நிறம் மாறும் செங்கடல்.. ஹவுதி படைகளுக்கு எதிராக பிரிட்டன், அமெரிக்கா கூட்டு தாக்குதல்! ஏமன் வார்னிங்
சனா: இஸ்ரேலுக்கு எதிரான போரில் ஹமாஸ் அமைப்புக்கு ஆதரவாக களமிறங்கியுள்ள ஈரான், ஹவுதியுடன் கைகோர்த்து செங்கடல் பகுதியை ஆக்கிரமிக்க முயன்று வருகிறது. இந்நிலையில், ஹவுதிக்கு எதிரான தாக்குதல்களை பிரிட்டன் மற்றும் அமெரிக்கா கூட்டாக தொடங்கியுள்ளது.
பாலஸ்தீனத்திற்காக இஸ்ரேல் ஆக்கிரமிப்பு முயற்சிகளை மேற்கொள்வதும், அதற்கு எதிராக ஹமாஸ் பயங்கரவாத தாக்குதலை தொடுப்பதும் அடிக்கடி நடந்து வரும் சம்பவங்கள்தான். இந்த மோதல் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 7ம் தேதி யாரும் எதிர்பார்க்காத வகையில் சீரியஸானது. அதாவது ஹமாஸ் படையினர் இஸ்ரேல் மீது ராக்கெட்களை ஏவி 1,400 பேரை கொல்ல, இஸ்ரேல் கண்மூடித்தனமான பதில் தாக்குதலில் இறங்கியது. இப்படி தொடர்ந்து வரும் தாக்குதல் காரணமாக காசாவில் உயிரிழப்பு எண்ணிக்கை 23 ஆயிரத்தை கடந்திருக்கிறது.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், ஹமாஸூக்கு ஆதரவாக ஈரான் ஆதரவு பெற்ற ஹவுதி படை களத்தில் இறங்கியிருக்கிறது. குறிப்பாக செங்கடலை தங்களது கட்டுப்பாட்டில் கொண்டுவர முயன்றுக்கொண்டிருக்கிறது. இந்த வழியாக பயணிக்கும் இஸ்ரேல் ஆதரவு கப்பல்களை தாக்கி கைப்பற்றுவோம் என்று கூறியிருந்தது. இதன்படி சில கப்பல்களையும் கைப்பற்றியிருந்தது. இந்த செங்கடல் பகுதி வழியாக ஆசிய - ஐரோப்பியத்தின் 12% வர்த்தகம் நடைபெறுகிறது. எனவே இதை ஆக்கிரமிப்பது வர்த்தகத்தை கடுமையாக பாதிக்கும்.
இந்தியாவிலிருந்து சென்ற கப்பல்களையும் ஹவுதி படையினர் சிறைபிடிக்க முயன்றனர். இதுவரை 27 கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்நிலையில், ஹவுதி படையினருக்கு எதிரான கூட்டு தாக்குதல்களை அமெரிக்காவும், பிரிட்டனும் தொடங்கியுள்ளன. ஏமன் தலைநகர் சானா, சாதா மற்றும் தாமர் உள்ளிட்ட நகரங்களில் இந்த படைகள் தாக்குதல்களை நடத்தியுள்ளன. இது, 'அமெரிக்க-சியோனிஸ்ட்-பிரிட்டிஷ்' ஆக்கிரமிப்பு என ஹவுதி கிளரச்சியாளர்கள் கூறியுள்ளனர்.
போர் விமானங்கள் மற்றும் நீர்மூழ்கி கப்பல்கள் மூலம் இந்த தாக்குதல்கள் தொடுக்கப்பட்டிருக்கின்றன. 10க்கும் அதிகமாக இலக்குகளை அமெரிக்க-பிரிட்டன் கூட்ட படைகள் குறி வைத்திருக்கின்றன. இந்த தாக்குதல் குறித்து பேசிய அமெரிக்க அதிபர் பைடன், "அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகள் மீதான தாக்குதல்களுக்கு நாங்கள் எந்த அளவுக்கு பதிலடி கொடுப்போம் என்பதற்கு இந்த தாக்குதல்கள் ஓர் எடுத்துக்காட்டு. எங்கள் மீதான தாக்குதல் முயற்சிகளை ஒருபோதும் பொறுத்துக்கொள்ள மாட்டோம் என்பதை இதன் மூலம் தெளிவுப்படுத்தியுள்ளோம்.
இந்த தாக்குதல் குறித்த ஹவுதி அமைப்பின் மூத்த நிர்வாகி கூறுகையில், "ஏமன் மீது நடத்தப்பட்ட ஆக்கிரமிப்பு முயற்சிக்கு அமெரிக்காவும், பிரிட்டனும் பெரிய விலை கொடுக்க வேண்டி இருக்கும்" என்று எச்சரித்திருக்கிறார். இந்த பதற்றத்தையடுத்து ஓமன் நாட்டின் வான் எல்லை முழுவதுமாக மூடப்பட்டிருக்கிறது. எந்த நாடுகளும் தங்களது வான் எல்லைகளை பயன்படுத்த கூடாது என்று அறிவித்திருக்கிறது.
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications