‘மதுரோவை விட பெரிய விலை’ - வெனிசுலா இடைக்கால அதிபரை பகிரங்கமாக மிரட்டிய டிரம்ப்
வெனிசுலா: வெனிசுலா நாட்டின் அதிபராக இருந்த நிகோலஸ் மதுரோ அமெரிக்கா நாட்டால் சிறை பிடிக்கப்பட்டுள்ளார். அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், வெனிசுலாவை நாங்கள் தான் நிர்வாகம் செய்வோம் என்று தடாலடியாக அறிவித்துள்ளார். இந்த சம்பவம் உலகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வெனிசுலா நாட்டின் இடைக்கால அதிபராக டெல்சி ரோட்ரிக்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார். டிரம்ப், "நாங்கள் சொல்வதை நிறைவேற்றாவிடின் மதுரோவை விட கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்" என்று டெல்லி ரோட்ரிக்ஸை பகிரங்கமாக மிரட்டியுள்ளார்.
வெனிசுலாவில் இருந்து அமெரிக்காவிற்குள் போதைப் பொருட்கள் கடத்தப்படுவதாகவும், இதற்கு அந்த நாட்டின் அதிபர் நிகோலஸ் மதுரோவுக்கு தொடர்பு இருப்பதாகவும் சொல்லி அமெரிக்கா அவரை சிறைபிடித்துள்ளது. வெனிசுலாவில் வான்வழி தாக்குதல் நடத்தி நிகோலஸ் மற்றும் அவரின் மனைவியை அமெரிக்கா சிறை பிடித்துள்ளது. இது அந்த நாட்டில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

வெனிசுலா அதிபர் சிறைபிடிப்பு
மதுரோ சிறைபிடிக்கப்பட்ட புகைப்படத்தை வெளியிட்டு, இனிமேல் வெனிசுலாவை நாங்கள் தான் நிர்வாகம் செய்வோம் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியிருந்தார். மேலும், வெனிசுலா மீது வெற்றிகரமாக தாக்குதல் நடத்தப்பட்டது. நிகோலஸ் மதுரோ நாடு கடத்தப்பட்டுள்ளார். என்றும் டிரம்ப் கூறியிருந்தார். இது வெனிசுலாவில் அசாதரண சூழலை உருவாக்கியுள்ளது.
சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் நிகோலஸ் மற்றும் அவரின் மனைவி, இன்று நியூயார்க் நீதிமன்றத்தில் ஆஜராகவுள்ளனர். இதனிடையே வெனிசுலா நாட்டின் இடைக்கால அதிபராக டெல்சி ரோட்ரிக்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார். வெனிசுலா நாட்டின் துணை அதிபராக இருந்த டெல்சி ரோட்ரிக்ஸ், அந்த நாட்டின் எண்ணெய் வளம், பொருளாதாரம் உள்ளிட்ட துறைகளை கண்காணித்து வருகிறார்.
இடைக்கால அதிபர் நியமனம்
கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் அவர் வெனிசுலா நாட்டின் துணை அதிபராக இருந்தார். 56 வயதான டெல்சி ரோட்ரிக்ஸ் வழக்கறிஞர் ஆவார். அவர் வெனிசுலா நாட்டின் முதல் பெண் துணை அதிபர் என்ற பெருமையை பெற்றவர். அமெரிக்காவின் நெருக்கடிகளை தாக்கு பிடித்து, இந்த பிரச்சனையில் இருந்து எப்படி தீர்வு கொடுக்க போகிறார் என்பதை மொத்த உலகமும் உற்றநோக்கி வருகிறது.
டிரம்பின் இந்த நடவடிக்கைக்கு பல்வேறு நாடுகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன. அமெரிக்காவில் இருந்தும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். டிரம்புக்கு பதிலளித்துள்ள வெனிசுலா, "நிகோலஸ் மதுரோவுக்கு துணை நிற்போம். இடைக்கால அதிபர் தலைமையில் ஒன்றிணைந்து அமெரிக்கா நடவடிக்கையை தவிடு பொடியாக்குவோம்." என்று கூறியிருந்தனர்.
டிரம்ப் மிரட்டல்
இந்நிலையில் டிரம்ப், "நாங்கள் சொல்வதை டெல்சி ரோட்ரிக்ஸ் கேட்க வேண்டும். எது சரியோ அதை அவர் செய்ய வேண்டும். அப்படி அவர் கேட்கவில்லை என்றால், அதற்கு அவர் மிகப்பெரிய விலையை கொடுக்க வேண்டும். அது நிகோலஸ் மதுரோவை விட பெரிதாக கூட இருக்கலாம். வெனிசுலா அருகே 15,000 வீர்ரகள் அடங்கிய அமெரிக்க படையை நிறுத்தியுள்ளோம்.
தேவைப்பட்டால் வெனிசுலா மீது புதிய ராணுவ தாக்குதல் நடத்தி டெல்சி மீது நடவடிக்கை எடுக்கப்படும்." என்று பகிரங்கரமாக மிரட்டியுள்ளார். அவரின் இந்த பேச்சு வெனிசுலாவில் பதற்றத்தை அதிகரித்துள்ளது. எனினும் தன் தந்தை மதுரோ விரைவில் வெனிசுலா திரும்புவார் என்று அவரின் மகன் நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications