இந்த "ஆறு" விஷயங்கள்.. சின்ன மேட்டர் தான்.. ஆனால் உயிரே கூட போகலாம் கவனம்! எச்சரிக்கும் வல்லுநர்
கொலராடோ: நமது வாழ்க்கையில் நல்ல உடல்நிலையில் இருக்கும் நபர்கள் கூட திடீரென உயிரிழக்கும் சம்பவங்களை நாம் பார்த்திருக்கிறோம். பிட்டாக எந்தவொரு இணை நோயும் இல்லாமல் இருப்பார். ஆனால், ஒரே நொடியில் ஏற்படும் எதிர்பாராத விபத்துகளால் மோசமான சம்பவங்கள் ஏற்படலாம். இதற்கிடையே பிரேதப் பரிசோதனை வல்லுநர் ஒருவர் உயிரைப் பறிக்கக்கூடிய 6 விஷயங்களைப் பட்டியலிட்டுள்ளார்.
நமது இந்த வாழ்க்கையில் அடுத்த நொடி என்ன நடக்கும் என்பது யாருக்கும் தெரியாது. நல்ல உடல்நிலையில் இருப்போர் கூட ஒரே நொடியில் சரிந்து உயிரிழக்கும் பல சம்பவங்களை நாம் பார்த்துள்ளோம். இதற்கிடையே அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு பிரேதப் பரிசோதனை வல்லுநர் எவை எல்லாம் உயிரிழப்பிற்குக் காரணமாக அமையலாம் என்பது குறித்து சில கருத்துகளைப் பகிர்ந்துள்ளார்.

ஸ்டீக் இறைச்சி
அதில் அவர் குறிப்பாக வயதானோர் ஸ்டீக் இறைச்சியைத் தவிர்க்குமாறு எச்சரித்துள்ளார். ஸ்டீக் சாப்பிடும்போது, அது தொண்டையில் சிக்கி உயிரிழக்கும் ஆபத்து இருப்பதால் அதைச் சாப்பிட வேண்டாம் என கூறியிருக்கிறார். இதுபோல இறைச்சி தொண்டையில் சிக்கி உயிரிழந்த பலரைப் பார்த்திருப்பதாக அவர் கூறுகிறார். வயதானவர்களுக்குச் சரியாக மென்று விழுங்குவதில் சிரமம் இருப்பதால் இது போன்ற அபாயங்கள் ஏற்படுவதாக அவர் கூறுகிறார். இது உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தும் என்கிறார்.
ஏன் ஆபத்து
இது குறித்து அவர் மேலும் கூறுகையில், "வயதானவர்களால் இறைச்சியை முறையாக மென்று விழுங்க முடியாது. இதனால் தொண்டையில் சிக்கி இறந்து போக நேரிடும். அது அப்படியே உணவுக் குழாயில் சிக்கியிருக்கும். பலர் இதுபோல உயிரிழந்து நான் பார்த்து இருக்கிறேன். மேலும் வன்முறையில் ஈடுபடுவதையும் தவிர்க்க வேண்டும். வன்முறை மோதல்களில் ஈடுபட்டு இறந்த பல நபர்களை நான் பார்த்துள்ளேன்.
இதை சொல்லாதீங்க
குறிப்பாக, மற்றவர்களைப் பார்த்து முடிந்தால் என்னைக் கொலை செய்.. முடிந்தால் என்னைச் சுடு என்பது போன்ற தூண்டிவிடும் வார்த்தைகளைப் பேசவே கூடாது. ஏனெனில் அந்த வார்த்தைகளால் அவர் விபரீதமாக எதாவது சொன்னால் உயிரே போய்விடும். அதுபோலவும் கூட பல சம்பவங்களை நான் பார்த்துள்ளேன். பல நோயாளிகள் அசாதாரணமான சூழ்நிலைகளில் இறந்துள்ளனர். புல்டோசர் மோதி, பாராசூட் விபத்து, விமான விபத்து, சுரங்கப் பேரழிவு மற்றும் தலை துண்டிக்கப்பட்ட சம்பவங்கள் எனப் பல வகையில் உயிரிழந்தோரைப் பார்த்து இருக்கிறேன்" என்றார்.
6 முக்கியமான மேட்டர்
மேலும் அவர் வாழ்வில் கவனமாக இருக்க வேண்டிய 6 விஷயங்கள் பட்டியலிட்டுள்ளார். இது சின்ன விஷயங்கள் போலத் தெரிந்தாலும் கூட இதனால் உயிரிழப்பு ஏற்படும் ஆபத்து இருப்பதாக அவர் எச்சரித்துள்ளார்.
- தூண்டும் சொற்களைத் தவிர்க்கவும்
- வயதான காலத்தில் ஸ்டீக் சாப்பிட வேண்டாம்
- துணி துவைக்கும் இயந்திரத்தில் சாய வேண்டாம்
- மலிவான கார் ஜாக்களை நம்ப வேண்டாம்
- இயந்திரத்தின் அருகில் தளர்வான ஆடைகளை அணிய வேண்டாம்
- பைக்கில் செல்லும் போது ஹெல்மெட் அணிய வேண்டும்
எச்சரிக்கை
அவர் மேலும் கூறுகையில், "நான் பல்வேறு விஷயங்களைப் பார்த்து இருக்கிறேன். ஆனாலும் ஒவ்வொரு முறையும் நான் பிரேதப் பரிசோதனை செய்யும்போது எதிர்பார்க்காத விஷயங்களைப் பார்க்கிறேன். சில சமயம் அதைப் பார்க்கும் போது உடைந்துவிடுவேன். இப்படிக் கூட மிகவும் நடக்குமா என்றும் தோன்ரும்" என்றார். உடையக்கூடியது, அதே நேரத்தில் மிகவும் நெகிழ்ச்சியானது... இது மனதைக் கவரும் விஷயமாக இருக்கிறது" என்றார்.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications