வேலியில் போன ஓணானை மடியில் கட்டிய கதை.. ஈரானை தூண்டிய இஸ்ரேல்! US-ஐ மதிக்காத உலக நாடுகள்
டெல் அவிவ்: சிரியாவில் ஈரான் தூதரகம் மீது நடத்தப்பட்ட தாக்குதல் பூதாகரமாக வெடித்து கிளம்பியிருக்கிறது. இதற்கிடையில் ஈரானுக்கும், இஸ்ரேலுக்கும் இடையே அமெரிக்கா சமாதானம் பேசி வரும் நிலையில், அமெரிக்காவின் அறிவுறுத்தல்களை இரு நாடுகளும் ஏற்றுக்கொள்ளவில்லை.
பாலஸ்தீனம் மீது இஸ்ரேல் போர் தொடுத்து வரும் நிலையில், மத்திய கிழக்கில் உள்ள ஈரான் உள்ளிட்ட சில நாடுகள் இந்த நடவடிக்கைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து இஸ்ரேல் படைகள் மீது அவ்வப்போது சில தாக்குதல்களை தொடுத்து வந்தனர். இந்நிலையில் யாரும் எதிர்பார்க்காத வகையில், ஏப்ரல் 1ம் தேதி சிரியாவில் இருந்த ஈரான் தூதரகம் மீது இஸ்ரேல் வான் வாழி தாக்குதலை நடத்தியது. இதில் 2 ராணுவ ஜெனரல்கள் மற்றும் ராணுவ அதிகாரிகள் சிலர் படுகொலை செய்யப்பட்டனர்.

இதனால், இஸ்ரேல் மீது கடும் கோபத்தில் ஈரான் இருக்கிறது. ஈரான் எப்போது வேண்டுமானாலும் உங்கள் மீது தாக்குதல் நடத்தலாம், உஷாராக இருங்கள் என அமெரிக்கா எச்சரித்துள்ளது. மட்டுமல்லாது ஈரானின் தாக்குதலிலிருந்து இஸ்ரேலை பாதுகாக்க 'ஐயன் டோம்' அமைப்பை கூடுதலாக வழங்குவதாகவும் அமெரிக்கா உறுதியளித்திருக்கிறது. மறுபுறம், "சிரியாவில் இனி எந்த தாக்குதலும் நடக்காது, அதற்கு நாங்கள் கேரண்டி. ஆனால், இஸ்ரேல் மீதான ஸ்பெஷல் மிலிட்டரி ஆப்ரேஷனை மட்டும் கைவிடுங்கள்" என்று ஈரானிடம் கேட்டிருக்கிறது.
இந்த விஷயம் இஸ்ரேல் காதுக்கு செல்லவே, அதன் பிரதமர் நெதன்யாகு, "சிரியா மீதான தாக்குதல் தொடரும்" என்று வெளிப்படையாக அறிவித்திருக்கிறார். அந்த பக்கம் ஈரான், "பாலஸ்தீன மக்களின் அனைத்து கோரிக்கைகளும் நிறைவேறினால்தான் எங்கள் தாக்குதல் நிற்கும்" என்று கூறியுள்ளது. அதாவது உலகின் சர்வாதிகாரியாக தன்னை காட்டிக்கொண்டிருந்த அமெரிக்காவின் அறிவுறுத்தல்களை சிறிய நாடுகளான இரண்டும் கேட்க மறுப்பு தெரிவித்துள்ளன.
இது சர்வதேச அரசியல் நடக்கும் மிகப்பெரும் மாற்றம் என்று அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். ஏனெனில் காசா மீதான தாக்குதல்களை நிறுத்த வேண்டும் என்று அமெரிக்கா எத்தனையோ முறை சொல்லிவிட்டது. ஆனால் நெதன்யாகு இப்போது வரை அதை காது கொடுத்து கேட்கவில்லை. ஆசியாவில் இந்தியாவை எடுத்துக்கொண்டால், ஆயுத கொள்முதலில் அமெரிக்காவின் பேச்சை இந்தியா கேட்பது கிடையாது.
ஏற்கெனவே சீனா, ரஷ்யா அமெரிக்காவுக்கு எதிராக இருக்கும் நிலையில், இப்போது இந்தியா, ஈரான், இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகளும் அமெரிக்காவின் பேச்சுக்கு மதிப்பளிக்காது, அதற்கு பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. சுருக்கமாக சொல்வதெனில் சர்வதேச அரசியலில் அமெரிக்காவின் ஆதிக்கம் ஏறத்தாழ முடிவுக்கு வந்திருக்கிறது" என்று கூறியுள்ளனர்.
-
கண்கள் சிவந்த டிரம்ப்.. பாகிஸ்தான் எடுக்கும் முடிவு.. ஆனால் "அந்த" ஒரு சிக்கல் இருக்கே! அடுத்து என்ன -
நள்ளிரவில் பாய்ந்த அமெரிக்க ஏவுகணைகள்... அதிகாலையில் திருப்பி அடித்த ஈரான்! மீண்டும் வெடிக்கும் போர் -
ஈரான் பந்தர் அப்பாஸில் அமெரிக்க தாக்குதல்.. வேலையை காட்டிய டிரம்ப்.. அப்போ அமைதி எல்லாம் கனவுதான் -
அமெரிக்க பொருளாதாரம் அபாயத்தில் உள்ளதா? ஜகா வாங்கும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்.. வெளியானது முக்கிய அறிகுறி! -
குவைத்தில் தாக்குதல்.. புகுந்து அடித்த அமெரிக்காவுக்கு பதிலடி கொடுத்த ஈரான்.. உச்சகட்ட பதற்றத்தில் வளைகுடா! -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம்












Click it and Unblock the Notifications