வைரல் வீடியோ.. 2 வருட சாதனையை 2 நிமிடத்தில் சொன்ன நியூசிலாந்து பிரதமர்.. பூரித்த நொடிகளை கவனிங்க
Recommended Video
வெலிங்டன்: தனது இரண்டு ஆண்டு கால ஆட்சியின் சிறப்பம்சங்களை சுருக்கமாகக் கூறி, நியூசிலாந்து பிரதமர் ஜசிந்தா ஆர்டெர்ன் வீடியோவைப் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ஜசிந்தா ஆர்டெர்ன் தனது 37 வயதில் தொழிற்கட்சியின் இளைய தலைவராகவும், நியூசிலாந்தின் பிரதமராகவும் பதவி ஏற்றவர் ஆவார்.
அவர் பிரதமரான நாளின் இரண்டு ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில், அவரது குழு இரண்டு நிமிடங்களில் உங்களால் செய்ய முடிந்த பல சாதனைகளை பட்டியலிடுமாறு சவால் விடுத்தது. அதை ஏற்று அவரும் இரண்டு நிமிடத்தில் சாதனைகளை பட்டியலிட்டுள்ளார்.

நியூசிலாந்து பிரதமர் ஜசிந்தா ஆர்டெர்ன் அரசின் சாதனைகளை பட்டியலிடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிவிட்டது, இது ஆன்லைனில் அதிகப்படியாக பகிரப்பட்டதால் சுமார் 23 லட்சத்துக்கும் அதிகமான முறை இந்த வீடியோ மக்களால் பார்க்கப்பட்டது. இந்த வீடியோவை பார்த்த பலரும் நியூசிலாந்து பிரதமர் ஜசிந்தா ஆர்டெர்னை வியந்து பாராட்டி வருகின்றனர்.
அந்த வீடியோவில், நியூசிலாந்து பிரதமர் தனது அரசாங்கம் 92,000 வேலைகளை உருவாக்கியது, 2200 க்கும் மேற்பட்ட அரசு வீடுகளை கட்டியது, பூஜ்ஜிய கார்பன் மசோதாவை அறிமுகப்படுத்தியது, பள்ளிகளில் வகுப்பறைகளை அதிகப்படுத்தியது, நெடுஞ்சாலைகளை பாதுகாப்பானதாக ஆக்கியது மற்றும் சிறையில் கைதிகளின் எண்ணிக்கையை குறைத்தது என நியூசிலாந்து பிரதமர் தொடருந்து வேகமாக பேசுகிறார். இரண்டு நிமிடங்கள் 56 வினாடிகள் ஓடும் வீடியோவில் 2 நிமிடம் சாதனைகளை பற்றி மட்டும் பேசி முடித்துள்ளார்.
இதோ அந்த வீடியோ உங்கள் பார்வைக்கு.. அதில் பள்ளியில் வகுப்பறையை அதிகப்படுத்தினோம் என்று சொல்லும் போது அவரையும் மீறி முகத்தில் வரும் புன்னகையை கவனியுங்கள்












Click it and Unblock the Notifications