புதிய கிரிக்கெட் அணியை வாங்கினார் தலைமறைவு விஜய் மல்லையா !
லண்டன்: இந்திய வங்கிகளில் ரூ.9000 கோடி கடன் பாக்கி வைத்துள்ள தொழிலதிபர் விஜய் மல்லையா , கரீபியன் பீரிமியர் லீக் கிரிக்கெட்டில் விளையாடி வரும் BARBADOS TRIDENTS அணியை விலைக்கு வாங்கியுள்ளார்.
விஜய் மல்லையாவுக்கு சொந்தமான யுனைடெட் புரூவரீஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் சார்பில் ஐடிபிஐ, ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா உள்ளிட்ட வங்கிகளில் ரூ.9,000 கோடி கடன் பெற்று அந்தத் தொகை திருப்பி செலுத்தப்படாமல் உள்ளது. இதையடுத்து அந்த வங்கிகள் அளித்த புகாரின்பேரில் அமலாக்கத் துறை மோசடி வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறது.

இதையடுத்து லண்டன் தப்பிச்சென்ற விஜய் மல்லையா அங்கேய தங்கியுள்ளார். இந்நிலையில் கரீபியன் பீரிமியர் லீக் கிரிக்கெட்டில் விளையாடி வரும் BARBADOS TRIDENTS அணியை விலைக்கு வாங்கியுள்ளார் மல்லையா.
இதுகுறித்து விஜய் மல்லையா செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், இந்திய மதிப்பில் சுமார் 6 ஆயிரத்து 500 ரூபாய் மட்டுமே இதற்காக செலவழித்துள்ளதாக தெரிவித்துள்ளார். அந்த அணியின் மதிப்பு சுமார் 130 கோடி ரூபாய் உள்ள நிலையில், தம்மையும் பங்குதாரராக இணைத்துக் கொள்ள மற்ற உரிமையாளர்கள் சம்மதித்தாக அவர் தெரிவித்துள்ளார்.
தமது நிலை குறித்து பார்படோஸ் பிரதமரிடம் தெரிவித்ததையடுத்து, TRIDENTS அணிக்கு அரசு மானியம் வழங்க அவர் சம்மதித்ததாகவும் மல்லையா கூறியுள்ளார். பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் முக்கிய பொறுப்புகளிலிருந்து விலகினார்.
கடந்த பிப்ரவரி மாதம் பார்படோஸ் அணியின் பங்குதாரர் ஆகியிருப்பதாகவும் மல்லையா கூறியுள்ளார். இதேபோல் பாலிவுட் நடிகர் ஷாருக்கானும் கரீபியன் பீரிமியர் லீக்கில் ஒரு அணியின் உரிமையாளர் ஆகியுள்ளார்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications