வேகமாக சென்று தாக்கிய ஈரான் ஏவுகணை.. நொறுங்கி விழுந்த உக்ரைன் விமானம்.. அதிர வைக்கும் வீடியோ!
ஈரானில் விழுந்து விபத்துக்கு உள்ளான உக்ரைன் விமானம் ஏவுகணை தாக்குதல் மூலம் சுட்டு வீழ்த்தப்பட்டதாக புகார் எழுந்துள்ளது.
Recommended Video
டெஹ்ரான்: ஈரானில் விழுந்து விபத்துக்கு உள்ளான உக்ரைன் விமானம் ஏவுகணை தாக்குதல் மூலம் சுட்டு வீழ்த்தப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. இதை உறுதிப்படுத்தும் வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது.
ஈரானில் இருந்து பறந்த உக்ரைன் நாட்டு பயணிகள் விமானம் இரண்டு நாட்களுக்கு முன் விபத்துக்குள்ளானது. டெஹ்ரான் விமான நிலையத்தில் இருந்து பஹ்ரைன் நோக்கி அந்த போயிங் 737 -800 விமானம் புறப்பட்டது. இது உக்ரைன் நாட்டு அரசுக்கு சொந்தமான விமானம் ஆகும்.
விமானத்தில் பயணித்த 170 பேரும் பலியானார்கள். தொழில்நுட்ப கோளாறு காரணமாக விபத்து நடந்து இருக்கலாம் என்று கூறப்பட்டது. ஆனால் ஈரான் நடத்திய ராக்கெட் தாக்குதலால் நிகழ்ந்து இருக்கலாம் என்று புகார் எழுந்துள்ளது.
|
என்ன வீடியோ
இந்த விமானம் எப்படி விழுந்து நொறுங்கியது என்பது தொடர்பாக ஏற்கனவே வீடியோ வெளியானது. எஞ்சின் தீ பற்றி எரிந்து அப்படியே தரையை நோக்கி வேகமாக வருகிறது. பின் கீழே விழுகிறது. விமானம் விழுந்த நொடியில் பெரிய அளவில் வெடித்து சிதறுகிறது. இந்த சம்பவம் அப்படியே வீடியோவில் பதிவாகி உள்ளது. இதன் மூலம் விமானத்தின் எஞ்சினில் பெரிய அளவில் தீ பிடித்து இருந்தது உறுதியாகி உள்ளது.

என்ன நிலை
இந்த நிலையில்தான் தற்போது இன்னொரு வீடியோ இந்த சம்பவம் குறித்து வெளியாகி உள்ளது. அதில், இந்த விமானம் தானாக விழவில்லை. விமானம் கீழே விழுவதற்கு முன் சிறிய ஒளி கீற்று அதை போய் மோதியுள்ளது. ஈரான் செலுத்திய ஏவுகணைதான் இந்த ஒளி கீற்று.
|
விபத்து
இதுதான் விமானத்தை மோதி இருக்கிறது.மொத்தமாக விமானத்தை அந்த ஏவுகணை தாக்காமல் உரசி சென்றுள்ளது. இதனால் அதன் எஞ்சின் தீ பிடித்து வெடித்து உள்ளது. இதன்பின் விமானம் கீழே விழுந்து சிதறி உள்ளது.

ஏவுகணை தாக்குதல்
இந்த ஏவுகணை தாக்குதலால்தான் ஈரானில் இருந்து புறப்பட்ட உக்ரைன் விமானம் விழுந்து நொறுங்கியது. இதனால்தான் 176 பேர் பலியானார்கள். இதனால் தற்போது ஈரான் மாபெரும் பிரச்சனையில் சிக்கி இருக்கிறது. இந்த வீடியோவை கனடா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் சோதனை செய்து வருகிறது.

சிக்கல்
ஏவுகணை தாக்குதல் மூலம்தான் விமானம் விழுந்து நொறுங்கியது என்று நிரூபிக்கப்பட்டால் அது பெரிய சிக்கலாக முடியும். ஏனென்றால் உக்ரைன் விமானம் விழுந்ததில் 170 அப்பாவி பொதுமக்கள் மரணம் அடைந்தனர். இந்த பழி மொத்தமும் ஈரான் மீதுதான் விழும் என்பது குறிப்பிடத்தக்கது.
-
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
மீண்டும் சொதப்பிய திமுக.. திணறுகிறார்களே.. லாவகமாக நர்ரேட்டிவ் செட் செய்த விஜய்.. கவனிச்சீங்களா? -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
ஸ்டாலின் உடனே கொடுத்த கிரீன் சிக்னல்.. விஜய்யை மதிமுக துரை வைகோ சந்தித்த அடுத்த நிமிடமே அதிரடி? -
மினி பஸ்சில் லைட்டை ஆப் செய்து.. 45 நிமிடம் அட்டகாசம்! கிளம்பும்போது கோவை ஜோடி எடுத்து சென்ற பொருள்?












Click it and Unblock the Notifications