வாய்ப்பில்ல ராஜா.. 'உக்ரைனை ரஷ்யாவால் வீழ்த்த முடியாது'.. எகிறியடித்த ஜோ பைடன்.. எகிறும் டென்ஷன்

அமெரிக்கா மட்டும் சுமார் ரூ.2 லட்சம் கோடி அளவுக்கு ஆயுத உதவியை செய்திருக்கிறது.

Subscribe to Oneindia Tamil

வர்ஸா: ரஷ்ய-உக்ரைன் மோதல் தொடங்கி ஓராண்டு ஆகியுள்ள நிலையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உக்ரைனுக்கு நேற்று (பிப்.22) வருகை தந்திருந்தார். இதனையடுத்து போலாந்துக்கு சென்ற அவர் அங்கு மக்கள் மத்தியில் உரையாற்றியபோது, "உக்ரைனை ரஷ்யாவால் ஒருபோதும் வீழ்த்த முடியாது" என்று கூறியுள்ளார்.

அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படையானது ரஷ்யாவை நோக்கி தொடர்ந்து விரிவடைந்து வந்த நிலையில் அந்நாட்டின் அண்டை நாடான உக்ரைனும் நேட்டோவில் இணைவதற்கு ஒப்புதல் தெரிவித்தது. சோவியத் ரஷ்யாவின் ஒரு அங்கமாக இருந்த உக்ரைன் தற்போது நேட்டோவில் இணைவதற்கு ரஷ்யா எதிர்ப்பு தெரிவித்து கடும் எச்சரிக்கை விடுத்தது. ஆனால் இந்த எச்சரிக்கையையும் மீறி உக்ரைன் நேட்டோவுடன் சொந்தம் கொண்டாடியதையடுத்து அந்நாட்டின் மீது ரஷ்யா கடந்த ஆண்டு போரை அறிவித்தது.

ஏற்கெனவே இதனை எதிர்பார்த்திருந்தாலும், போரினால் உக்ரைன் கடும் நெருக்கடியை சந்தித்தது. ஆனால், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் உக்ரைனுக்கு உதவ முன்வந்தன. அமெரிக்கா மட்டும் சுமார் ரூ.2 லட்சம் கோடி அளவுக்கு ஆயுத உதவியை செய்திருக்கிறது. இது தவிர பிரிட்டன் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளும் உதவி செய்து வருகின்றன. எனவே ரஷ்யாவால் ஒரு குறிப்பிட்ட பகுதிகளுக்கு மேல் முன்னேற முடியவில்லை.

 ஜோ பைடன்

ஜோ பைடன்

நிலைமை இவ்வாறு இருக்க ஜோ பைடன் எதிர்பாராத விதமாக உக்ரைனுக்கு விஜயம் செய்துள்ளார். இந்த எதிர்பாராத வருகை காரணமாக உக்ரைனில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டிருந்தது. அமெரிக்க பாதுகாப்புப் படையினர் கீவ் நகர் முழுவதும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். பைடன் போரில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்திவிட்டு அதிபர் மாளிகையை நோக்கி உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியுடன் நடந்து சென்றார். இந்த திடீர் விசிட் உக்ரைன் மக்களுக்கு பெரும் மகிழ்ச்சியையும், நம்பிக்கையையும் அளித்துள்ளதாக ஜெலன்ஸ்கி கூறியுள்ளார்.

 போர் பாதிப்பு

போர் பாதிப்பு

ஆனால் பைடனின் இந்நடவடிக்கை போரின் தாக்கத்தை அதிகரிக்கும் என்று சொல்லப்படுகிறது. ஏற்கெனவெ அமெரிக்கா உக்ரைனுக்கு உதவுவதால் ரஷ்யா கடும் கோபத்தில் இருக்கிறது. இந்நிலையில் பைடன் நேரடியாகவே உக்ரைனுக்கு வந்திருப்பது ரஷ்யாவின் தாக்குதலை பலவீனமாக கருதுவதாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது. இதனையடுத்து ரஷ்யா மேலும் உக்கிரமான தாக்குதலை முன்னெடுக்கும் எனவும், இது உக்ரைன் மக்களுக்குதான் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் சர்வதேச அரசியல் விமர்சகர்கள் கூறியுள்ளனர். சிறிது நேரத்திற்கு பின்னர் உக்ரைனிலிருந்து போலந்து வந்த பைடன் அங்கு மக்களிடையே உரையாற்றினார்.

 உக்ரைனை வெல்ல முடியாது

உக்ரைனை வெல்ல முடியாது

அப்போது, "ரஷ்யாவால் ஒருபோதும் உக்ரைனை வெல்ல முடியாது. மிருகத்தனத்தால் ஒருபோதும் சுதந்திரமானவர்களின் விருப்பத்தை அழித்துவிட முடியாது. உக்ரைன் தற்போது வலுவாக இருக்கிறது. அது அனைத்தையும் எதிர்த்து நிற்கிறது. குறிப்பாக உக்ரைன் சுதந்திரமாக இருக்கிறது. எனவே இந்நாட்டுக்கு மேற்கு நாடுகள் தொடர்ந்து ஆதரவளிக்க வேண்டும். நேட்டோ தனது நிலைப்பாட்டிலிருந்து பின் வாங்காது. எந்த சவாலையும் நேட்டோ சமாளிக்கும்" என்று கூறியுள்ளார். இதனையடுத்து இன்று நேட்டோவில் உறுப்பினராக உள்ள 9 கிழக்கு நாடுகளின் தலைவர்களை இன்று போலாந்து தலைநகர் வர்ஸாவில் சந்திக்கிறார்.

 சீனா

சீனா

முன்னதாக ரஷ்யாவுக்கு சீனா ஆயுத உதவிகளை செய்யும் என்று அமெரிக்கா குற்றம்சாட்டியிருந்தது. இந்த குற்றச்சாட்டுக்கு சீனா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. எப்படி இருந்தாலும், ரஷ்யா மீது தாக்குதல் நடத்தப்படும் எனில் சீனா, வடகொரியா உள்ளிட்ட நாடுகள் ஓரணியில் சேரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+