யு.எஸ்.: இளம்பெண்ணை திட்டி அழவைத்து விமானத்தில் இருந்து இறக்கிவிட்ட சிப்பந்தி
அரிசோனா: அமெரிக்காவில் விமானத்தில் அழுத 27 வயது பெண்ணை விமான சிப்பந்தி ஒருவர் கீழே இறக்கிவிட்ட சம்பவம் பிற பயணிகளை அதிருப்தி அடையச் செய்துள்ளது.
அமெரிக்காவின் ஆரிகன் மாநிலத்தில் உள்ள போர்ட்லேண்டைச் சேர்ந்தவர் டியானா ஃபோ(27). அவர் அரிசோனா மாநிலத்தில் உள்ள டக்சனுக்கு விடுமுறையை கழிக்கச் சென்றார். விடுமுறையை கழித்த பிறகு அவர் போர்ட்லேண்ட் திரும்ப பீனிக்ஸில் அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானம் 408ல் ஏறினார்.

விமானத்தில் ஏறிய அவர் தனது இருக்கையில் அமர வரிசையில் நின்றபோது சக பயணி ஒருவருடன் பேசியுள்ளார். இதை பார்த்த ஆண் விமான சிப்பந்தி அவரை திட்டியுள்ளார். மூன்று முறை கூறிவிட்டேன் பேசாமல் ஒழுங்காக அங்கேயே நில்லுங்கள் என்று அவர் டியானாவை மிரட்டியுள்ளார்.
அதன் பிறகு போங்கள் உங்கள் இருக்கையில் அமர்ந்து கொள்ளுங்கள் என்று கூறியுள்ளார். இதனால் மனமுடைந்த டியானா தனது இருக்கையில் அமர்ந்ததும் அழத் துவங்கிவிட்டார். இந்நிலையில் அந்த சிப்பந்தி திரும்ப வந்து உங்கள் பைகள் எங்கே உங்களை விமானத்தை விட்டு கீழே இறக்கிவிடுகிறோம் என்று கூறி அவரின் உடைமைகளை எடுத்தார்.
டியானா வேறு வழியில்லாமல் அழுது கொண்டே விமானத்தை விட்டு கீழே இறங்கினார். இதை பார்த்த பிற பயணிகள் அதிருப்தியில் பூ பூ என்று கூறினர். இந்த சம்பவத்தை டியானாவுக்கு பின் இருக்கையில் அமர்ந்திருந்த ஒருவர் தனது செல்போனில் வீடியோ எடுத்து இணையதளத்தில் வெளியிட்டுள்ளார்.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications