பின்வாங்கிய அமெரிக்கா.. சீனாவின் வழிக்கு வந்த டிரம்ப்! கப்பல் வணிகத்தில் புதிய திருப்பம்
வாஷிங்டன்: சீன தயாரிப்பு கப்பல்களுக்கு அமெரிக்கா அதிக கட்டணத்தை விதித்திருந்தது. இந்த கட்டணம் காரணமாக கப்பல் போக்குவரத்து சர்வதேச அளவில் பாதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், சீன கப்பலுக்கான கட்டணத்தை அமெரிக்கா எளிமைப்படுத்தி இருக்கிறது.
இந்த கட்டண திருத்தம், சீனாவுக்கு சாதகமாக மாறியிருக்கிறது. கடல்சார் வணிகத்தில் இன்றும் சீனாதான் டாப்பில் இருக்கிறது. எனவே அதை பகைத்துக்கொள்ள கூடாது என்பதற்காக டிரம்ப் தனது கட்டணங்களை குறைத்திருக்கிறார் என்று பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.

சீனாவின் கப்பல்கள் ஒவ்வொன்றும் அமெரிக்க துறைமுகத்தில் நுழையும்போது சுமார் 1.5 மில்லியன் அமெரிக்க டாலர் வரை கட்டணம் செலுத்த வேண்டும் என்று டிரம்ப் உத்தரவிட்டிருந்தார். சீன கப்பல் கட்டுமான துறைக்கு மாற்றாக அமெரிக்க கப்பல் கட்டுமான துறையை வளர்த்தெடுக்க வேண்டும் என்பதே இதன் நோக்கம். ஆனால் உண்மையில் சீனாவை பழிதீர்க்க வேண்டும் என்பதால்தான் இப்படியான கட்டணங்கள் விதிக்கப்பட்டிருந்தது என்பது உலகம் அறிந்த விஷயம்.
தற்போது வரி பிரச்சனையோடு சேர்த்து, கட்டண உயர்வும் அமெரிக்காவுக்கு எதிராக திரும்பியது. காரணம், உலக வர்த்தகத்தில் 80% கடல் வழியாகத்தான் நடைபெறுகிறது. கடல் வணிகத்திற்கு கப்பல்கள் தேவை. உலக அளவில் அதிக அளவில் கப்பல்களை கட்டுவது சீனாதான். அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளை காட்டிலும் சீனா அதிக எண்ணிக்கையில் கப்பல்களை உருவாக்குகிறது. இந்த கப்பல்கள் தரமானதாகவும், விலையும் ஓரளவு நியாயமானதாகவும் இருப்பதால் சீன கப்பல்களுக்கு மவுசு அதிகம்.
கப்பல்கள் மட்டுமல்ல, கப்பல்களிலிருந்து பொருட்களை இறக்க பயன்படும் கிரேன்கள், பொருட்களை கொண்டு செல்ல பயன்படும் கன்டெய்னர்கள், அதன் சேஸ் பார்ட்கள் என அனைத்தும் சீனாவில்தான் உற்பத்தி செய்யப்படுகிறது. துறைமுக கிரேன்களில் 100 சதவிகிதம் சீனாவின் ஆதிக்கம் இருக்கிறது.
யோசித்து பாருங்கள் ஆண்டுக்கு 1700 கப்பல்களுக்கும் அதிகமாக உற்பத்தி செய்யும் சீனாவை பகைத்துக்கொள்வது முட்டாள்தனமாகத்தான் தோன்றும். ஏனெனில், இன்றுவரை கடல் போக்குவரத்தில் ஏற்றுமதிக்கு என அமெரிக்க கப்பல்கள் 1 சதவிகிதம் கூட பயன்படுத்தப்படுவதில்லை. அடுத்த 4 ஆண்டுகளில் கடல் போக்குவரத்தில் ஏற்றுமதிக்கு அமெரிக்க கப்பல்களை 1 சதவிகிதம் அளவுக்கு உயர்த்த டிரம்ப் முடிவெடுத்துள்ளார். இது 2035க்குள் 4%, 2047க்குள் 15% ஆக அதிகரிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டிருக்கிறார்.
எல்லாம் ஓகேதான் ஆனால் அதுவரை ஏற்றுமதிக்கு என்ன செய்வது? எனவேதான் சீன கப்பல்களுக்கு விதிக்கப்பட்ட கட்டணங்கள் குறைக்கப்பட்டிருக்கின்றன.
-
கொத்தடிமை முறையை ஒழிக்க இந்தியா தவறிவிட்டதாம்.. கூடுதல் வரிக்கு காரணம் சொல்லும் டிரம்ப்! -
நெதன்யாகுவை திட்டியது உண்மைதான்.. லெபனான் விவகாரத்தில் நடந்தது என்ன? ஓபனாக பேசிய டிரம்ப்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி












Click it and Unblock the Notifications