Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

காலி.. சீரியஸா போயிடுச்சே விஷயம்.. அதுவும் ஒரு பாக்கெட்டுக்காக.. இப்படி அடிச்சிக்கிறாங்களே.. கொடுமை

பாகிஸ்தான் நாட்டில் கோதுமை மாவுக்கு பஞ்சம் ஏற்பட்டு, விலையும் கடுமையாக உயர்ந்து வருகிறது

Subscribe to Oneindia Tamil

இஸ்லாமாபாத்: ஒரு கிலோகோதுமை மாவு, கிலோ 160 ரூபாயாம்.. நடுத்தெருவிலேயே பாகிஸ்தானிய மக்கள் கட்டிப்புரண்டு சண்டை போடும் நிலைமை தலைதூக்கி விட்டது.. இது உலக நாடுகளையும் திரும்பி பார்க்க வைத்து வருகிறது.

இதற்கு முன்பு எப்போதுமே இல்லாத அளவுக்கு பாகிஸ்தானில், கடுமையான உணவு பஞ்சம் எற்பட்டுள்ளது.. எனவே, பணவீக்கம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளையும் இந்த நாடு எதிர்கொண்டு வருகிறது..

அதனால்தான், உணவு பொருட்களின் விலை உச்சத்துக்கும் எகிறி வருகிறது.. ஒவ்வொரு உணவு பொருட்களின் விலை உயர்வையும் மக்கள் கதிகலங்கி போயுள்ளனர்..

 கோழிமுட்டை

கோழிமுட்டை

இஸ்லாமாபாத் மற்றும் பெஷாவரில் 10 கிலோ மூட்டை ரூ.1500க்கும், 20 கிலோ மூட்டை ரூ.2800க்கும் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த ஒரு மாதத்தில் சிக்கன் விலை கிலோவுக்கு ரூ.300 வரை அதிகரித்துள்ளது... சில நாட்களுக்கு முன்பு, ஒரு கிலோ சிக்கன் ரூ.440-480 ஆக இருந்தது.. ஆனால், இப்போது ஒரு கிலோ ரூ.650-700 ஆக உள்ளது. சிக்கன் விலை உயர்வுக்கு காரணம் அரசாங்கம்தான் என்கிறார்கள்.. இதுகுறித்த செய்திகள் தினமும் வந்து கொண்டிருக்கிறது என்றாலும், பாகிஸ்தான் மக்கள் உச்சக்கட்ட கொந்தளிப்பில் உள்ளனர். காரணம், அவர்களின் அடிப்படை உணவான கோதுமைக்கு பஞ்சம் ஏற்பட்டுள்ளது.

 பஞ்சமோ பஞ்சம்

பஞ்சமோ பஞ்சம்

கோதுமை இல்லாமல் அவர்களின் அன்றாட வாழ்வு நகராது... ஆனால், அந்த கோதுமை மாவின் விலை உயர்ந்துவிட்டதால் கடுமையான மக்கள் விழிபிதுங்கி உள்ளனர்.. கராச்சியில், ஒருகிலோ கோதுமை மாவு ருபாய் 140 முதல் 160 வரை விற்கப்படுகிறதாம்.. மாவின் விலை அதிகரிப்பு, அதிக மின்சார செலவு மற்றும் எரிசக்தி பற்றாக்குறை போன்ற காரணங்களால் விலையை அதிகரிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாக, வியாபாரிகள் சொல்கிறார்கள்.. பாகிஸ்தான் அரசு மற்றும் பஞ்சாப் அரசாங்கங்களுக்கு இடையிலான மோதல் பாகிஸ்தானில் கோதுமை நெருக்கடிக்கு காரணம் என்றும் கூறப்படுகின்றன.

 கோதுமை பாக்கெட்

கோதுமை பாக்கெட்

அதாவது, பஞ்சாப் உணவுத் துறையால் எவ்வளவு கோதுமை இறக்குமதி செய்யப்பட வேண்டும் என்பதை சரியாக மதிப்பிட முடியவில்லையாம்.. நாட்டின் பல பகுதிகளில் பொதுமக்களுக்கு குறைந்த விலையில் மாவு பொட்டலங்களை அரசாங்கமே வழங்கி வருகிறது என்றாலும், கோதுமை பஞ்சம் தற்போது விஸ்வரூபமெடுத்துள்ளது. கோதுமை மாவு கிடைக்காமல், பற்றாக்குறை நிலவுகிறது.. கோதுமை என்பதால், தினசரி உணவு தவிர, பேக்கரிக்கும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.. இதனால் பேக்கரி பொருட்களின் விலையும் உயர்ந்துள்ளது..

 பேக்கரி ஐட்டம்

பேக்கரி ஐட்டம்

கராச்சியில் மாவு ஒரு கிலோ ரூ.140 முதல் ஒரு கிலோ ரூ.160 வரையும், இஸ்லாமாபாத் மற்றும் பெஷாவரில், 10 கிலோ மாவு ரூ.1,500 க்கும், 20 கிலோ மாவு மூட்டை ரூ.2,800 க்கும் விற்கப்படுகிறது.. பஞ்சாப் மாகாணத்தில் உள்ள ஆலை உரிமையாளர்கள் மாவின் விலையை ஒரு கிலோ ரூ .160 ஆக உயர்த்தியுள்ளனர்... கைபர் பக்துன்க்வாவில் 20 கிலோகிராம் மாவு ஒரு பாக்கெட் ரூ .3100 க்கு விற்கப்படுவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

 சீரியஸா போச்சு

சீரியஸா போச்சு

பலுசிஸ்தான் உணவு அமைச்சர் ஜமரக் அச்சக்சாய், கோதுமை இருப்பு "சுத்தமாக காலியாகிவிட்டது விட்டது" என்றும், பலுசிஸ்தானுக்கு உடனடியாக 400,000 மூட்டை கோதுமை தேவை, இல்லாவிட்டால் நிலைமை சீரியஸாகிவிடும் என்றும் எச்சரித்துள்ளார். மானிய விலையில் கிடைக்கும் மாவு மூட்டைகளை பெறுவதற்காக, ஆயிரக்கணக்கான மக்கள் தினமும் கால்கடுக்கில் நிற்கிறார்கள்.. குறிப்பாக, கைபர் பன்துன்க்வா, சிந்து, பலுசிஸ்தான் மாகாணங்களின் பல பகுதிகளிலும் கோதுமை மாவை, பெறுவதற்காக மக்கள் முண்டியடித்தும் நெரிசலில் சிக்கி கொள்ளும் நிலைமையும் வந்துவிட்டது..

 தள்ளுமுள்ளு

தள்ளுமுள்ளு

இப்படிப்பட்ட சூழலில்தான், 10 கிலோ மாவு பாக்கெட்டை பெறுவற்காக, பாகிஸ்தானியர்கள் எப்படியெல்லாம் போராடுகிறார்கள் என்பதை சொல்லும் சில அதிர்ச்சியூட்டும் வீடியோக்களும் இணையத்தில் வெளியாகி கொண்டிருக்கின்றன. அந்த வீடியோவில், மினி லாரிகள், வேன்கள் நிற்க வைக்கப்பட்டுள்ளன.. அவைகளில்தான் கோதுமை மாவு பாக்கெட்கள் விநியோகிப்பதற்காக வைக்கப்பட்டுள்ளன.. இவைகளை பெறுவதற்காக, மக்கள் திரண்டு வருகிறார்கள்.. ஆயுதமேந்திய போலீசார் பாதுகாக்கப்பட்ட மினி லாரிகள் மற்றும் வேன்கள் மாவை விநியோகிக்கிறார்கள்.. அந்த மாவை பெறுவதற்காக வாகனங்களை சுற்றி மக்கள் கூடிவிடுவதால், கடும் நெரிசல் ஏற்பட்டுவிடுகிறது.. பிறகு, தள்ளுமுள்ளு ஏற்பட்டு, அடிதடி சண்டை வரை போய்விடுகிறது.. இந்த காட்சிகள் வீடியோவாக வெளிவந்து கிலியை தந்து கெர்ணடிருக்கின்றன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+