அமெரிக்காவில் கணக்கு ஆசிரியையை அடித்துக் கொன்ற 14 வயது மாணவர்

அமெரிக்காவின் மசாசுசெட்ஸ் மாநிலம் எஸ்ஸெக்ஸ் கவுன்ட்டியில் உள்ள டான்வர்ஸில் இருக்கும் உயர் நிலைப்பள்ளியில் கணக்கு ஆசிரியையாக இருந்தவர் கொலீன் ரிட்ஸர்(24). அவர் நேற்று பள்ளி முடிந்து வீடு திரும்பவில்லை. மேலும் செல்போனில் அழைத்தால் எடுத்து பேசவும் இல்லை. இதையடுத்து அவரை காணவில்லை என்று டான்வர்ஸ் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது.
முன்னதாக அந்த பள்ளியில் படிக்கும் பிலிப் சிஸ்ம்(14) என்ற மாணவனை காணவில்லை என்று நேற்று மாலை போலீசில் புகார் கொடுக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் பிலிப்பை காணவில்லை என்று ட்விட்டர் மற்றும் பேஸ்புக்கில் செய்தி வெளியிட்டு அவரை யாராவது பார்த்தால் தங்களுக்கு தகவல் கொடுக்குமாறு தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் டான்வர்ஸ் அருகில் உள்ள டாப்ஸ்ஃபீல்டில் பிசியாக இருக்கும் சாலையில் நேற்று இரவு 12.30 மணிக்கு பிலிப் நடந்து செல்வதை போலீசார் பார்த்து அவரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.
இதற்கிடையே பள்ளியின் இரண்டாவது மாடியில் உள்ள கழிவறையில் ரத்தக் கறை படிந்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் பள்ளிக்கு பின்னால் இருக்கும் காட்டுப் பகுதியில் கொலீன் பிணமாகக் கிடந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து சிறுவனை விசாரித்து போலீசார் அவரை கைது செய்தனர்.
பிலிப் கொலீனை அடித்துக் கொலை செய்துள்ளார். சிறுவன் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் அவர் மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications