9 முறை MLA... 5 முறை MP... 6 முறை முதலமைச்சர்... காங்கிரஸ் மூத்த தலைவர் வீர பத்ர சிங் காலமானார்..!
சிம்லா: ஹிமாச்சல் பிரதேசத்தின் முன்னாள் முதலமைச்சரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான வீர பத்ர சிங் உடல்நலக் குறைவால் இன்று அதிகாலை காலமானார். அவருக்கு வயது 87.
9 முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்த இவர் 6 முறை ஹிமாச்சல் பிரதேச மாநிலத்தின் முதலமைச்சராக பதவி வகித்திருக்கிறார்.

அரசியலில் ஆழ்ந்த அனுபவம் கொண்ட இவர், இந்திராகாந்தி காலம் தொடங்கி ராகுல் வரை காங்கிரஸ் வளர்ச்சிக்காக பல்வேறு ஆலோசனைகளை வழங்கியவர்.
இதனிடையே 1962, 1967, 1971, 1982, 2009 என 5 முறை நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்திருக்கிறார். ஹிமாச்சல் பிரதேசத்தில் காங்கிரஸ் கொடி ஓங்கிப் பறக்கும் வகையில் சாணக்யத்தனத்துடன் அரசியல் செய்தவர் வீர பத்ர சிங்.
87 வயதாகும் வீர பத்ர சிங் கடந்த ஏப்ரல் மாதம் இறுதியில் உடல்நலக் குறைவு காரணமாக சிம்லாவில் உள்ள இந்திராகாந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இரண்டு மாத காலம் மருத்துவமனையிலேயே தங்கி சிகிச்சை பெற்று வந்த அவருக்கு கடந்த திங்கள்கிழமை மூச்சுத்திணறல் ஏற்பட்டிருக்கிறது.
இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை 4 மணியளவில் வீர பத்ர சிங்கின் உயிர் பிரிந்தது. இதையடுத்து பொதுமக்கள் பார்வைக்காக உடல் கொண்டு செல்லப்படுவதால் எம்பார்மிங் செய்யப்பட்டது.
வீர பத்ர சிங்கின் மறைவுக்கு காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications