திடீரென கொட்டிய பணமழை.. லாரியில் பெட்டி பெட்டியாக பணத்தை கொண்டு வந்து அள்ளி வீசிய இளைஞர்! பின்னணி
கராகஸ்: வெனிசுலா நாட்டில் இளைஞர் ஒருவர் லாரியில் பெட்டி பெட்டியாக அந்த நாட்டின் பணத்தை எடுத்து சென்று அள்ளி வீசியதும், அதனை பார்த்து பொதுமக்கள் உற்சாகமடையும் வீடியோ இணையதளங்களில் வெளியாகி பரவி வருகிறது. இந்த வீடியோவின் பின்னணி குறித்த பரபரப்பான தகவல் வெளியாகி உள்ளது.
வடஅமெரிக்கா நாடாக வெனிசுலா உள்ளது. இந்த நாட்டின் மக்கள்தொகை மிகவும் குறைவு தான். நாட்டின் மொத்த மக்கள்தொகை என்பது 2.8 கோடியாக தான் உள்ளது. வெனிசுலா அதிபராக நிகோலஸ் மதுரோ உள்ளார்.

இவர் 2013ம் ஆண்டு முதல் வெனிசுலாவின் அதிபராக பொறுப்பு வகித்து வருகிறார். ஒரு காலத்தில் வளமிக்க நாடாக வெனிசுலா இருந்தது. ஆனால் தற்போது வெனிசுலா மிகவும் மோசமான நிலையில் உள்ளது. அந்த நாட்டின் பணவீக்கம் அதிகமாக உள்ளது. நம் நாட்டின் ஒரு ரூபாய் என்பது வெனிசுலாவின் 1381 பொலிவர்ஸ் (வெனிசுலா கரன்சி) சமமாகும்.
வெனிசுலாவில் முந்தைய ஆண்டுகளில் 63 ஆயிரம் சதவீதம் வரை பணவீக்கம் இருந்தது. தற்போது அது குறைந்துள்ளது. இருப்பினும் இன்னும் இயல்பு நிலைக்கு வரவில்லை. 2026ல் வெனிசுலாவின் பணவீக்கம் 225 சதவீதமாக இருக்கும் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. பணவீக்கம் பலமடங்கு குறைந்தாலும் கூட அது மக்களுக்கு எந்த வகையிலும் இன்னும் பலன் தரவில்லை.
தற்போதும் பணவீக்கத்தால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். பால், மருந்து உள்பட பிற அத்தியாவசிய பொருட்களின் விலைகள் உச்சம் தொட்டுள்ளன. இருப்பினும் விலை உயர்வுக்கு ஏற்ப நாட்டு மக்களுக்கு சம்பளம் கிடைப்பது இல்லை. இந்த பண வீக்கத்துக்கு வெனிசுலா அரசின் நிர்வாக குறைபாடு அமெரிக்காவுடனான மோதல், அமெரிக்காவின்பொருளாதார தடைகள் உள்ளிட்டவை தான் முக்கிய காரணமாக உள்ளன.
இதனால் எதிர்க்கட்சிகள் அதிபர் நிகோலஸ் மதுரோவிற்கு எதிராக போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றன. அதற்கு மறைமுகமாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சப்போர்ட் செய்வதாக குற்றச்சாட்டுகள் உள்ளன. இந்நிலையில் தான் இணையதளத்தில் தற்போது வீடியோ ஒன்று பரவி வருகிறது.
அதாவது லாரியில் ஒருவர் வெனிசுலா நாட்டின் பணத்தை பெடட்டி பெட்டியாக கொண்டு வருகிறார். அதனை அவர் அள்ளி அள்ளி வீசுகிறார். பணமழையாக பணத்தாள்கள் கொட்டுகிறது. இதுதொடர்பான வீடியோ இணையதளங்களில் வெளியாகி பரவி வருகிறது. இதனை பார்க்கும் பலரும் ஆச்சரியமடைந்துள்ளனர்.
இந்த சம்பவத்தின் பின்னணி என்னவென்றால் மக்களின் போராட்டம் தான். அதாவது வெனிசுலாவில் நிலவும் பணவீக்கத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் பல இடங்களில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
அந்த போராட்டத்தின்போது தான் ஒருவர் அந்த நாட்டின் பணத்தை லாரியில் கொண்டு சென்று அள்ளி வீசுகிறார். நாட்டில் நிலவும் பணவீக்கத்தால் பணத்துக்கு மதிப்பு இல்லாத நிலை உள்ளதை காட்டும் நோக்கில் இந்த செயலில் இளைஞர் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications