ஹோட்டலுக்குக் கூட்டிச் செல்லாத காதலனை லாரி ஏற்றிக் காயப்படுத்திய காதலி
வாஷிங்டன்: மெக்டோனால்ட்ஸ் உணவகத்திற்குக் கூட்டிச் செல்ல மறுத்த காதலன் மீது கடும் கோபம் கொண்ட ஒரு அமெரிக்கப் பெண், அங்கு நின்றிருந்த மினி லாரியை எடுத்து காதலன் மீது 3 முறை ஏற்றி படுகாயப்படுத்தியுள்ளார். அந்த கொலை வெறிக் காதலியை போலீஸார் கைது செய்துள்ளனர்.
அந்தப் பெண்ணின் பெயர் கிறிஸ்டல் கிரீர் புரூக்ஸ், வயது 33. டென்னஸ்ஸியின், கிங்ஸ்போர்ட் நகரைச் சேர்ந்தவர். இவரது காதலர் பெயர் சான்டியாகோ ஹெர்னாண்டஸ்.
சம்பவத்தன்று இவர்கள் இருவரும் ஒரு மினி டிரக்கில் புறப்பட்டு மது அருந்தப் போயுள்ளனர். நன்றாக மது அருந்திய பின்னர் தன்னை மெக்டொனால்ட்ஸ் உணவகத்திற்குக் கூட்டிப் போகுமாறு கூறியுள்ளார் புரூக்ஸ். ஆனால் தன்னால் முடியாது என்று கூறியுள்ளார் சான்டியாகோ.
இதனால் கோபமடைந்த புரூக்ஸ் டிரக்கை நிறுத்துமாறு கூறியுள்ளார். சாண்டியாகோவும் நிறுத்தினார். பின்னர் அவரை கீழே இறங்கச் சொன்னார் புரூக்ஸ். அவரும் இறங்கினார். அதன் பின்னர் படுவேகமாக டிரக்கை கிளப்பிய புரூக்ஸ், காதலன் மீது மோதினர். ஒருமுறை இருமுறை அல்ல, 3 முறை மோதினார்.
இதில் படுகாயமடைந்து கீழே விழுந்தார் சாண்டியாகோ. அவருக்கு தோள்பட்டை மற்றும் முதுகில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். புரூக்ஸ் கைது செய்யப்பட்டுள்ளார்.
-
அமெரிக்காவில் 30 இந்தியர்கள் கைது.. உடனடியாக நாடுகடத்த உத்தரவு "Operation Checkmate".. என்ன நடந்தது? -
நியூயார்க் மயானத்தில் பூமிக்கு அடியில் 56 லட்சம் தேனீக்கள்! உலக அதிசயமாக மாறிய கல்லறைத் தோட்டம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி












Click it and Unblock the Notifications