வந்துட்டாங்கய்யா.. வந்துட்டாங்கய்யா.. செமயா இருக்காங்கப்பா இந்த யூனிஃபார்ம்ல!
டோக்கியோ: இந்த ஆண்டு இறுதியில் டோக்கியோவில் நடைபெறவிருக்கும் ஒலிம்பிக்ஸ் மற்றும் பாராலிம்பிக்ஸ் நிறைவு விழாக்களுக்கான தனது சீருடைகளை அமெரிக்க அணி வெளியிட்டுள்ளது.
இந்த சீருடைகள் அமெரிக்காவின் மிக சிறந்த வடிவமைப்பாளரான ரால்ப் லாரன் என்பவரால் உருவாக்கப்பட்டுள்ளது.
மாடல் வீரர்கள் இந்த சீருடை அணிந்தபடி இருக்கும் புகைப்படங்கள் புதன்கிழமையன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது .

உயர்நிலைப் பள்ளி திரைப்படம்
இந்த புதிய சீருடை 1980 ஆம் ஆண்டு வெளிவந்த "உயர்நிலைப் பள்ளி" என்று திரைப்படத்தின் ஆடைகளுடன் ஒப்பிடப்பட்டு பாராட்டப்பட்டுள்ளது. மேலும் விண்வெளி வீரர் கியரின் ஆடைகளுடனும் ஒப்பிடப்பட்டு வருகிறது.

மேக்ஸ் டானி ட்வீட்
ரால்ப் லாரனின் புதிய வடிவமைப்புகள் சமூக ஊடகங்களில் கலவையான கருத்துக்களைப் பெற்றன. "ஒவ்வொரு நான்கு வருடங்களுக்கும் ரால்ப் லாரன் எங்கள் மிகச்சிறந்த விளையாட்டு வீரர்களை மிகவும் துணிச்சலான ஆடைகளில் அலங்கரிப்பதற்கு தன்னால் முடிந்ததைச் செய்கிறார்" என்று டெய்லி பீஸ்ட் நிருபர் மேக்ஸ் டானி ட்வீட் செய்துள்ளார்.

வாட்டர் போலோ ஆஷ்லீ ஜான்சன்
மல்யுத்த வீரர் ஜோர்டான் பரோஸ் முதல் வாட்டர் போலோ நட்சத்திரம் ஆஷ்லீ ஜான்சன் வரை பலவிதமான விளையாட்டு வீரர்களும் இந்த புதிய டிசைன் டிரஸ்ஸைப் போட்டு போஸ் கொடுத்துள்ளனர். மக்களின் வரவேற்பை இவை பெற்றுள்ளன.

லண்டன் 2012 விளையாட்டு வீரர்கள்
அமெரிக்க ஒலிம்பிக் வீரர்கள், போட்டி விழாவில் டெனிம் அணிவது இது முதல் முறை அல்ல. 2008 ஆம் ஆண்டிலிருந்தே ரால்ப் லாரனின் வடிவமைப்புகளைத்தான் அமெரிக்க அணியினர் அணிகின்றனர். லண்டன் 2012 இல் அதன் விளையாட்டு வீரர்கள் தேசபக்தியை விளக்கும் வகையிலான ஜீன் ஜாக்கெட்டுடன் காக்கி பேன்ட்ஸை அணிந்தனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications