'கார்கிலில் ஆக்கிரமித்த பகுதிகளில் இருந்து பாகிஸ்தானை வெளியேறச் சொன்னது யு.எஸ்.தான்'
இஸ்லாமாபாத்: கார்கில் போரின் போது பாகிஸ்தான் ஆக்கிரமித்த இடங்களில் இருந்து வெளியேறுமாறு அமெரிக்காதான் சொன்னதாக அந்நாட்டுக்கான பாகிஸ்தான் தூதராக பணியாற்றிய ரியாஸ் கோகர் தெரிவித்துள்ளார்.
கார்கில் போர் தொடர்பான ஆய்வுக் கூட்டம் பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் நேற்று நடைபெற்றது. அதில் கார்கில் போரின்போது அமெரிக்காவுக்கான பாகிஸ்தான் தூதராக பணியாற்றிய ரியாஸ் கோகர், அந்நாட்டின் முன்னாள் வெளியுறவுச் செயலர் தாரிக் உஸ்மான் ஹைதர் உள்ளிட்டோர் கலந்து கொண்டார்.
இந்நிகழ்ச்சியில் ரியாஸ் கோகர் பேசியதாவது:
கார்கில் போர் தவிர்த்திருக்க கூடியதுதான். அப்போது என்னை அமெரிக்க வெளியுறவு அதிகாரிகள் அழைத்தனர். இந்தியா, ஒரு பைத்தியம் போல சுற்றிக்கொண்டிருக்கிறது. அதனால் நீங்கள் ஆக்கிரமித்த இடங்களில் இருந்து தயவுசெய்து உடனடியாக வெளியேறுங்கள் என்று கூறினர்.
அதனால்தான் பாகிஸ்தான் படைகள் கார்கில் பகுதியைவிட்டு வெளியேறின. பாகிஸ்தானால், ஒரு நம்பகமான விளக்கத்தை அமெரிக்காவிடம் அளிக்க இயலவில்லை. அதுதான் பாகிஸ்தான் இழைத்த மிகப்பெரிய தவறு. அதனால் நாங்கள் பொறுப்பற்ற நாடாக பார்க்கப்பட்டோம். நிச்சயமாக அந்த போர் தவிர்க்கப்படக் கூடிய ஒன்றுதான்.
இவ்வாறு ரியாஸ் கோகர் கூறினார். இந்நிகழ்ச்சியில் பேசிய பலரும் கார்கில் போரை தவிர்த்திருக்கலாம் என்றே கருத்து தெரிவித்திருந்தனர்.
-
Kuwait மீது திடீர் தாக்குதல் நடத்திய ஈரான்.. திரும்பும் பக்கமெல்லாம் ஏவுகணை சந்தம்.. பீதியில் மக்கள்! -
அந்தர் பல்டி அடிக்கும் டிரம்ப்.. 25% வரி 15 சதவீதமாக குறைப்பு.. வழிக்கு வந்த அமெரிக்கா! -
ஈரானின் முதுகெலும்பில் தாக்கிய CENTCOM.. டிரம்ப் போட்டுக்கொடுத்த பிளான்..? கச்சிதமாக முடித்த US Army! -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications