அமெரிக்கா களமிறங்கினால்.. ஈரானை தாக்கும் முதல் ஏவுகணை எங்கிருந்து வரும் தெரியுமா! முழு விவரம்

Subscribe to Oneindia Tamil

தெஹ்ரான்: இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா நேரடியாக களமிறங்கினால், ஈரான் எங்கிருந்து தாக்கப்படும் என்று கேள்வி எழுந்திருக்கிறது. மத்திய கிழக்கில் பல இடங்களில் அமெரிக்காவின் ராணுவ தளம் இருந்தாலும், எல்லா இடங்களிலிருந்தும் ஈரான் தாக்கப்படாது. சில குறிப்பிட்ட இடங்களிலிருந்து தாக்குதல் நடக்கலாம்.

அதாவது, சவுதி அரேபியா மற்றும் ஜோர்டான், ஈராக், ஐக்கிய அரபு அமீரகம் (UAE), பஹ்ரைன், குவைத், கத்தார் உள்ளிட்ட இடங்களில் அமெரிக்காவின் ராணுவ தங்கள் இருக்கின்றன.

US Iran Israel

முக்கியமான ராணுவ தளங்கள்

கத்தார் - அல் உதேய்த் விமானப்படைத் தளம்
குவைத் - கேம்ப் அரிப்ஜான்
பஹ்ரைன் - அமெரிக்க கடற்படை
ஐக்கிய அரபு அமீரகம் (UAE) - அல் தஃப்ரா விமானப்படைத் தளம்

முதல் ஏவுகணை எங்கிருந்து வரும்?

இவையெல்லாம் மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்களில் மிக முக்கியமானவையாகும். ஒருவேளை அமெரிக்கா நேரடியாக களத்தில் இறங்குகிறது எனில், கத்தாரின் அல் உதேய்த் விமானப்படைத் தளத்திலிருந்துதான் முதல் தாக்குதல் இருக்கும். கத்தாரில் உள்ள அல் உதேய்த் விமானப்படைத் தளத்திலிருந்து ஈரானின் தலைநகரான தெஹ்ரானுக்கு சுமார் 1,145 கிலோமீட்டர் தூரம் உள்ளது. ஜெட் விமானங்கள் மூலம் இந்த தூரத்தை கடக்க சுமார் 2 மணி நேரம் ஆகும்.

இந்த விமானப்படைத் தளம்தான் இருப்பதிலேயே மிகப்பெரியது. ஏராளமான போர் விமானங்கள், ட்ரோன்கள் இங்கு உள்ளன. மத்திய கிழக்கு பகுதிக்கான அமெரிக்க ராணுவத்தின் தலைமையிடமே இதுதான். எனவே இங்கிருந்துதான் மிகப்பெரிய தாக்குதல்கள் ஈரான் மீது நடக்கும்.

இரண்டாவது தாக்குதல்

இரண்டாவதாக குவைத் - கேம்ப் அரிப்ஜானிலிருந்து ஈரானுக்கு சுமார் 1,218 கிலோமீட்டர் தூரம் உள்ளது. ஜெட் விமானங்கள் மணிக்கு 800 முதல் 900 கிலோமீட்டர் வேகத்தில் பறக்கும். எனவே, சுமார் 1,218 கிலோமீட்டர் தூரம் உள்ள ஈரானுக்குச் செல்ல சுமார் 1 மணி நேரம் 20 நிமிடங்கள் ஆகும். இங்கிருந்து இரண்டாவது தாக்குதல் நடக்கும்.

மூன்றாவது தாக்குதல்

மூன்றாவதாக பஹ்ரைன் கடற்படை தளத்திலிருந்து, ஈரான் சுமார் 1,647 கி.மீ தொலைவில் இருக்கிறது. இந்த தூரத்தை அமெரிக்க விமானங்கள் அடைய 2 மணி நேரம் ஆகும். இங்கிருந்து மூன்றாவது தாக்குதல் நடக்கும். பஹ்ரைனில் உள்ள அமெரிக்க கடற்படை தளம், 5ம் தலைமுறை விமானங்களை கொண்டிருக்கிறது. வளைகுடா பகுதியில் உள்ள போர்க்கப்பல்கள் இங்கிருந்துதான் செயல்படுகின்றன.

4வது தாக்குதல் தொடங்கும் இடம்

4வது தாக்குதல் தொடங்கும் இடம், ஐக்கிய அரபு அமீரகத்தின் அல் தஃப்ரா விமானப்படைத் தளம்தான். இங்கிருந்து ஈரான் 2,227 கி.மீ தொலைவில் இருக்கிறது. 2.30 மணி நேரத்தில் அமெரிக்க ராணுவ விமானங்கள் ஈரானை தொடும். அல் தஃப்ரா விமானப்படைத் தளம், உளவு தகவல்களை சேகரிக்கும் தலைமையிடமாக கருதப்படுகிறது. மட்டுமல்லாது இங்கிருந்துதான் அதிநவீன F-22 Raptor போர் விமானங்கள் இயக்கப்படுகின்றன.

களத்தில் இறங்கும் போர்க்கப்பல்கள்

இது தவிர்த்து பாரசீக வளைகுடா மற்றும் ஓமான் வளைகுடா பகுதியில் அமெரிக்க கடற்படையின் விமானம் தாங்கி போர் கப்பல்கள், நீர்மூழ்கி கப்பல்கள் நிலைநிறுத்தப்பட்டிருக்கின்றன. இந்த கப்பல்களில் டோமஹாக் (Tomahawk) குரூஸ் ஏவுகணைகள் உள்ளன. இவை ஈரானின் வான் பாதுகாப்பை மீறி, உள்ளே சென்று இலக்கை தாக்கும் திறன் கொண்டது.

அமெரிக்காவின் மிக முக்கிய ராணுவ தளம்

அமெரிக்காவின் மிக முக்கியமான ராணுவ தளங்களில் ஒன்று டியாகோ கார்சியா (Diego Garcia). இது ஈரானிலிருந்து சுமார் 4,000 தொலைவில் இந்திய பெருங்கடலில் இருக்கிறது. இங்கிருந்து போர் விமானங்கள் புறப்பட்டால் ஏறத்தாழ 4.30 மணி நேரம் ஆகும் ஈரானை அடைய. ஆனால் இங்குதான் B-2 Spirit எனும் மோசமான விமானம் இருக்கிறது. இந்த விமானத்திலிருந்து மட்டும்தான் BU-57 எனும் குண்டை வீச முடியும். இந்த வகை குண்டு நிச்சயம் ஈரானின் அணு ஆயுத தளத்தை மொத்தமாக நாசமாக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+