வாடிகன் முக்கிய நிர்வாகி மீது சிறுவர்கள், ஆண்கள் பாலியல் புகார்.. ஆஸ்திரேலிய போலீஸ் விசாரணை
சிட்னி: வாடிகனில் பணியாற்றும் ஆஸ்திரேலிய கார்டினல் மீது பாலியல் புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து ஆஸி. போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஆஸ்திரேலியாவில் விக்டோரியா மாகாணத்தில் உள்ள பல்லாரட் நகரை சேர்ந்தவர் கார்டினல் ஜார்ஜ் பெல் (75). இவர் கத்தோலிக்க திருச்சபையின் தலைமையிடமான வாடிகனில் கருவூலம் பராமரிக்கும் முக்கிய பொறுப்பில் உள்ளவர்.
1970 முதல் 1990 வரையிலான கால கட்டங்களில் இவர் பாலியல் அத்துமீறல்களில் ஈடுபட்டதாக தற்போது புகார்கள் எழுந்துள்ளன.

சிறுவர்கள்
குறிப்பாக சிறுவர்களையும், ஆண்களையும் இவர் பாலியல் வேட்கைக்கு பயன்படுத்தியதாக பரபரப்பு சர்ச்சை எழுந்துள்ளது.
|
ஆண்கள் குற்றச்சாட்டு
தற்போது 40 வயதைக் கடந்து விட்ட இரு ஆண்கள், ஜார்ஜ் பெல் 1970ம் ஆண்டுவாக்கில் தங்களை தண்ணீரில் நீந்திக்கொண்டிருந்தபோது தவறாக நடந்து கொண்டதாகவும், முறையற்ற விதத்தில் தொட்டதாகவும் புகார் கூறி உள்ளனர்.
|
ஆடையின்றி
இதேபோல 3 சிறுவர்கள் முன்பாக கார்டினல் ஜார்ஜ் பெல் ஆடையின்றி நின்று கொண்டிருந்ததாக ஒருவர் குற்றம் சாட்டி உள்ளார். ஆலய பாடகர் குழுவில் உள்ள 2 இளைஞர்களும் ஜார்ஜ் பெல் மீது செக்ஸ் புகார் கூறி உள்ளனர்.
|
மறுப்பு
அதேநேரம், இந்த குற்றச்சாட்டுகளை கார்டினல் ஜார்ஜ் பெல் மறுத்துள்ளார். இது அதிர்ச்சி தரும் அவதூறு பிரசாரம் என அவர் கூறி உள்ளார்.

விசாரணை
ஜார்ஜ் பெல் மறுத்துள்ள போதிலும், குற்றச்சாட்டுகள் தொடர்பாக ஓராண்டு காலத்துக்கும் மேலாக விசாரணை நடந்துகொண்டிருப்பதாக விக்டோரியா மாகாண போலீஸ் கமிஷனர் கிரஹாம் ஆஸ்டன் கூறி உள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
சேலத்தில் விசிக பிரமுகருக்கு 20 பவுன் தங்க மாலை.. மனைவியான பெண் போலீஸ் ஏட்டு சர்ப்ரைஸ் -
திண்டுக்கல்லில் ஒரே நாளில் சிறப்பு எஸ்ஐ, பெண் ஏட்டு சஸ்பெண்ட்.. காவலர் அதிரடியாக பணி நீக்கம் -
Kerala: உடலில் 91 காயங்கள்.. கண்ணை மறைத்த கள்ளக்காதல்.. 1½வயது குழந்தையை துடிக்க துடிக்க கொன்ற கொடூரம்! அதிர்ந்த கேரளா -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம்












Click it and Unblock the Notifications