ரேடாரில் சிக்காது.. ஒலியை விட 5 மடங்கு வேகம்.. "டார்க் ஈகிளை" களமிறக்கும் அமெரிக்கா! மிரளும் ஈரான்
வாஷிங்டன்: அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான பதற்றம் புதிய உச்சத்தை எட்டியுள்ள நிலையில், அமெரிக்கா தனது வரலாற்றிலேயே முதன்முறையாக டார்க் ஈகிள் ஹைப்பர்சோனிக் ஏவுகணைகளை ஈரானுக்கு எதிராகப் பயன்படுத்தத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இது தொடர்பாக வெளியாகியுள்ள தகவல் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் போர் மேகங்கள் இன்னும் விலகாத நிலையில், அமெரிக்கா தனது ராணுவ பலத்தைக் காட்ட ஒரு பிரம்மாண்ட ஆயுதத்தைக் கையில் எடுத்துள்ளது. ஒலியின் வேகத்தை விடப் பல மடங்கு வேகமாகச் சென்று, எதிரி நாடுகளின் ரேடார்களில் கூட சிக்காமல் தாக்கக்கூடிய டார்க் ஈகிள் ஹைப்பர்சோனிக் ஏவுகணைகளை முதன்முறையாகப் போர்க்களத்தில் இறக்க அமெரிக்கா திட்டமிட்டு வருவதாக ப்ளூம்பெர்க் செய்தி வெளியிட்டுள்ளது.

தொடரும் பதற்றம்
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே கடந்த சில வாரங்களாக நிலவி வரும் நேரடி மோதல் போக்கு, தற்போது ஒரு தீர்க்கமான கட்டத்தை எட்டியுள்ளது. நேரடி தாக்குதல் இல்லை என்றாலும் இதுவரை முழுமையாக அமைதி ஒப்பந்தம் எட்டப்படவில்லை. அமெரிக்காவின் கண்டிஷன்களை ஈரான் ஏற்க மறுக்கும் நிலையில், ஈரான் சொல்வதை அமெரிக்கா கேட்க மறுக்கிறது. இதனால் அந்த பிராந்தியத்தில் பதற்றம் தொடரவே செய்கிறது.
இதற்கிடையே ஈரானின் ஏவுகணை ஏவுதளங்கள் மற்றும் ராணுவக் கட்டமைப்புகளைக் குறிவைத்துத் தாக்க, அதிநவீன தொழில்நுட்பம் கொண்ட இந்த டார்க் ஈகிள் ஏவுகணைகளை அமெரிக்க ராணுவம் நிலைநிறுத்தத் தொடங்கியுள்ளது. இது தொடர்பாக அமெரிக்காவின் மத்திய கமாண்ட் (CENTCOM) பிரிவில் இருந்து கோரிக்கை வந்துள்ளதாகக் கோரப்படுகிறது. இருப்பினும், பென்டகன் இதுவரை இந்த விவகாரத்தில் இறுதி முடிவை எடுக்கவில்லை.
அதென்ன டார்க் ஈகிள்
- மின்னல் வேகம்: இந்த ஏவுகணைகள் ஒலியை விட ஐந்து மடங்குக்கும் மேலான வேகத்தில் (Mach 5+) செல்லக்கூடியவை. ஏவப்பட்ட சில நிமிடங்களிலேயே ஆயிரக்கணக்கான மைல்கள் தூரத்தில் உள்ள இலக்கைத் துல்லியமாகத் தாக்கும் திறன் கொண்டவை.
- ரேடாருக்கு சவால்: தற்போதைய ஏவுகணைத் தடுப்பு அமைப்புகளால் ஹைப்பர்சோனிக் ஏவுகணைகளைக் கண்டறிவதோ அல்லது இடையில் தடுத்து அழிப்பதோ கிட்டத்தட்டச் சாத்தியமற்றது. இது ஈரானின் வான் பாதுகாப்பு அரண்களை எளிதில் ஊடுருவிச் செல்லும் என அமெரிக்கா நம்புகிறது.
- அமெரிக்காவின் முதல் முயற்சி: இதற்கு முன்பு ரஷ்யாவும் சீனாவும் ஹைப்பர்சோனிக் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தியிருந்தாலும், அமெரிக்கா ஒரு நேரடிப் போரில் இதனைப் பயன்படுத்துவது இதுவே முதல் முறையாக இருக்கும்.
அச்சம்
ஈரான் மீது இத்தகைய அதிநவீன ஆயுதங்களைப் பயன்படுத்தினால், அது ஈரானின் அண்டை நாடுகளையும் பாதிக்கும் என ரஷ்ய அதிபர் புதின் ஏற்கனவே எச்சரித்துள்ளார். மேலும், ஹார்முஸ் ஜலசந்தியில் பதற்றம் அதிகரித்து கச்சா எண்ணெய் விலை பீப்பாய்க்கு $120ஐ தொட்டுள்ள நிலையில், மீண்டும் ராணுவ நடவடிக்கை எடுக்கப்பட்டால் கச்சா எண்ணெய் விலை வரலாறு காணாத உச்சம் தொடும். மேலும், அது உலகப் பொருளாதாரத்திலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்.
உலகப் போர்?
ஈரான் பேச்சுவார்த்தை முடிய போகிறது என டிரம்ப் ஒரு பக்கம் சொன்னாலும் கூட அது முடிவதாகத் தெரியவில்லை. இந்தச் சூழலில் டார்க் ஈகிள் குறித்த தகவல் பதற்றத்தை அதிகரித்துள்ளது. இத்தகைய அழிவு தரும் ஆயுதங்களை ஏவுவது என்பது மூன்றாவது உலகப் போர் ஏற்படுமோ என்ற அச்சத்தையே மக்களிடையே ஏற்படுத்துகிறது.!
-
திடீரென மனசு மாறிய டிரம்ப்.. ஈரான் மீதான தாக்குதலை நிறுத்தி உத்தரவு! காரணம் இதுதான் -
மீண்டும் டிரம்ப் அடித்த பல்டி! "எல்லாம் நல்லா போகுது.. தாக்குதல் கேன்சல்!" உற்று பார்க்கும் ஈரான் -
"ஹார்முஸை நெருங்கினாலே சரமாரி தாக்குதல் நடத்துவோம்.." அச்சுறுத்தும் ஈரான்.. அமைதி ஒப்பந்தம் காலி -
ஈரானை மொத்தமாகக் கைப்பற்றத் திட்டம் போடும் அமெரிக்கா.. டிரம்ப் சொன்ன ஷாக்கான விஷயம்! -
ஈரான்-ஐ துவம்சம் செய்யபோகும் அமெரிக்கா! இன்று இரவே தாக்குதல் டொனால்ட் டிரம்ப் பரபர 'வார்னிங்'! -
வாழ வைத்த இந்தியா! 22 வயசுல பெங்களூர் வந்த அமெரிக்கர்.. இன்னைக்கு டாப் கோடீஸ்வரர்! எப்படினு பாருங்க -
குவைத் நாட்டில் ஈரானின் வெறியாட்டம்! விமான சேவை மொத்தமாக முடக்கம்.. ஜோர்டானில் மட்டும் 12 ஏவுகணைகள் -
இந்தியர்களுக்கு குட்பை.. அமெரிக்காவிற்கே மூட்டையைக் கட்டிய பிரபல நிறுவனம்.. ஐடி ஊழியர்கள் ஷாக் -
ஈரான் மீது முழு வீச்சில் தாக்குதலை ஆரம்பித்த அமெரிக்கா.. ஹார்முஸ் ஜலசந்தியும் க்ளோஸ்.. ஒரே பதற்றம் -
"அலறிய அபாய சைரன்.." நடுக்கடலில் தத்தளிக்கும் இந்தியர்கள்.. கப்பல் மீது பாய்ந்த ஏவுகணை.. பதற்றம் -
கடலோர மக்களுக்கு குடிநீர் இல்லை.. ஏரிகளை தகர்த்தது அமெரிக்கா.. ஈரான் பரபரப்பு குற்றச்சாட்டு -
"பதிலடி கொடுப்போம்.." நள்ளிரவில் ஈரானுக்கு டிரம்ப் கொடுத்த எச்சரிக்கை.. மீண்டும் வெடிக்க போகுது போர்












Click it and Unblock the Notifications