அமெரிக்க அதிபர் தேர்தல் கணிப்பு... ட்ரம்பை விட ஹிலரிக்கு 7 சதவீதம் கூடுதல் ஆதரவு!

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: உலகமே ஆவலுடன் எதிர்ப்பார்க்கும் அமெரிக்க அதிபர் தேர்தல் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது.

நவம்பர் 8-ம் தேதி நடக்கவிருக்கும் இந்த தேர்தலில் யாருக்கு அதிக வெற்றி வாய்ப்பு என இப்போதே கணிப்புகள் வெளியாக ஆரம்பித்துள்ளன.

சமீபத்திய கருத்துக் கணிப்பு ஒன்றில் ட்ரம்ப்பை விட ஹிலரிக்குத்தான் அதிக வெற்றி வாய்ப்பு எனத் தெரிய வந்துள்ளது.

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஹிலாரி கிளிண்டனும் (வயது 68), குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்டு டிரம்பும் (70) மோதுகின்றனர்.

US Opinion Poll: Clinton has comfortable lead

கடந்த 25-ந் தேதி தொடங்கி 28-ந் தேதி வரையில் மான்மவுத் பல்கலைக்கழகம் நடத்திய கருத்துக் கணிப்பில் ஹிலாரி கிளிண்டனுக்கு 46 சதவீதம் ஆதரவும், டொனால்டு டிரம்புக்கு 39 சதவீதமும் ஆதரவு இருப்பது தெரிய வந்துள்ளது.

அத்துடன், கட்சியினர் ஆதரவு என்ற வகையில் பார்த்தால், ஹிலாரி கிளிண்டனுக்கு ஜனநாயக கட்சியில் 85 சதவீதம் பேரின் ஆதரவு உள்ளது. இதே போன்று, டொனால்டு ட்ரம்புக்கு குடியரசு கட்சியில் 78 சதவீதத்தினரின் ஆதரவு இருக்கிறது.

எந்த சார்பும் இல்லாதவர்கள் மத்தியில் ஹிலாரிக்கு 37 சதவீதம் பேரின் ஆதரவும், டிரம்புக்கு 32 சதவீதம் பேரின் ஆதரவும் உள்ளது.

US Opinion Poll: Clinton has comfortable lead

த்ரி எமர்சன் கல்லூரி சார்பில் நடத்தப்பட்ட மற்றொரு கருத்துக்கணிப்பில், ஒஹையோ மாகாணத்தில் இருவரும் சம பலத்தில் (தலா 43 சதவீத ஆதரவு) இருப்பது தெரிய வந்துள்ளது.

மிச்சிகனில் ஹிலாரிக்கு டிரம்பை விட 5 சதவீதம், பென்சில்வேனியாவில் 3 சதவீதம் கூடுதல் ஆதரவு உள்ளது. ஹப் போஸ்ட், யூ கவ் நடத்திய கருத்துக் கணிப்புகளில், குடியரசு கட்சியினரில் 54 சதவீதம்பேர் கட்சியின் வேட்பாளர் டிரம்ப் சரியான தேர்வு இல்லை என கருத்து கூறி அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+