Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பாகிஸ்தானில் முதலீட்டாளர் மாநாட்டில் முதலீட்டாளர்களை கவர கவர்ச்சி நடனம்.. வைரல் வீடியோ

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    பாகிஸ்தானில் முதலீட்டாளர் மாநாட்டில் ஆபாச நடனம்.. வைரல் வீடியோ

    இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் முதலீட்டாளர் மாநாட்டில் இளம் பெண் நடன கலைஞர் பெல்லி டான்ஸ் ஆடும் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

    பாகிஸ்தான் கடுமையான பொருளாதார நெருக்கடியை எதிர்க்கொண்டுள்ள நிலையில் முதலீட்டாளர்களை ஈர்க்க நடத்தப்பட்ட மாநாட்டில் தான் பெல்லி நடனம் நடந்திருப்பதாக சமூக வலைதளங்களில் வீடியோ பரவி வருகிறது.

    Viral Video: Belly dancers at Pak investment summit

    பாகிஸ்தான் அரசு கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது. இதன் காரணமாக அந்த நாட்டுக்கு சர்வதேச நாணய நிதியம் இந்த மாதம் எஸ்.ஓ.எஸ். குழுவினை அனுப்ப திட்டமிட்டுளளது. அந்த குழு பாகிஸ்தான் அரசுக்கு பட்ஜெட் பற்றாக்குறையை சமாளிக்க சில வழிகளை பரிந்துரைக்க உள்ளது.

    இந்நிலையில் பாகிஸ்தான் முதலீட்டு ஊக்குவிப்பு மாநாடு அஜர்பைஜானின் பாகுவில் நடைபெற்றது. அங்கு முதலீட்டாளர்களை கவர்ந்திழுக்க தொப்பையை காட்டியபடி இளம் பெண் ஒருவர் ஆபாச நடனம் (பெல்லி நடனம் ) ஆடியுள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளது. மொத்தம் 1 நிமிடம் 19 வினாடிகள் ஓடும் அந்த வீடியோவை பத்திரிக்கையாளர் குல் புகாரி தனது டுவிட்டர் பக்கதத்தில் பதிவிட்டுள்ளார்.

    அந்த வீடியோவுக்கு மேல் அவர், அஜர்பைஜானின் பாகுவில் நடைபெற்ற பாகிஸ்தான் முதலீட்டு ஊக்குவிப்பு மாநாட்டில் முதலீட்டாளர்களை கவர்ந்திழுக்க தலைமை பொருளாதார நிபுணர், புதிய முயற்சி எடுத்த போது, தொப்பை நடன கலைஞர்கள்... என்று குறிப்பிட்டுள்ளார்.

    இந்த வீடியோவை சுமார் 2 லட்சம் பேர் வரை இதுவரை பார்த்துள்ளனர். பலர் இதற்கு கடுமையாக விமர்சனங்களை பதிவிட்டு வருகிறார்கள்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+