கலிபோர்னியாவில் பள்ளிக்குள் துப்பாக்கியோடு நுழைந்த நபர்.. சரமாரி சூடு.. 6 பேர் கவலைக்கிடம்
கலிபோர்னியா: கலிபோர்னியாவில் உள்ள பள்ளி ஒன்றில் சரமாரி துப்பாக்கி சூடு நடத்தப்பட்டு உள்ளது. இந்த துப்பாக்கி சூட்டில் 6 பேர் படுகாயம் அடைந்ததாக கூறப்படுகிறது.
வடக்கு கலிபோர்னியாவில் ஓக்லாந்த் ரூட்ஸ்டெல் நியூ கம்மர் பள்ளியில் சரமாரி துப்பாக்கி சூடு நடந்து உள்ளது. இந்த பள்ளி, இடைநின்ற மாணவர்களுக்காக தனியாக நடத்தப்படும் பள்ளியாகும்.
அதாவது பல்வேறு காரணங்களுக்காக இடைநின்ற மாணவ, மாணவியர் இங்கே சேர்ந்து படிக்க முடியும். அமெரிக்காவிற்கு புதிதாக வந்தவர்கள், அகதிகளாக வந்து படிக்கும் வாய்ப்புகளை பெற்றவர்கள் என்று பல தரப்பு மக்களுக்கு கல்வி வாய்ப்பு கொடுக்க இந்த பள்ளி அமைக்கப்பட்டு உள்ளது.

துப்பாக்கி சூடு
இந்த நிலையில்தான் அந்த பள்ளிக்குள் புகுந்து சரமாரியாக தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது. இந்த நிலையில் இன்று அதிகாலை பள்ளிக்குள் நுழைந்த நபர் துப்பாக்கி சூடு நடத்தி உள்ளார். அங்கு இருந்த மாணவர்களை நோக்கி சரமாரியாக தாக்கி உள்ளார். இதில் 6 மாணவ, மாணவியர் படுகாயம் அடைந்து உள்ளனர். இவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். காயம் அடைந்த 6 பேரில் 3 பேர் உடல் கவலைக்கிடமாக இருப்பதாக போலீசார் தெரிவித்து உள்ளனர்.

யார்?
இந்த துப்பாக்கி சூட்டை நடத்தியவரை போலீசார் தேடி வருகின்றனர்.வெளியில் இருந்து வந்த நபர் துப்பாக்கி சூடு நடத்தினாரா அல்லது உள்ளேயே யாராவது துப்பாக்கி சூடு நடத்தினார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஒன்றுக்கும் மேற்பட்ட நபர்கள் துப்பாக்கி சூடு நடத்தி இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. துப்பாக்கி சூடு நடத்தியவர் அங்கு இருந்து உடனே தப்பித்து ஓடியதாக கூறப்படுகிறது. இதனால் அந்த நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

ஏன்?
அந்த பகுதியில் இருக்கும் 5 க்கும் மேற்பட்ட பள்ளிகள் இதனால் மூடப்பட்டு உள்ளன. அந்த பகுதியில் உள்ள மற்ற பள்ளிகளில் துப்பாக்கி சூடு நடத்தாமல் இங்கே நடத்தியது ஏன் என்று விசாரணை செய்யப்பட்டு வருகிறது. இது நிற வெறுப்பு, அகதிகள் வெறுப்பு காரணமாக நடத்தப்பட்ட துப்பாக்கி சூடாக இருக்கலாமோ என்றும் விசாரணை செய்யப்பட்டு வருகிறது. அமெரிக்காவில் துப்பாக்கி சூடு சம்பவங்கள் மீண்டும் அதிகரிக்க தொடங்கி உள்ளன. ப்ரூக்லின் ரயில் நிலையத்தில் கடந்த சில வாரங்களுக்கு முன்புதான் ரயிலுக்கு உள்ளே துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது.

படுகாயம்
இதில் 25 பேர் படுகாயம் அடைந்தனர். 5 பேர் மிக மோசமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் பிரான்க் ஜேம்ஸ் என்பவர் கைது செய்யப்பட்டார். அதன்பின் அமெரிக்காவின் தெற்கு கரோலினாவில் நடைபெற்ற துப்பாக்கி சூட்டில் 10 பேர் படுகாயம் அடைந்தனர். அதே மாலில் மர்ம நபர் நடத்திய கத்தி குத்து தாக்குதலில் 2 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த நிலையில் தற்போது கலிபோர்னியாவில் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது.
-
ஒரு மணிநேரத்தில் பதிலடி கொடுத்த ஈரானின் IRGC படை.. ஆடிப்போய் நிற்கும் அமெரிக்கா.. இனி ரொம்ப கஷ்டம்! -
Kuwait மீது திடீர் தாக்குதல் நடத்திய ஈரான்.. திரும்பும் பக்கமெல்லாம் ஏவுகணை சந்தம்.. பீதியில் மக்கள்! -
அமெரிக்காவில் 30 இந்தியர்கள் கைது.. உடனடியாக நாடுகடத்த உத்தரவு "Operation Checkmate".. என்ன நடந்தது? -
அந்தர் பல்டி அடிக்கும் டிரம்ப்.. 25% வரி 15 சதவீதமாக குறைப்பு.. வழிக்கு வந்த அமெரிக்கா! -
ஈரானின் முதுகெலும்பில் தாக்கிய CENTCOM.. டிரம்ப் போட்டுக்கொடுத்த பிளான்..? கச்சிதமாக முடித்த US Army! -
எஸ்ஜே சூர்யாவின் படப்பிடிப்பில் சிலிண்டர் வெடித்து கோர விபத்து.. ஒருவர் உயிரிழப்பு, 3 பேர் காயம்! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications