ஹிட்லர் பாணியில் டிரம்ப்.. நாட்டைவிட்டு வெளியேறுமாறு அமெரிக்க மசூதிகளுக்கு மிரட்டல் கடிதம்
ஹிட்லர் யூதர்களுக்கு என்ன செய்தாரோ அதையேதான் டிரம்பும் உங்களுக்கு செய்யப்போகிறார் என்றுகூறி அமெரிக்காவில் உள்ள மசூதிகளுக்கு மிரட்டல் கடிதம் உலா வருகிறது.
வாஷிங்டன்: யூதர்களுக்கு ஹிட்லர் என்ன செய்தாரோ அதனையே அமெரிக்க அதிபராக தேர்வாகி உள்ள டொனால்டு ட்ரம்ப்பும் செய்வார் என்றுகூறி நாட்டை விட்டு வெளியேறுமாறு அங்குள்ள மசூதிகளுக்கு மிரட்டல் கடிதம் உலா வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்காவின் 45-வது அதிபராக டொனால்டுடிரம்ப் தேர்வு செய்யப்பட்டுள்ளார். வரும் ஜனவரி மாதம் 20-ம் தேதி ட்ரம்ப் பதவி ஏற்க உள்ள நிலையில், அமெரிக்காவில் உள்ள மசூதிகள் சிலவற்றிற்கு மிரட்டல் கடிதம் வந்துள்ளது.

அதில் சாத்தானின் குழந்தை என்ற தலைப்பில் ஹிட்லர் யூதர்களுக்கு என்ன செய்தாரோ அதையேதான் டிரம்ப் உங்களுக்கு செய்யப் போகிறார். நீங்கள் உங்கள் உடைமைகளை எடுத்துக் கொண்டு நாட்டைவிட்டு வெளியேறுங்கள். என்று எழுதப்பட்டுள்ளது.
மேலும் இந்தக் கடிதம் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதியில் இருந்து வந்திருக்கலாம் என்றும் இது ஒரு வெறுப்பு கடிதம் என்பதால் இதன் மீது விசாரணை நடத்த முடியாது என்றும் அமெரிக்க புலனாய்வு அமைப்பான எப்பிஐ தெரிவித்துள்ளது. ஆனால், இது குறித்து டிரம்ப் அலுவலகம் தரப்பில் எந்த ஒரு கருத்தும் வெளியிடவில்லை என்று கூறப்படுகிறது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications