எம்.ஹெச்.17 தாக்குதல்: தீவிரவாதிகளுக்கு ரஷ்யா தான் ஏவுகணையை அளித்துள்ளது- அமெரிக்கா
வாஷிங்டன்: மலேசிய விமானத்தை சுட்டுத் தள்ள பயன்படுத்தப்பட்ட ஏவுகணையை ரஷ்யா தான் தீவிரவாதிகளுக்கு அளித்துள்ளது என்று அமெரிக்க வெளியுறவுச் செயலாளர் ஜான் கெர்ரி தெரிவித்துள்ளார்.
நெதர்லாந்து தலைநகர் ஆம்ஸ்டர்டாமில் இருந்து 298 பேருடன் மலேசிய தலைநகர் கோலாலம்பூர் சென்ற மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் எம்.ஹெச். 17 உக்ரைனில் ரஷ்யா எல்லை அருகே பக் ஏவுகணை வீசித் தாக்கப்பட்டது. இதில் விமானத்தில் இருந்த அனைவரும் பலியாகினர்.
விமானத்தை ரஷ்ய ஆதரவு தீவிரவாதிகள் தாக்கியதாக உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் அதற்கான ஆதாரங்களும் தங்களிடம் உள்ளது என்று கூறியுள்ளார்கள்.

அமெரிக்கா
மலேசிய விமானத்தை தாக்கப் பயன்படுத்தப்பட்ட ஏவுகணை மற்றும் அதை விண்ணில் ஏவுவதற்கான கருவி ஆகியவற்றை ரஷ்யா தான் தனது ஆதரவுப்படை தீவிரவாதிகளுக்கு அளித்துள்ளது என்று அமெரிக்க வெளியுறவுத் துறை செயலாளர் ஜான் கெர்ரி தெரிவித்துள்ளார்.

ஜூன் மாதம்
ஜூன் மாதம் 150 வாகனங்களில் ஆயுதங்கள், டேங்குகள், ஏவுகணைகளை ஏவும் கருவிகள் ஆகியவற்றை ரஷ்யா உக்ரைனில் உள்ள தனது ஆதரவுப்படைக்கு அனுப்பி வைத்ததை அமெரிக்கா பார்த்ததாக கெர்ரி தெரிவித்துள்ளார்.

ரஷ்யா
விமானத்தை தாக்கிய பிறகு ஏவுகணைகளை ஏவும் கருவிகளை ரஷ்ய எல்லைக்கு கொண்டு செல்ல முயற்சி நடந்ததாக அமெரிக்க அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

மறுப்பு
மலேசிய விமானத்தை தாங்கள் தாக்கவில்லை என்று ரஷ்யா மறுத்துள்ளது. மேலும் உக்ரைன் ராணுவம் தான் விமானத்தை தாக்கியதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications