உயிர் பயத்தை காட்டிய ஹமாஸ்.. இஸ்ரேல் பிரதமருடன் பதுங்கு குழிக்குள் ஓடி ஒளிந்த அமெரிக்க செயலாளர்-ஷாக்
இஸ்ரேல்: போருக்கு நடுவே இஸ்ரேல் சென்ற அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் ஆண்டனி பிளிங்கன் மற்றும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஆகியோர் சந்தித்த நிலையில் இருவரும் உயிரை காப்பாற்றி கொள்ள பதுங்குக்குழிக்குள் ஓடி ஒளிந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது
பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் செயல்பட்டு வரும் ஹமாஸ் தீவிரவாதிகளுக்கும், இஸ்ரேலுக்கும் இடையே போர் தொடங்கி நடந்து வருகிறது. கடந்த 7 ம் தேதி தொடங்கிய இந்த போர் இன்று 11வது நாளாக தொடர்ந்து வருகிறது.

தற்போது இஸ்ரேல் தனது தாக்குதலை அதிகரித்துள்ளது. காசா நகரை முற்றுகையிட்டு தாக்குதலை தொடங்கி உள்ளது. தற்போது வரை இந்த போரில் இருதரப்பையும் சேர்த்து 3 ஆயிரம் பேர் வரை பலியாகி உள்ளனர். மேலும் 8 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளனர்.
மேலும் காசாவை முற்றுலுமாக கைப்பற்ற இஸ்ரேல் துடிக்கிறது. இதனால் இந்த போர் இன்னும் தீவிரமாகும் என அஞ்சப்படுகிறது. இது இஸ்ரேல்-ஹமாஸ் இடையேயான போர் தீவிரமடைவதை தடுக்க உலக நாடுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் ஆன்டனி பிளிங்கன் இஸ்ரேல் உள்பட பல நாடுகளுக்கு சென்று அந்த நாட்டு தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். போரை கைவிட்டு சுமூகமாக பிரச்சனைக்கு தீர்வு காண வலியுறுத்தி வருகிறார்.
இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா செயல்பட்டு வந்தாலும் கூட மனிதாபிமான அடிப்படையிலும், மக்கள் பலியாவதை தடுப்பதிலும் அந்த நாடு ஆர்வம் காட்டி வருகிறது. இந்நிலையில் தான் அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் ஆண்டனி பிளிங்கன் இஸ்ரேலுக்கு சென்றார். நேற்று டெல் அலிவ் நகரில் ஆண்டனி பிளிங்கன் மற்றும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஆகியோர் சந்தித்து பேசினர்.
இந்த வேளையில் திடீரென்று வான்வழித் தாக்குதலை எச்சரிக்கும் வகையிலான சைரன்கள் ஒலித்தன. ஹமாஸ் வான்வெளி தாக்குதல் நடத்துவதை எச்சரிக்கும் வகையில் இந்த சைரன்கள் சத்தம் எழுப்பின. இதையடுத்து ஆண்டனி பிளிங்கன், நெதன்யாகு ஆகியோர் சந்திப்பை கைவிட்டு உயிரை தற்காத்து கொள்ள பதுங்கு குழிக்குள் சென்றனர். அவர்களுடன் அதிகாரிகளும் பதுங்கு குழிக்குள் சென்று ஒளிந்து கொண்டனர்.
சுமார் 5 நிமிடங்கள் வரை அவர்கள் பதுங்கு குழியிலேயே இருந்தனர். இந்த வேளையில் எந்த வகையான வான்வெளி தாக்குதலும் நடக்கவில்லை. இதையடுத்து அவர்கள் அங்கிருந்து வெளியேறி வந்தனர். அதன்பிறகு மீண்டும் இருவரும் சந்திப்பை தொடர்ந்தனர். அதன்பிறகு ஆண்டனி பிளிங்கன், தெதன்யாகு ஆகியோர் போருக்கான கட்டளை மையத்துக்கு சென்று பார்வையிட்டனர். இதற்கிடையே இன்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இஸ்ரேல் செல்ல உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications