திற்கு பின் பெரிய வரலாறு இருக்கிறது. 1955ல் கிறிஸ்துமஸ் தாத்தாவின் தொலைபேசி எண் என நினைத்துக் கொண்டு சிறுமி ஒருவர் அமெரிக்க விமான படைக்கு கால் செய்து இருக்கிறார். பேப்பர் விளம்பரத்தை பார்த்துவிட்டு இந்த காலை அவர் செய்துள்ளார். அப்போது அந்த சிறுமியின் ஆசையை விமான படை தளபதி நிறைவேற்றி இருக்கிறார். அதில் இருந்தே இந்த திட்டம் உருவாக்கப்பட்டு, இணையதளம் எல்லாம் உருவாக்கப்பட்டு இருக்கிறது.
-
கிரிப்டோகரன்சிக்கு மொத்தமாக வேட்டு வைத்த அமெரிக்கா.. நினைத்துகூட பார்க்காத அடி.. கலங்கி நிற்கும் ஈரான்! -
ஈரானுடன் போர் நிறுத்தம்.. 14 பாயிண்ட்களை அடுக்கிய அமெரிக்கா! கையெழுத்து போடுவாரா டிரம்ப்? -
ஹார்முஸ் நீரிணைக்கு சுங்க கட்டணமா? மொத்த அரபு நாடுகளும் க்ளோஸ்.. அமெரிக்கா சீரியஸ் வார்னிங்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி?












Click it and Unblock the Notifications