அமெரிக்க அதிபர் தேர்தல்: லத்தீன் அமெரிக்கர்கள் அதிக அளவில் வாக்களிப்பால் ஹிலாரிக்கு சாதகம்!
அமெரிக்க அதிபர் தேர்தலில் தபாள் வாக்களிப்பு உட்பட முந்தைய வாக்குப் பதிவில் லத்தீன் அமெரிக்கர்கள் அதிக அளவு வாக்களித்துள்ளனர்.
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தலில் தபால் வாக்களிப்பு உள்ளிட்ட முந்தைய வாக்குப் பதிவில் லத்தீன் அமெரிக்கர்கள் அதிக அளவில் வாக்களித்துள்ளனர். இது ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஹிலாரிக்கு சாதகமானது என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.
அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான அதிகாரப்பூர்வ வாக்குப் பதிவு இன்று மாலை தொடங்குகிறது. அதற்கு முன்னதாக தபால் வாக்களிப்பு உள்ளிட்ட முந்தைய வாக்குப் பதிவும் நடத்தப்பட்டது. இதில் லத்தீன் அமெரிக்கர்கள், ஹிஸ்பானிக் சமூகத்தினர் அதிக அளவில் வாக்களித்துள்ளனர்.

2008, 2012-ம் ஆண்டு அதிபர் தேர்தல்களில் ஆப்பிரிக்க- அமெரிக்கர்கள் சமூகத்தினர் பெருமளவு வாக்களித்திருந்தனர். இந்த வாக்குகள் ஒபாமாவுக்கு சாதகமாக அமைந்தது.
பொதுவாக லத்தீன் அமெரிக்கர்கள் ஜனநாயகக் கட்சிக்கே வாக்களிப்பவர்கள்.. இந்த முறை ஹிலாரியின் பிரசாரம் லத்தீன் அமெரிக்கர்களிடத்தில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனல் லத்தீன் அமெரிக்கர்களின் வாக்குகள் மிகவும் அதிகமாக பதிவாகி உள்ளது. இது ஹிலாரிக்கு சாதகமான அம்சம் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.
அத்துடன் குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்ட் ட்ரம்ப்பின், லத்தீன் அமெரிக்கர்களுக்கு எதிரான பேச்சும் ஹிலாரியை நோக்கி அவர்களை திருப்பிவிட்டிருக்கிறது. லத்தீன் அமெரிக்கர்களை கிரிமினல்களாக, பலாத்காரம் செய்பவர்களாக ட்ரம்ப் குற்றம்சாட்டி பேசியிருந்தார்.
ப்ளோரிடா மாகாணத்தில் பதிவாகி உள்ள 62 லட்சம் வாக்குகளில் சுமார் 10 லட்சம் வாக்குகள் ஹிஸ்பானிக் சமூகத்தினருடையதாகும். கடந்த 2012-ம் ஆண்டு தேர்தலை ஒப்பிடுகையில் இது 75% அதிகம் என அமெரிக்க ஊடகங்கள் குறிப்பிடுவதும் குறிப்பிடத்தக்கது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications