10,000 அடி உயரத்தில் பறக்கையில் திறந்த விமானத்தின் கதவு: புல்லரிக்க வைக்கும் வீடியோ
செபு: பிலிப்பைன்ஸில் இருந்து இருந்து தென் கொரியாவுக்கு சென்ற விமானம் 10 ஆயிரம் அடி உயரத்தில் பறக்கையில் கதவு திறந்திருந்ததை பார்த்து பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
பிலிப்பைன்ஸின் செபு நகரில் இருந்து ஜின் ஏர் விமானம் ஒன்று 163 பயணிகளுடன் தென் கொரியாவில் உள்ள பூசனுக்கு கிளம்பியது. விமானம் கிளம்பிய வேகத்தில் அதன் அவசரகால கதவு திறந்திருந்தது தெரிய வந்தது. அந்த வழியாக காற்று வேகமாக விமானத்திற்குள் வந்ததால் பயணிகள் அல்லல்பட்டனர்.
இதனால் விமானம் கிளம்பிய 30 நிமிடங்களில் மீண்டும் செபுவுக்கே திரும்பி வந்தது. விமானத்தில் இருந்த பயணிகள் வேறு விமானம் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர்.
இது குறித்து தென் கொரியாவை சேர்ந்த பயணி கிம் ஜின் பே கூறுகையில்,
கதவு திறந்து அந்த வழியாக வந்த காற்றின் அழுத்தத்தால் பயங்கரமாக தலை வலித்தது. நான் இறந்துவிடுவேன் என்றே நினைத்தேன். ஒரு விரல் செல்லும் அளவுக்கு கதவு திறந்திருந்தது என்றார்.
காற்றின் அழுத்தத்தால் பெரியவர்களின் காதுகளே பயங்கரமாக வலித்தது. அப்படி இருக்கையில் குழந்தைகளுக்கு எப்படி இருந்திருக்கும்? என்றார் மற்றொரு பயணியான லீ சாங் க்யூ.
விமானம் 10 ஆயிரம் அடியில் பறக்கையில் கதவு திறந்திருந்தபோது எடுக்கப்பட்ட வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications