மளமளவென இடிக்கப்பட்ட.. வெள்ளை மாளிகையின் ஒரு பகுதி.. டிரம்ப்பிற்கு வந்த விபரீத ஆசை.. என்ன காரணம்?
சென்னை: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நீண்ட நாட்களாக எதிர்பார்த்த வெள்ளை மாளிகை பால்ரூம் கட்டுமானப் பணிகள் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளன. இதற்காக வெள்ளைமாளிகையின் ஒரு பகுதி இடிக்கப்பட்டு வருகிறது.
250 மில்லியன் டாலர் மதிப்பிலான இந்த பிரமாண்ட திட்டம், கடந்த ஒரு நூற்றாண்டில் அதிபர் மாளிகையில் மேற்கொள்ளப்படும் மிகப்பிரம்மாண்ட கட்டுமான மாற்றங்களில் ஒன்றாகும்.

டிரம்ப்பிற்கு வந்த விபரீத ஆசை
டிரம்ப் இரண்டாவது முறையாக அதிபராக பதவியேற்ற பிறகு, ஜனவரி 2029-க்குள் இந்த பால்ரூம் கட்டி முடிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. வெள்ளை மாளிகை தனது ட்ரூத் சோஷியல் கணக்கில் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தத் தகவலை உறுதிப்படுத்தியுள்ளது. திங்கள்கிழமை முதல், கிழக்குப் பகுதியின் ஒரு சில இடங்களில் இடிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அங்கு அகழ்வாராய்ச்சிக் கருவிகள் மற்றும் கட்டுமானப் பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
வெள்ளை மாளிகையின் வரலாற்றிலேயே முதல் முறையாக, நிரந்தர பால்ரூம் ஒன்று கட்டப்படுகிறது. கடந்த 150 ஆண்டுகளுக்கும் மேலாக, அமெரிக்க அதிபர்கள் அனைவருக்கும் இவ்வாறான பால்ரூம் ஒன்று கட்டப்பட வேண்டும் என்ற கனவு இருந்தது என்று டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
"புதிய, பெரிய, அழகான வெள்ளை மாளிகை பால்ரூம் கட்டுவதற்கான பணிகள் வெள்ளை மாளிகை வளாகத்தில் தொடங்கப்பட்டுள்ளதை அறிவிப்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்," என்று டிரம்ப் ட்ரூத் சோஷியலில் பதிவிட்டுள்ளார். இந்த பதிவு வெள்ளை மாளிகையின் அதிகாரப்பூர்வ கணக்கிலும் பகிரப்பட்டுள்ளது.
வெள்ளை மாளிகை கிழக்குப் பகுதி
"வெள்ளை மாளிகையிலிருந்து முற்றிலும் தனிப்பட்டதாக, கிழக்குப் பகுதி முழுமையாக நவீனமயமாக்கப்படுகிறது. இது முடிந்ததும் முன்னெப்போதையும் விட அழகாக இருக்கும்! 150 ஆண்டுகளுக்கும் மேலாக, ஒவ்வொரு அதிபரும் வெள்ளை மாளிகையில் ஒரு பால்ரூம் வேண்டும் என்று கனவு கண்டனர். பிரமாண்டமான விருந்துகள், அரசு வருகைகள் போன்றவற்றுக்கு இது தேவைப்பட்டது.
அமெரிக்க வரி செலுத்துவோருக்கு ஒரு ரூபாய் கூட செலவில்லாமல், இந்த அவசியமான திட்டத்தை தொடங்கி வைக்கும் முதல் அதிபராக இருப்பதில் நான் பெருமைப்படுகிறேன்! இந்த பால்ரூம் பல தலைமுறைகளுக்கு மகிழ்ச்சியுடன் பயன்படுத்தப்படும்!" என்று அவர் மேலும் தெரிவித்தார்.
வெள்ளை மாளிகை - பால்ரூம்
சுமார் 90,000 சதுர அடி (8,300 சதுர மீட்டர்) பரப்பளவு கொண்ட இந்த பால்ரூம், தற்போது கிழக்குப் பகுதி அமைந்துள்ள இடத்தில் கட்டப்படுகிறது. வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள படங்களின்படி, நியோகிளாசிக்கல் பாணியில் தங்க மற்றும் படிக சரவிளக்குகள், தங்கமுலாம் பூசப்பட்ட கொரிந்தியன் தூண்கள், தங்க இழைப்பு வேலைப்பாடுகளுடன் கூடிய கூரை, சலவைக் கல் தளங்கள் மற்றும் தென் பகுதியைப் பார்த்தபடி வளைந்த ஜன்னல்களுடன் கூடிய மூன்று சுவர்கள் என உள் அலங்காரம் பிரமாண்டமாக இருக்கும்.
வாஷிங்டனில் அக்டோபர் 15, 2025 அன்று வெள்ளை மாளிகையில் புதிய பால்ரூம் கட்டுவதற்கு நன்கொடை அளித்தவர்களுக்கான விருந்தில் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் உரையாற்றியபோது, இதற்கான மாதிரி காட்சிப்படுத்தப்பட்டது. அக்டோபர் 20, 2025 அன்று இடிக்கும் பணிகள் தொடங்கின. அப்போது கட்டுமானப் பணியாளர்கள் மற்றும் அகழ்வாராய்ச்சிக் கருவிகள் கிழக்குப் பகுதியின் முகப்புப் பகுதிகள், கூரை, நுழைவு வாயில் மற்றும் ஜன்னல்கள் போன்றவற்றை இடிக்கும் காட்சிகள் காணப்பட்டன. முதல் பெண்மணி.. அதாவது அதிபரின் மனைவி இருக்கும் அலுவலகம் ஆகும் இது. இதுதான் தற்போது இடிக்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications