ஜெனிவா அணு ஆராய்ச்சி மையத்தில் சிவன் சிலைக்கு எதிரே இளம் பெண் நரபலி? வைரலாகும் வீடியோவால் அதிர்ச்சி
ஜெனிவா: ஜெனிவாவிலுள்ள ஐரோப்பிய அணு ஆராய்ச்சி அலுவலகத்தில் நரபலி கொடுக்கப்பட்டதாக வெளியாகியுள்ள வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சுவிட்சர்லாந்தில் உள்ள ஜெனிவா நகரில் உள்ளது, ஐரோப்பிய அணு ஆராய்ச்சி அலுவலகம் CERN (Europen Organisation for Nuclear Research). இதன் வளாகத்தில் சிவ பெருமானின் பிரமாண்ட நடராஜர் வடிவ சிலை இன்று உள்ளது. பிக் பேங்க் எனப்படும் அணு பிளவுக்கு, ஆதாரம் நடராஜர் வடிவம் என்ற நம்பிக்கையில், இந்த சிலை அணு ஆய்வு வளாகத்தில் உள்ளது.
இந்த சிலை முன்பு பெண் ஒருவரை நர பலி கொடுப்பது போன்ற காட்சி சமீபத்தில் யூடியூப்பில் வெளியானது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வைரலாக பரவி வருகிறது.
அந்த, அந்த வீடியோவில் கருப்பு உடை அணிந்த சிலர் நடராஜர் சிலையை சுற்றி வருகின்றனர். பின் அந்த கூட்டத்தில் இருந்த ஒரு பெண் கீழே படுக்கிறார். அப்போது ஒருவர் கத்தியால் அந்த பெண்ணை வெட்டுவது போல் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. வெள்ளை ஆடை அணிந்த அந்த பெண்ணும் இஷ்டப்பட்டே நர பலிக்கு சம்மதி்த்து நெஞ்சில் குத்து வாங்குவதை போல அந்த காட்சி உள்ளது.
இதை யாரோ ஒருவர் தூரத்தில் இருந்து படம் பிடித்து வெளியிட்டுள்ளார். வீடியோ பிடிக்கும் நபரின் உருவம் கண்ணாடி ஒன்றில் பட்டு வீடியோவில் தெரிகிறது. வீடியோ பிடிக்கும் நபரும் நரபலி கொடுத்தவர்களை போன்ற ஆடையுடன் காணப்படுகிறார்.
ஆனால் இந்த வீடியோவை ஐரோப்பிய அணு ஆராய்ச்சி துறை அதிகாரிகள் இதனை முற்றிலுமாக மறுத்துள்ளனர். யாரோ நகைச்சுவை உணர்வு மிக்கவர்கள் இப்படி செய்திருக்க வேண்டும் என்று அந்த அமைப்பு அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
பொதுமக்கள் பார்வைக்காக வருடத்தில் சில நாட்கள் அணு ஆராய்ச்சி அலுவலகம் திறக்கப்படும் என்றும், அதேபோல ஆராய்ச்சிக்கா பலர் வருவதுண்டு என்றும் அப்போது வீடியோவை எடுத்துவிட்டு கட்டிங்-பேஸ்டிங் மூலமாக இவ்வாறு செய்திருக்க முடியும் என்கிறார்கள் ஆராய்ச்சி நிலைய அதிகாரிகள்.
பாதுகாப்பு மிக்க அணு ஆராய்ச்சி நிலையத்தில் இப்படி வீடியோ எடுக்க முடியுமா என்பதும் கேள்விக்குறியாக உள்ளது. எது எப்படியோ, வீடியோ அச்சமூட்டுவதாக இருப்பது என்னவோ உண்மை.
-
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன் -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது -
விவாகரத்து பேப்பர்களை கிழித்தெறிந்து கணவரை கட்டி பிடித்த மனைவி! கோர்ட் வாசலில் நடந்த உருக்கமான செயல் -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை












Click it and Unblock the Notifications