வரி போட்டு முடக்கிய.. அமெரிக்காவுக்கு ஷாக் கொடுத்த இந்தியா! சீனாவுடன் பலமடையும் வர்த்தக உறவு
டெல்லி: இந்தியாவுக்கு அதிக வரியை போட்டு, வர்த்தகத்தில் பாதிப்பை ஏற்படுத்தியிருந்தது அமெரிக்கா. இந்நிலையில் சீனாவுடன் புதிய வர்த்தக பாதையை உருவாக்கி, அமெரிக்காவுக்கு இந்தியா ஷாக் கொடுத்திருக்கிறது. கடந்த ஏப்ரல் மாதம் முதல் இந்தியாவிலிருந்து சீனாவுக்கான ஏற்றுமதி தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதன் மூலம் அமெரிக்காவின் வரி நெருக்கடியை இந்தியா சமாளித்து வருகிறது.
கடந்த செப்டம்பர் மாதம் சீனாவுக்கான ஏற்றுமதி, அதற்கு முந்தைய மாதத்தை விட 33% அதிகரித்தது. அதேபோல அக்டோபரில் 42% அதிகரித்தது. செப்டம்பர் மாத ஏற்றுமதி மதிப்பு $1.46 பில்லியனாக உயர்ந்துள்ளது, இது கடந்த ஆண்டு இதே மாதத்தில் $1.09 பில்லியனாக இருந்தது. ஏப்ரல் முதல் அக்டோபர் வரையிலான காலகட்டத்தில், இந்தியா $10 பில்லியனுக்கும் அதிகமான மதிப்புள்ள பொருட்களை சீனாவுக்கு ஏற்றுமதி செய்துள்ளது. இது 2024 ஆம் ஆண்டின் இதே காலகட்டத்தை விட 25 சதவீதம் அதிகமாகும்.

சீனா-இந்தியா உறவு
முன்னதாக சீன இறக்குமதியாளர்கள், முழுக்க முழுக்க அமெரிக்காவை மட்டுமே நம்பி இருந்தார்கள். ஆனால், அமெரிக்கா 10 சதவீத லிபரேஷன் டே வரி, 25 சதவீத பரஸ்பர வரி மற்றும் ரஷ்ய எண்ணெயை வாங்குகிறார்கள் என்று கூறி கூடுதலாக 25 சதவீத அபராதம் விதித்ததால், இறக்குமதிக்கு இந்தியா போன்ற நாடுகளை சீன இறக்குமதியாளர்கள் நாட தொடங்கியுள்ளனர். எனவே சீனாவுக்கான பெட்ரோலியப் பொருட்கள் ஏற்றுமதி இரட்டிப்பாகியுள்ளது. கடந்த ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான காலத்தில், இந்தியா $1.48 பில்லியன் மதிப்புள்ள எண்ணெய் பொருட்களை சீனாவுக்கு ஏற்றுமதி செய்துள்ளது. இது கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் வெறும் $693 மில்லியனாக இருந்தது. மேலும் தொலைத்தொடர்பு சாதனங்கள், மொபைல் பாகங்கள் மற்றும் நெட்வொர்க் உபகரணங்களின் ஏற்றுமதி 276 சதவீதம் அதிகரித்துள்ளது.
இந்திய கடல் உணவுகள்
நம் நாட்டு கடல் உணவுகளுக்கு அமெரிக்கா 50% வரை வரி விதித்திருந்தது. இதனால் தூத்துக்குடியிலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்ட கடல் உணவுகள், பாதி வழியில் திருப்பி அனுப்பப்பட்டன. இந்த உணவுகள் தற்போது சீனாவில் நல்ல விலைக்கு விற்பனையாகிறது. குறிப்பாக இந்திய இறால்கள் அதிக அளவு விரும்பப்படுகிறது. இதனால் கடல் உணவு ஏற்றுமதி 20% வரை அதிகரித்திருக்கிறது. வர்த்தக பன்முகத்தன்மையின் விளைவாக இந்த வளர்ச்சி ஏற்பட்டுள்ளதாக, வர்த்தக நிபுணர் அபிஷேக் ரஸ்தோகி விளக்கியுள்ளார்.
புதிய சந்தைகள்
ஒரு காலத்தில் பெரும்பாலான நாடுகள் அமெரிக்காவை மட்டுமே நம்பியிருந்தன. ஆனால், வரி பஞ்சாயத்துக்கு பிறகு நிலைமை அப்படியே மாறியிருக்கிறது. இப்போது ஆசியா மற்றும் ஐரோப்பாவில் புதிய சந்தைகள் உருவாகியுள்ளன. சீனாவில் தொழில்துறை எண்ணெய் தேவை அதிகமாக இருப்பதால், இந்திய பெட்ரோலியப் பொருட்கள் அதிக அளவில் விற்பனையாகின்றன. மொபைல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் விநியோகச் சங்கிலியில் இந்தியாவின் நிலை வலுப்பெற்று வருகிறது.
இந்தியாவின் எதிர்காலம்
இந்த வர்த்தகத்தை இப்படியே மெயின்டெயின் செய்தால் இந்தியாவுக்கு நல்ல லாபம் கிடைக்கும். இந்தியா-சீனா கூட்டு எதிர்காலத்தில் உலகத்தையே மாற்றும் சக்தியாக வளரலாம். குறுக்கே அமெரிக்கா வந்து குட்டையை குழப்பாமல் இருக்க வேண்டும். கல்வான் பள்ளத்தாக்கு மோதலுக்கு பின்னர் இரு நாடுகளுக்கும் இடையேயான உறவு தற்போதுதான் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது. குறிப்பாக இந்தியா-சீனா நேரடி விமான சேவைகளும் தொடங்கியுள்ளன. இந்த உறவு மேலும் வளர்ந்து பிரிக்ஸ் அமைப்பில் பிரதிபலிக்க வேண்டும்.
குறிப்பாக அமெரிக்க டாலருக்கு மாற்றான ஒரு கரன்சியை பிரிக்ஸ் அமைப்பு உருவாக்க வேண்டும். இதற்கு இந்தியா துணை நிற்க வேண்டும். அப்படி நடந்தால், டாலரின் ஆதிக்கம் அப்படியே சரியும். இந்திய ரூபாயின் மதிப்பு உயரும் என்பது குறிப்பிடத்தக்கது.
-
நீங்க ஒன்னும் மன்னர் கிடையாது.. அமெரிக்காவில் டிரம்புக்கு எதிராக ஆயிரக்கணக்கானோர் திரண்டு போராட்டம் -
இந்தியாவுக்கு எதிரான தீவிரவாதிகளுக்கு பாகிஸ்தான் அடைக்கலம் தருவது உண்மைதான்! அம்பலப்படுத்திய அமெரிக்கா -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
தவெக வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் LIVE: 234 தொகுதிகளில் 23 பெண்களுக்கு மட்டுமே வாய்ப்பு அளித்த விஜய் -
வில்லிவாக்கம் விஸ்வரூபம்.. ஆதவ் இதை எதிர்பார்த்து இருக்கவே மாட்டாரு.. கேம் சேஞ்சர் கார்த்திக் மோகன் -
விஜய்க்கு எதிராக பெரம்பூர், திருச்சியில் கிழக்கில்.. களமிறங்கும் திமுக, அதிமுக வேட்பாளர்கள் யார்? -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
அரசியலன்னா இதுதான்.. எப்போ என்ன நடக்கும்னே தெரியாது.. ஸ்டாலின் டிக் அடித்த பெயர்.. பலர் ஷாக் -
இதுவரை திமுக ஜெயிக்காத.. கோவை தெற்கு தொகுதியைத் கேட்டு வாங்கிய செந்தில் பாலாஜி.. என்ன காரணம்? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
ஜெயலலிதா ஸ்டைலை பின்பற்றும் விஜய்! ‘டபுள் தொகுதி’ ஃபார்முலாவை கையில் எடுத்தது ஏன்? இதுவரை யார் யார்?












Click it and Unblock the Notifications