அமெரிக்க அதிபர் தேர்தல்: ஒரே மேடையில் ஹிலரி க்ளிண்டன் - டொனால்ட் ட்ரம்ப் விவாதம்!
வாஷிங்டன்(யு.எஸ்): 2016ம் ஆண்டின் அமெரிக்க அதிபர் தேர்தல் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. நவம்பர் 4ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், இரு வேட்பாளர்களும் பங்கேற்கும் நேரடி விவாத நிகழ்ச்சிகள் செப்டம்பர் 7ம் தேதி முதல் ஆரம்பமாகிறது.
இந்த தேர்தலில் முதன் முறையாக என்பிசி தொலைக்காட்சியும் , ஈராக் - ஆப்கானிஸ்தான் போரில் பங்கேற்ற முன்னாள் ராணுவ வீரர்களும் இணைந்து ' கமாண்டர் இன் சீஃப் ஃபோரம்' என்ற பெயரில் நேரடி விவாதம் நடைபெற உள்ளது, முன்னாள் மற்றும் தற்போது பணியில் இருக்கும் ராணுவ வீரர்கள் மட்டுமே பார்வையாளர்களாக கலந்து கொண்டு அதிபர் வேட்பாளர்களிடம் கேள்விகள் எழுப்புவார்கள்.
என்பிசி தொலைக்காட்சியில் நேரடி ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சியில் ஹிலரி க்ளிண்டனும், டொனால்ட் ட்ரம்பும் பங்கேற்கிறார்கள்.

தேசிய பாதுகாப்பு, ராணுவ விவகாரங்கள், முன்னாள் வீரர்கள் நலம் சார்ந்த விசயங்கள் ஆகியவற்றை ஒட்டிய கேள்விகள் மட்டுமே இந் நிகழ்ச்சியில் கேட்கப்படும். ஹிலரிக்கும், ட்ரம்புக்கும் அவரவர் ராணுவ விவகார கொள்கைகளை தெரியப்படுத்தும் வாய்ப்பாக இது அமையும்.
அடுத்ததாக செப்டம்பர் 26ம் தேதி முதல் அதிபர் வேட்பாளர் விவாதம் நடைபெற உள்ளது. அக்டோபர் 4ம் தேதி துணை அதிபர் வேட்பாளர் விவாதமும், அக்டோபர் 9 மற்றும் 19ம் தேதி மீண்டும் அதிபர் வேட்பாளர்கள் விவாதமும் நடைபெறுகிறது.
தற்போதைய நிலவரப்படி கடும் போட்டி மாநிலங்களான ஃப்ளோரிடா,அயோவா, ஒஹாயோ இல்லாமலே, ஹிலரி க்ளிண்டன் வெற்றி பெறுவார் என என்பிசி தொலைக்காட்சி, கணித்துள்ளது.
-
ஈரானின் முதுகெலும்பில் தாக்கிய CENTCOM.. டிரம்ப் போட்டுக்கொடுத்த பிளான்..? கச்சிதமாக முடித்த US Army! -
Kuwait மீது திடீர் தாக்குதல் நடத்திய ஈரான்.. திரும்பும் பக்கமெல்லாம் ஏவுகணை சந்தம்.. பீதியில் மக்கள்! -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications