அமெரிக்காவில் மேலும் 1,88,966 பேருக்கு கொரோனா பாதிப்பு; இங்கிலாந்தில் 46,169 பேருக்கு தொற்று உறுதி
வாஷிங்டன்/ லண்டன்: அமெரிக்காவில் ஒரேநாளில் 1,88,966 பேருக்கும் இங்கிலாந்தில் 46,169 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
உலக நாடுகளில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கையானது 9,12,75,970 ஆக அதிகரித்துள்ளது. உலகின் மொத்த கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 19,51,933.

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தோர் எண்ணிக்கை 6,52,16,148. உலகிலேயே அமெரிக்காவில்தான் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. ஒரேநாளில் 1,88,966 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. மேலும் 1,752 பேர் கொரோனாவுக்கு பலியாகினர்.
அமெரிக்காவை தொடர்ந்து இங்கிலாந்தில் 46,169 பேர் கொரோனா பாதிப்புக்குள்ளாகினர். இருப்பினும் மொத்த கொரோனா பாதிப்பில் உலக அளவில் இந்தியாதான் 2-வது இடத்தில் உள்ளது.
அதேநேரத்தில் இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை வெகு கணிசமாக குறைந்தும் உள்ளது. இந்தியாவில் மொத்தம் 12,448 பேருக்கு மட்டுமே கொரோனா உறுதியானது. மேலும் திங்கள்கிழமையன்று 166 பேர் உயிரிழந்தும் உள்ளனர்.
பிரேசிலில் 28,043; ஸ்பெயினில் 24,631; ரஷ்யாவில் 23,315 பேருக்கும் புதியதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தென்னாப்பிரிக்காவில் 15,046 பேருக்கும் கொலம்பியாவில் 15,003 பேருக்கும் கொரோனா தொற்று உறுதியானது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஜெர்மனியில் ஒரே நாளில் 663 பேரும் இங்கிலாந்தில் 529 பேரும் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். மெக்சிகோவிலும் 502 பேர் ஒரே நாளில் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர்.
-
இந்தியர்களுக்கு நிம்மதி! இனி அமெரிக்காவை விட்டு வெளியேற தேவையில்லை! கிரீன் கார்டு விதிகளில் விளக்கம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications