உணவைத் திருடியதற்கு தண்டனை... உயிருடன் எரித்துக் கொல்லப்பட்ட சிறுவன்... வைரலாகும் பகீர் வீடியோ!
திருட்டு செயலில் ஈடுபட்டதாக சிறுவன் ஒருவனை கொடூரமாக எரித்துக் கொல்லும் வீடியோ சமூகவலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.
அபுஜா: நைஜீரிய கடைகளில் உணவைத் திருடியதாக குற்றம் சாட்டப்பட்ட சிறுவன் கொடூரமாக எரித்துக் கொல்லப்பட்ட வீடியோ இணையத்தில் வைரலாகப் பரவி வருகிறது.
நைஜீரியாவின் லாகோஸ் பகுதியில் உள்ள கடை வீதியில் இந்த சம்பவம் நடந்ததாகக் கூறப்படுகிறது. எரித்துக் கொல்லப்பட்ட சிறுவனுக்கு 7 முதல் 15 வயதிற்குள் இருக்கும்.

கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் இருக்கும் அச்சிறுவன் மீது பொதுமக்கள் வெறித்தனமாக தாக்குதல் நடத்துகின்றனர். தொடர்ந்து தன்னை விட்டு விடும்படி அச்சிறுவன் கெஞ்சிக் கொண்டே இருக்கிறான்.
ஆனால், சிறிதும் மனம் இளகாத அந்தக் கும்பல், பெட்ரோல் நிரப்பப்பட்ட டயரை சிறுவனின் கழுத்தில் மாட்டி தீ வைத்து கொளுத்தியுள்ளனர். இதில் பரிதாபமாக அச்சிறுவன் உயிரிழக்கிறான்.
இதற்கு முன்னர் சிலமுறை அப்பகுதி கடைகளில் உணவு, செல்போன் உள்ளிட்டவற்றை அச்சிறுவன் திருடியதாக கூறப்படுகிறது. ஆனால், இந்த சம்பவம் குறித்து நைஜீரியா காவல்துறை கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை.
மொபைல் போனில் இந்த சம்பவம் படமாக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகப் பரவி வருகிறது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications