Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பிரபாகரனை கட்டி பிடித்து அழுத எம்ஜிஆர், பாதுகாப்பாக இருக்கும் சயனைடு குப்பி- சுவிஸில் வைகோ 'பரபர'

Subscribe to Oneindia Tamil

ஜெனிவா: இந்திய- இலங்கை ஒப்பந்தம் பற்றி தமக்கு எதுவுமே தெரியாது என பிரபாகரனை கட்டிப் பிடித்து எம்.ஜி.ஆர். அழுதார் எனவும் பிரபாகரன் தமது கழுத்தில் கட்டிவிட்ட சயனை குப்பி இன்னமும் பாதுகாப்பாக இருப்பதாகவும் சுவிஸில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மதிமுக பொதுச்செயலர் வைகோ உரையாற்றினார்.

சுவிஸில் ஈழத் தமிழர்கள் ஏற்பாடு செய்த கூட்டத்தில் வைகோ பேசியதாவது:

நான் நெஞ்சால் பூசிக்கின்ற ஆருயிர்த் தலைவர் மேதகு பிரபாகரன் அவர்களின் கட்டளையை ஏற்று, 16 ஆண்டுகளுக்கு முன்னர் 2001 ஆம் ஆண்டு பிப்ரவரி 3 ஆம் நாள், பல்லாயிரக்கணக்கான புலம் பெயர் வாழ் ஈழத்தமிழர்களும், நாடுகள் பலவற்றில் இயக்கத்தை நடத்திக்கொண்டு இருக்கின்ற பிரதிநிதிகளும், சர்வதேச மனித உரிமைப் போராளிகளும் கலந்து கொண்ட நிகழ்சசியல் இதே இடத்தில் நின்று நான் பேசினேன். ஆண்டுகள் பல கடந்துவிட்டன.

Vaiko speaks on links LTTE, Prabhakaran and MGR

1998 ஆம் ஆண்டு, மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவராக இருந்த பின்லாந்து பிரதமர் ஹோர்ஸ்ட் அவர்களிடம், எங்கள் பெண்கள் கற்பழிக்கப்படுகிறார்கள், நாசமாக்கப்படுகின்றார்கள், படுகொலை செய்யப்படுகின்றார்கள், செம்மணி என்கின்ற இடத்தில் 400 பேர் பெண்கள், குழந்தைகள், வயோதிபர்கள் கைகளில் விலங்குகள் பிணைத்தவாறு கொடூரமாகச் சுட்டுக்கொன்று புதைக்கப்பட்டு இருக்கின்றார்கள்.

நீங்கள் எந்த Physicians for human rights அமைப்பினரை கொசோவாவுக்கு அனுப்பி, அங்கே புதைக்கப்பட்டட 80 இஸ்லாமியர்களின் உடல்களைத் தோண்டி எடுத்து ஆய்வு செய்து சர்வதேச மனித உரிமைகள் ஆணையத்தின் மனச்சாட்சியின் கதவுகளைத் தட்டினீர்களோ, அதேபோன்ற குழுவை எங்களுடைய யாழ்ப்பாணத்தின் செம்மணிக்கும் அனுப்புங்கள்; எங்களுக்கு இதுதான் கோவில், இதுதான் எங்களின் தொழுகைப் பள்ளி, எங்களுக்கு இதுதான் தேவாலயம், This is our temple, This is our mosQue, this is our church Weh have come here to knock the doors of human rights என்று சொல்லிவிட்டு, நான் பகுத்தறிவாளனாக இருந்தாலும், தில்லை நடராசன் வெண்கலச் சிலையை இங்கே கொண்டு வந்து அவரிடம் கொடுத்துவிட்டு, இதை எங்கள் மக்கள் கடவுளாக வணங்குகின்றார்கள்; எங்கள் கலையின் அடையாளமாக இதை உங்களுக்குத் தருகிறேன் என்று சொன்னபோது அவர் சொன்னார்: இந்த அற்புதமான சிலையை நான் என்றைக்கும் என் மேசையில் வைத்து இருப்பேன் என்று கூறிய பத்தாவது நாள் கட்டளை பிறப்பித்தார், கொசோவாவுக்கு அனுப்பிய அதே குழுவை செம்மணிக்கும் அனுப்பினார்.

அங்கே புதைகுழிகள் தோண்டப்பட்டன. கை கால்கள் கட்டப்பட்ட நிலையில், 400 தமிழர்களின் உடல்கள் தோண்டி எடுக்கப்பட்டன. அதற்குக் காரணமானவன் இன்று இங்கே உங்கள் முன்னால் நிற்கிறான்.

அதன்பிறகு, சுவிட்சர்லாந்து நாட்டுக்கு நான் விசா கேட்டு ஏழு முறை விண்ணப்பித்தேன். எனக்கு விசா மறுக்கப்பட்டது. காரணம் என்ன? நான் வன்னிக்காட்டில் 1989 ஆம் ஆண்டு, பிப்ரவரி 5 ஆம் தேதி தை அமாவாசை நாளில் ஒன்பது விடுதலைப்புலிகளோடு கடலில் படகில் பயணித்து, நாயாறு பகுதியில் சென்று இறங்கினேன். அடர்ந்த காடுகளுக்குள் குத்திக் கிழிக்கின்ற முட்களுக்கு இடையில் நடந்து சென்றேன். என் தலைவன் பிரபாகரன் அவர்களைச் சந்தித்தேன். அவருடன், அங்கேயே 23 நாட்கள் இருந்தேன்.அங்கே பூமிக்குள் நிலவறையில் அவர் ஆயுதப் பயிற்சிகள் மேற்கொண்டார். 200 மீட்டர் நீளம், பத்து மீட்டர் அகலம், பத்து மீட்டர் ஆழம். உள்ளே இருந்து புகை வெளியே வருவதற்கான குழாய்கள் இருந்தன. ஜெனரேட்டர்கள் இயங்கின. ஏ.கே. 47 முதல் எல்லாமே டார்கெட் பிராக்டிஸ் செய்தார். வெளியில் சத்தம் கேட்காது. நான் என்சிசியில் இருந்தவன். எனக்கும் துப்பாக்கி சுடத் தெரியும். ஏ.கே. 47 இல் எனக்குத் தலைவர் பயிற்சி கொடுத்தார்.

வெளியே வந்தபிறகு, நான் பிஸ்டலை வைத்துக்கொண்டு குறி பார்க்கும்போது, தலைவர் என் பக்கத்தில் நிற்பார். அருகில் யோகி இருந்தார். அண்ணே பார்த்துச் சுடுங்கள் என்று சொன்னார். அப்போது எடுத்த புகைப்படம், இந்திய அரசின் துரோகத்தால், ஏழு அணு ஆயுத வல்லரசுகளின் துணையோடு சிங்களப் படைகள், தடை செய்யப்பட்ட குண்டுகளை வீசி, நம்முடைய படை அணிகளுக்குச் சேதத்தை ஏற்படுத்தியபோது, கிளிநொச்சி வீழ்ந்தபோது, இலங்கை இராணுவ வெப்சைட்டில் என் படத்தை வெளியிட்டான். நான் பிஸ்டலை வைத்துக்கொண்டு குறி பார்ப்பதும், பக்கத்தில் தலைவர் நின்று கட்டளை இடுவதுமான புகைப்படம் அது. அங்கே எடுக்கப்பட்ட படங்கள் அனைத்தையும் ஒரு கோப்பாக ஆக்கி, இப்போது லண்டனில் தூதராக உள்ள ஹம்சா, உலகின் அனைத்து நாடுகளுக்கும் அனுப்பி வைத்து விட்டான்.

நான் ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்காவில் பாரக் ஒபாமா அவர்கள் முதன்முறை தேர்தலில் போட்டியிட்டபோது சந்தித்து விட்டு வந்தேன். சிகாகோவில் என் மகள் கண்ணகி இருக்கின்றார். இப்போது நான் அமெரிக்காவுக்கும் போக முடியாது. காரணம், அந்தக் கோப்புகளை வைத்துக்கொண்டு அமெரிக்கத் தூதரகத்தில் என்னை அழைத்து விசாரித்தார்கள். You are a part of Lttee. a banned organisation. vdnt, you are ineligible to get visa. நீங்கள் தடை செய்யப்பட்ட இயக்கத்தின் உறுப்பினர். எனவே, உங்களுக்கு அமெரிக்க விசா தர முடியாது என்று சொன்னார்கள்.

அதற்கு நான் விளக்கம்அளித்தேன். நான் புலிகளின் தீவிர ஆதரவாளன். ஆனால், அந்த இயக்கத்தில் நான் எந்தப் பொறுப்பிலும் இல்லை என்று சொன்னேன். ஆனால், அவர்கள் அதை ஏற்றுக் கொள்ளவில்லை. எட்டு ஆண்டுகள் கடந்து விட்டன.இன்றுவரையிலும் விசா தரவில்லை. லண்டனுக்குச் செல்ல விசா கிடையாது, ஆஸ்திரேலியா செல்ல முடியாது, கனடாவுக்குள் நுழைய முடியாது. மலேசிய நாட்டின் பினாங்கு மாநிலத் துணை முதல்வர் பேராசிரியர் இராமசாமி அவர்கள்தான், ஒரு அதிகாரப் பொறுப்பில் இருந்துகொண்டு ஈழத்தமிழர்களைப் பாதுகாக்கின்ற கவசமாகத் திகழ்கின்றார். அவர் என்னை இரண்டு முறை அங்கே அழைத்துச் சென்றார். இரண்டு மாதங்களுக்கு முன்பு நான் அவரது மகள் திருமணத்தில் கலந்துகொள்வதற்காகச் சென்றபோது, கோலா லம்பூர் வானூர்தி நிலையத்தில் என்னைத் தடுத்து நிறுத்தினார்கள். சென்னைத் தூதரகத்தில் விசா கொடுத்தவர்கள், கோலாலம்பூர் வானூர்தி நிலையத்திலேயே என்னைத் தடுத்துநிறுத்தி ஒருநாள் முழுவதும் சிறை வைத்து, என்னைச் சென்னைக்குத் திரும்ப அனுப்பி வைத்து விட்டார்கள். ஆகவே,எனக்கு விசா கிடையாது.

ஆனால், சகோதரர் போஸ்கோ, தமிழர் உலகம் அமைப்பு, இரண்டு மாத காலமாக சுவிஸ் அரசாங்கத்தோடு பேசினார்கள். வெள்ளிக்கிழமை இரவு வரையிலும் நான் இங்கே வருவதற்கான வாய்ப்புகள் எதுவும் இல்லை. எந்தத் தகவலும் இல்லை. எங்கள் இயக்கத்தின் மாநாடு தஞ்சையில் நடத்தி முடித்துவிட்டுச் சென்னைக்கு வந்தேன். சனிக்கிழமை நண்பகலில்தான் உனக்கு விசா கிடைத்துவிட்டது என்று சொன்னார்கள். அதுவும் விடுமுறை நாளில். உடனே அன்று இரவே புறப்பட்டு நான் இங்கே வந்து சேர்ந்தேன். ஜெனீவா வானூர்தி நிலையத்தில் ஈழத்தமிழ்ச் சகோதரர்கள் என்னை அன்போடு வரவேற்றார்கள்.

16 ஆண்டுகளுக்குப் பிறகுதான் இங்கே வந்து இருக்கின்றேன். அதுவும் இந்த ஒரு கூட்டத்தில் கலந்து கொள்வதற்கு மட்டும்தான் விசா. நான் உலகத்தின் வேறு எந்த நாட்டுக்கும் போக முடியாது. காரணம், நான் விடுதலைப்புலிகள் அமைப்பைச் சேர்ந்தவன் என்று சொல்லி இருக்கின்றார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+