"சைவம் எல்லாம் இல்லை.." வெஜ் உணவு கேட்ட பயணிக்கு அசைவம் வழங்கிய விமான நிறுவனம்.. மூச்சு திணறி பலி

Subscribe to Oneindia Tamil

கொழும்பு: கத்தர் ஏர்வேஸ் விமானத்தில் பயணித்த 85 வயது முதியவர் சைவ உணவு கோரிய போதிலும் அவருக்கு அசைவ உணவு வழங்கப்பட்டுள்ளது. இறைச்சியை தவிர்த்துவிட்டு மற்றவற்றை சாப்பிடுமாறு சொல்லியுள்ளனர். அப்போது திடீரென அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்ட நிலையில், அந்த நபர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்தச் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸிலிருந்து இலங்கையின் கொழும்பு நோக்கிச் சென்ற விமானத்தில் 85 வயது முதியவர் பயணித்துள்ளார். தெற்கு கலிபோர்னியாவை சேர்ந்த ஓய்வுபெற்ற இருதயநோய் நிபுணரான டாக்டர் அசோக ஜெயவீரா கத்தார் ஏர்வேஸ் விமானத்தில் சென்றுள்ளார். லாஸ் ஏஞ்சல்ஸிலிருந்து இருந்து இலங்கை செல்ல 15.5 மணி நேரம் ஆகும்.

Vegetarian Passenger handed over non veg meals on Qatar Flight Family Sues Over Meal Negligence

சைவ உணவுக்கு பதில் அசைவம்

இந்த பயணத்தில் அவர் தனக்கு சைவ உணவு தான் வேண்டும் என சொல்லி புக் செய்துள்ளார். இருப்பினும், விமானப் பணிப்பெண் ஒருவர் சைவ உணவு இல்லை என்று கூறி, அசைவ உணவை வழங்கியுள்ளார். அசைவ உணவில் இருந்த இறைச்சியை தவிர்த்துவிட்டு மற்றவற்றை மட்டும் சாப்பிடுமாறு விமானப் பணிப்பெண் அந்த முதியவரிடம் கூறியுள்ளார்.

அவரும் ஓகே என சொல்லி, இறைச்சியை தவிர்த்துவிட்டு சாப்பிட முயன்றுள்ளார். அப்போது ஜெயவீராவுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு சுயநினைவை இழந்தார். விமான ஊழியர்கள் உதவிக்கு விரைந்தனர். மெட்ஏர் நிறுவனத்தின் மருத்துவ நிபுணர்களும் டெலி ஆலோசனை வழங்கினர். இருப்பினும், ஜெயவீராவின் உடல்நிலை மோசமடைந்தது. இதையடுத்து, விமானம் ஸ்காட்லாந்தின் எடின்பர்க்கில் தரையிறங்கியது.

உயிரிழப்பு

ஜெயவீரா உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். துரதிர்ஷ்டவசமாக அவர் உயிரிழந்தார். உணவு அல்லது திரவம் நுரையீரலுக்குள் போனதாகவும் இதனால் ஏற்பட்ட 'ஆஸ்பிரேஷன் நிமோனியா' என்ற நுரையீரல் தொற்று காரணமாகவே அவர் உயிரிழந்தார். அதாவது சைவ உணவுக்கு பதிலாக அசைவ உணவை விமான குழு கொடுத்த நிலையில், அது தவறுதலாக நுரையீரலுக்கு சென்று அதனால் ஏற்பட்ட ஆஸ்பிரேஷன் நிமோனியா காரணமாகவே அவர் உயிரிழந்துள்ளார்.

இழப்பீடு கேட்டு வழக்கு

இந்தச் சம்பவம் 2023ம் ஆண்டு ஜூன் 30ம் தேதி நடந்துள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாக, ஜெயவீராவின் மகன் சூர்யா ஜெயவீரா, கத்தர் ஏர்வேஸ் மீது கவனக்குறைவான சேவை மற்றும் மருத்துவ உதவி வழங்கத் தவறியதாகக் குற்றம் சாட்டி வழக்கு தொடர்ந்துள்ளார். இதன் காரணமாகவே இந்தச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ஏற்கனவே புக் செய்த சைவ உணவை வழங்கத் தவறியது, அவசர கால மருத்துவ உதவியை வழங்காதது என கத்தார் ஏர்வேஸ் மீது சூர்யா ஜெயவீரா புகாரளித்திருந்தார்.

இதனால் குறைந்தபட்ச இழப்பீட்டு தொகையாக $128,821 வழங்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார். சர்வதேச விமான பயணங்களுக்கு இழப்பீடு வழங்குவது தொடர்பான விதிகள் மாண்ட்ரீல் மாநாட்டில் விதிக்கப்பட்டிருந்தது. மாண்ட்ரீல் மாநாட்டின் உறுப்பினர்களாக கத்தரும் அமெரிக்காவும் இருப்பதால், அதன் விதிகள் கத்தார் ஏர்வேஸுக்கும் பொருந்தும் என சுட்டிக்காட்டியே அவர் இழப்பீடு கோரிக்கை விடுத்துள்ளார்.

முதல்முறை இல்லை

அதேநேரம் விமானத்தில் உணவு தொடர்பாக குளறுபடிகள் நடப்பது இது முதல்முறை இல்லை. பிரிட்டிஷ் ரியாலிட்டி நட்சத்திரம் ஜாக் ஃபோலர், தீவிரமான நட்ஸ் அலர்ஜி கொண்டவர். கடந்த ஆண்டு கத்தர் ஏர்வேஸ் விமானத்தில் துபாய் சென்றபோது, நட்ஸ் இருக்கும் சிக்கனை அவருக்கு கொடுத்துள்ளனர். இதனால் அவரது உடல்நிலை மிக மோசமாக பாதிக்கப்பட்ட நிலையில், அவர் மரணத்தின் விளிம்பு வரை சென்றார். இதற்கு முன்பு ஒரு முறையும் அவருக்கு நட்ஸ் இருக்கும் ஐஸ்கிரீமை சாப்பிட்ட போதும் அவருக்கு இதேபோன்ற பாதிப்பு ஏற்பட்டிருந்தது.

அதேபோல சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்றில், கடல் உணவு அலர்ஜி கொண்ட 41 வயது பெண் ஒருவருக்கு இறால் பரிமாறப்பட்டதால் உடல்நலம் பாதிக்கப்பட்டார். இதனால் விமானம் அவசர அவசரமாக பாரிஸில் தரையிறங்கி இருந்தது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+