துணை விமானி லுபிட்ஸ் சிறுவனாக இருக்கையில் கிளைடர் ஓட்டிய வீடியோவை பார்த்தீங்களா?
டுசல்டார்ப்: ஜெர்மன்விங்ஸ் விமானத்தை விபத்துக்குள்ளாக்கிய துணை விமானி லுபிட்ஸ் பதின்வயதில் கிளைடர் எனப்படும் சிறிய ரக விமானத்தை ஓட்டிப் பழகியபோது எடுக்கப்பட்ட வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.
ஸ்பெயினில் இருந்து ஜெர்மனி சென்ற ஜெர்மன்விங்ஸ் விமானத்தை அதன் துணை விமானி ஆன்ட்ரியஸ் லுபிட்ஸ்(28) வேண்டும் என்றே பிரான்சில் உள்ள ஆல்ப்ஸ் மலையின் மீது மோதி விபத்துக்குள்ளாக்கினார். இதில் விமானத்தில் இருந்த லுபிட்ஸ் உள்பட 149 பேர் பலியாகினர். விமானம் நொறுங்கி விழுந்த இடத்தில் மீட்பு பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.
{ventuno}
இந்நிலையில் லுபிட்ஸ் பதின்வயதில் கிளைடர் எனப்படும் சிறிய ரக விமானத்தை ஓட்டிப் பழகியபோது எடுக்கப்பட்ட வீடியோ தற்போது வெளியாகி அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. சிறுவனாக இருக்கும் போதில் இருந்தே விமானி ஆக வேண்டும் என்ற கனவுடன் இருந்தவர் லுபிட்ஸ்.
லுபிட்ஸின் தந்தை பிசினிஸ் எக்சிகியூட்டிவ், தாய் பியானா ஆசிரியை. நிதி நெருக்கடி எதுவும் இல்லாததால் லுபிட்ஸ் தனது 14 வயதிலேயே விமானம் ஓட்டும் பயிற்சி வகுப்பில் சேர்ந்துள்ளார். துடிப்பான சிறுவனாக இருந்த லுபிடிஸ் லுப்தான்ஸா நிறுவனம் அளித்த பயிற்சி வகுப்பில் சேர்ந்து தேர்ச்சி பெற்றுள்ளார். பயிற்சி முடிந்து கடந்த 2013ம் ஆண்டில் அவர் லுப்தான்ஸாவின் கிளை நிறுவனமான ஜெர்மன்விங்ஸில் சேர்ந்துள்ளார்.
லுபிட்ஸ் மன அழுத்தம், கண் பார்வை கோளாறு, வெளியே சொல்லாத நோய் ஆகியவற்றால் அவதிப்பட்டு வந்துள்ளது விசாரணையில் தெரிய வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications