அமெரிக்காவின் தாக்குதலை தடுக்க தவறிய ஈரான்! B-2 விமானங்களை இடைமறிக்க முடியாதா?

Subscribe to Oneindia Tamil

தெஹ்ரான்: ஈரானின் அணுசக்தி மையங்கள் மீது இன்று அதிகாலை அமெரிக்கா நேரடியான தாக்குதலை நடத்தியிருக்கிறது. இதற்கு B-2 வகை விமானங்களை அமெரிக்கா பயன்படுத்தியுள்ளது. இதனை இடைமறித்து தடுத்திருந்தால், தாக்குதலையும் தடுத்திருக்க முடியும். ஆனால், இதுதான் சவாலான விஷயம். இருப்பினும் சாத்தியமில்லாது கிடையாது.

B-2 விமானங்கள் பழைய மாடல்கள். வளர்ந்து வரும் டெக்னாலஜிக்கு முன்னால் இதனால் தாக்குபிடிக்க முடியாது. நிச்சயம் இதை கண்டுபிடித்து தாக்க முடியும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

US Iran Israel

அதாவது, இந்த விமானத்தின் சிறப்பு 'ஸ்டெல்த்' தொழில்நுட்பம்தான். ரேடாரில் சிக்காமல் செல்வதைதான் இப்படி சொல்வார்கள். பூமியிலிருந்து அதிக அதிர்வெண் கொண்ட கதிர்கள் வானத்தை நோக்கி அனுப்பப்படும். வானில் எந்த பொருளும் இல்லையெனில் இந்த கதிர்கள் திரும்பி வராது. ஆனால், விமானம் போன்ற பொருட்கள் இருக்கிறது எனில், அதில் பட்டு திரும்ப வரும். இப்படியாக விமானத்தை கண்டுபிடிக்க முடியும். ஆனால், B-2 விமானங்களில் கதிர்களை உறுஞ்சும் டெக்னாலஜி இருக்கிறது. எனவே, விமானம் இருப்பதை கண்டுபிடிக்கவே முடியாது.

இருப்பினும் இதில் சில சவால்கள் இருக்கின்றன. கதிர்களை உறிஞ்சும் டெக்னாலஜியை பராமரிக்க அதிக செலவு செய்ய வேண்டும். ஒப்பீட்டளவில் B-2 ஒரு பழைய ஆயுதம். குறைந்த அதிர்வெண் கொண்ட ராடார் மற்றும் அகச்சிவப்பு கண்காணிப்பு போன்ற வளர்ந்து வரும் டெக்னாலஜியை வைத்து இதை கண்டுபிடித்துவிட முடியும்.

தரையிறங்கும்போது அல்லது புறப்படும்போது, விமானம் அதிக உயரத்தில் இருந்து குறைந்த உயரத்திற்கு வருகிறது. இந்த நேரத்தில் அது ரேடாரில் ஓரளவு புலப்படக்கூடியதாக இருக்கலாம். மேலும், எரிபொருள் நிரப்புதல் அல்லது ஆயுதங்களை ஏற்றும் சமயங்களிலும் இதன் ஸ்டெல்த் திறன் குறையலாம். இந்த நேரங்களில் விமானங்களை அடையாளம் காண முடியும்.

B-2 விமானங்களின் வடிவமைப்பு, பொதுவாக உயர் அதிர்வெண் ரேடார் அலைகளை சிதறடிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. ஆனால், குறைந்த அதிர்வெண் ரேடார் அலைகள் நீண்ட அலைநீளம் கொண்டவை. இந்த அலை நீளங்கள் விமானத்தின் ஒட்டுமொத்த வடிவத்துடன் பொருந்தி போகும். எனவே இந்த அலைகள் முழுமையாக சிதறாமல், எதிரொலியை ஏற்படுத்தக்கூடும். இதனால், B-2 விமானங்களை முழுமையாக மறைக்க முடியாது. ரஷ்யாவின் Nebo-M போன்ற சில ரேடார் அமைப்புகள் இந்த திறன்களை கொண்டிருக்கின்றன.

பெரும்பாலான ரேடார் அமைப்புகள் ஒரு சிக்னலை அனுப்பி, அதே இடத்தில் இருந்து எதிரொலியைப் பெறும். ஆனால், மல்டிஸ்டாடிக் ரேடார்கள் வெவ்வேறு இடங்களில் இருந்து சிக்னல்களை அனுப்பி வெவ்வேறு இடங்களில் இருந்து எதிரொலிகளைப் பெறும். இது விமானத்தை பல கோணங்களில் இருந்து பார்க்க உதவுகிறது. இதனால், B-2 போன் விமானங்கள் ஒரு குறிப்பிட்ட கோணத்தில் இருந்து மறைந்து இருந்தாலும், மற்ற கோணங்களில் இருந்து ரேடாரில் பிடிபட வாய்ப்புள்ளது.

இதையெல்லாம் வைத்து B-2 விமானங்களை எளிதாக அடையாளம் கண்டுக்கொள்ள முடியும். ஈரானிடம் இன்று இந்த டெக்னாலஜி இல்லாமல் இருக்கலாம். ஆனால், ரஷ்யாவின் உதவியுடன் விரையில் இதை ஈரான் பெற வாய்ப்பு இருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+