சங்கடமா இருக்கு.. வெட்கமா இருக்கு.. "யாசகம்" பெறும் நிலைமை வந்துடுச்சே.. மனம் வெதும்பிய பாக்.பிரதமர்
பாகிஸ்தான் நாட்டில் கோதுமை மாவுக்கு பஞ்சம் ஏற்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது
இஸ்லாமாபாத்: அணு ஆயுத வல்லமை படைத்த நாடு, பொருளாதாரத்திற்கு மற்ற நாடுகளை கெஞ்சுவது வெட்கக்கேடானது என்று பிரதமர் ஷபாஸ் ஷெரிப், தன்னுடைய கவலையை வெளிப்படுத்தி உள்ளார். இதற்கு என்ன காரணம்?
Recommended Video
இதற்கு முன்பு எப்போதுமே இல்லாத அளவுக்கு பாகிஸ்தானில், கடுமையான உணவு பஞ்சம் எற்பட்டுள்ளது.. அதனால், பணவீக்கம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளையும் இந்த நாடு எதிர்கொண்டு வருகிறது..
இதன் விளைவாக, உணவு பொருட்களின் விலை உச்சத்துக்கும் எகிறி வருகிறது.. ஒவ்வொரு உணவு பொருட்களின் விலை உயர்வையும் கண்டு மக்கள் கதிகலங்கி போயுள்ளனர்..

கோழிமுட்டை
இஸ்லாமாபாத் மற்றும் பெஷாவரில் 10 கிலோ மூட்டை ரூ.1500க்கும், 20 கிலோ மூட்டை ரூ.2800க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சிக்கன் ஒரு கிலோ ரூ.650-700 ஆக உள்ளது. சிக்கன் விலை உயர்வுக்கு காரணம் அரசாங்கம்தான் என்கிறார்கள்.. இதுகுறித்த செய்திகள் தினமும் வந்து கொண்டிருக்கிறது என்றாலும், பாகிஸ்தான் மக்கள் உச்சக்கட்ட கொந்தளிப்பில் உள்ளனர். காரணம், அவர்களின் அடிப்படை உணவான கோதுமைக்கு பஞ்சம் ஏற்பட்டுள்ளது. அதைவிட முக்கியமாக, கோதுமை இல்லாமல் இம்மக்களின் அன்றாட வாழ்வு நகராது... ஆனால், அந்த கோதுமை மாவின் விலை உயர்ந்துவிட்டதால் கடுமையான மக்கள் விழிபிதுங்கி உள்ளனர்..

பஞ்சமோ பஞ்சம்
கராச்சியில், ஒருகிலோ கோதுமை மாவு ருபாய் 140 முதல் 160 வரை விற்கப்படுகிறதாம்.. மாவின் விலை அதிகரிப்பு, அதிக மின்சார செலவு மற்றும் எரிசக்தி பற்றாக்குறை போன்ற காரணங்களால் விலையை அதிகரிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாக, வியாபாரிகள் சொல்கிறார்கள்.. பாகிஸ்தான் அரசு மற்றும் பஞ்சாப் அரசாங்கங்களுக்கு இடையிலான மோதல் பாகிஸ்தானில் கோதுமை நெருக்கடிக்கு காரணம் என்று இன்னொரு காரணம் சொல்லப்படுகிறது. ஏனென்றால், பஞ்சாப் உணவுத் துறையால் எவ்வளவு கோதுமை இறக்குமதி செய்யப்பட வேண்டும் என்பதை சரியாக மதிப்பிட முடியவில்லையாம்..

மாவு பொட்டலம்
நாட்டின் பல பகுதிகளில் பொதுமக்களுக்கு குறைந்த விலையில் மாவு பொட்டலங்களை அரசாங்கமே வழங்கி வருகிறது என்றாலும், கோதுமை பஞ்சம் தற்போது விஸ்வரூபமெடுத்துள்ளது. கோதுமை மாவு கிடைக்காமல், பற்றாக்குறை நிலவுகிறது.. கோதுமை என்பதால், தினசரி உணவு தவிர, பேக்கரிக்கும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.. இதனால் பேக்கரி பொருட்களின் விலையும் உயர்ந்துள்ளது.. கராச்சியில் மாவு ஒரு கிலோ ரூ.140 முதல் ஒரு கிலோ ரூ.160 வரையும், இஸ்லாமாபாத் மற்றும் பெஷாவரில், 10 கிலோ மாவு ரூ.1,500 க்கும், 20 கிலோ மாவு மூட்டை ரூ.3100 க்கும் விற்கப்படுகிறது..

முண்டியத்த கூட்டம்
மானிய விலையில் கிடைக்கும் மாவு மூட்டைகளை பெறுவதற்காக, ஆயிரக்கணக்கான மக்கள் தினமும் கால்கடுக்க நிற்கிறார்கள்.. குறிப்பாக, கைபர் பன்துன்க்வா, சிந்து, பலுசிஸ்தான் மாகாணங்களின் பல பகுதிகளிலும் கோதுமை மாவை, பெறுவதற்காக மக்கள் முண்டியடித்தும் நெரிசலில் சிக்கி கொள்ளும் நிலைமையும் வந்துவிட்டது. அது சம்பந்தப்பட்ட வீடியோ ஒன்றும் சில நாட்களுக்கு முன்பு வெளியானது.. 10 கிலோ மாவு பாக்கெட்டை பெறுவற்காக, பாகிஸ்தானியர்கள் எப்படியெல்லாம் போராடுகிறார்கள் என்பதை சொல்லும் சில அதிர்ச்சியூட்டும் வீடியோதான் அது.. மாவை பெறுவதற்காக வாகனங்களை சுற்றி மக்கள் கூடிவிடுவதால், கடும் நெரிசல் ஏற்பட்டுவிடுகிறது.. இதில் உச்சக்கட்டமாக, அதிக அளவிலான மக்கள் கூடியதால் நெரிசல் ஏற்பட்டு 5 பேர் பலியான சம்பவம், மற்ற நாடுகளை அதிர செய்து வருகின்றன.

கெஞ்சுவது வெட்கக்கேடு
மொத்தத்தில், கடுமையான தட்டுப்பாடுகளால் அங்கு விலைவாசி 23 சதவீதம் அதிகரித்திருக்கிறது. அதேபோல, அரசால் மானிய விலைக்கு வழங்கப்படும் கோதுமை, சர்க்கரை, நெய் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை 62 சதவீதம் வரை உயர்ந்திருக்கிறது... இந்த நிலை தொடர்ந்தால், நாட்டின் அந்நிய செலாவணி கையிருப்பு குறைந்து வருவது, அந்நாட்டை திவால் நிலைக்கு கொண்டுச் செல்லும் என்று பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கிறார்கள்.. இப்படிப்பட்ட சூழலில்தான், ஷபாஸ் ஷெரீப் தன்னுடைய கவலையை வெளிப்படுத்தி உள்ளார்.. அணு ஆயுத வல்லமை படைத்த நாடு, பொருளாதாரத்திற்கு மற்ற நாடுகளை கெஞ்சுவது வெட்க கேடானது என்று வேதனை தெரிவித்துள்ளார்.

சேலஞ்ச்
பாகிஸ்தான் நிர்வாக சேவையின் (பிஏஎஸ்) தகுதிக்கான அதிகாரிகளின் தேர்ச்சி விழாவில் பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரீப் உரையாற்றினார்.. அப்போது, "அணுசக்தி நாடு, பொருளாதாரம் வீழ்ச்சியடைந்து வரும்நிலையில் யாசகம் பெற வேண்டிய நிலை ஏற்பட்டிருப்பது வெட்கக்கேடானது.. கடன் கேட்பது மிகவும் சங்கடமாக இருக்கிறது. பாகிஸ்தானின் பொருளாதார சவால்களை எதிர்கொள்ள வெளிநாட்டு கடன்களை நாடுவது சரியான தீர்வாகாது. ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (UAE) அதிபர் ஷேக் முகமது பின் சயீத், பாகிஸ்தானுக்கு மேலும் 1 பில்லியன் டாலர் கடன் வழங்குவதாக அறிவித்துள்ளார்.. அதற்காக நன்றி தெரிவித்துக்கொள்கிறோம்" என்றும் அவர் கூறியுள்ளார்.

ஆட்டம் கண்டது
கொரோனா தொற்று பரவ ஆரம்பித்ததுமே, உலக நாடுகளில் வர்த்தகம் பாதித்ததுடன், அது அனைத்து நாட்டின் பொருளாதாரத்தையும் வேரோடு அசைத்து பார்த்தது.. அதில் இருந்து உலகம் மெல்ல மெல்ல மீண்டு வந்த நிலையில்தான், உக்ரைன் -ரஷ்யா போர் ஆரம்பமாகி விட்டது.. இது மீண்டும் ஒரு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.. இந்த விவகாரம் நடந்து கொண்டிருக்கும்போதே, இலங்கையில் பொருளாதாரம் ஆட்டம் கண்டது.. அடுத்து இப்போது பாகிஸ்தான் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது.. இது உலக நாடுகளை கவலை கொள்ளவும் செய்து வருகின்றன.
-
எல்லாம் நாடக மேடைதான்.. போர் நிறுத்தத்திற்கு நோ சொன்ன ஈரான்.. கோடிகளில் லாபம் பார்த்த ஜாம்பவான்கள் -
தமிழ்நாட்டில் 27 வயது தாசில்தார் சம்பளம்.. 37 வயதில் எவ்வளவு மாறியிருக்கும் தெரியுமா? -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்!












Click it and Unblock the Notifications