"அந்த" சிரிப்பு.. பெண்கள் பற்றிய கேள்விக்கு.. விழுந்து விழுந்த சிரித்த தாலிபன்கள்.. அப்படின்னா..?
அரசாங்கத்தில் சேருங்கள் என்று பெண்களுக்கு தாலிபான்கள் அழைப்பு விடுத்துள்ளனர்..!
காபூல்: "பெண் அரசியல்வாதிகளுக்கு வாக்களித்து ஆட்சியதிகாரத்துக்கு ஆப்கன் மக்கள் அனுப்புவார்களா?" என்று பெண் பத்திரிகையாளர் ஒருவர் கேள்வி எழுப்பியதற்கு, தாலிபான்கள் சிரிக்கும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.
ஆப்கான் விவகாரம் உலக அரசியலை திரும்பி பார்க்க வைத்து வரகிறது.. ஆப்கானிஸ்தானில் நடந்து வரும் மோதல், பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு கடுமையான மனித உரிமை மீறல் சிக்கல்களை ஏற்படுத்தி வருகிறது..
பெண்கள் பலவிதமான அடக்குமுறைகளுக்கு ஆளாக வேண்டி வருமோ என்று பயந்து, அந்த நாட்டில் இருந்து தப்பித்து ஓடவும் வழிவகுத்து விட்டது.

பெண்கள்
"யாரும் பயப்பட தேவையில்லை, அமைதியான நல்ல ஆட்சியை தருவோம்" என்று தாலிபன்கள் நம்பிக்கை தந்தாலும், அதை மக்கள் ஏற்க தயாராக இல்லை.. தாலிபான்களின் பழமைவாத சிந்தாந்தங்களோடும், அவர்களின் அடக்குமுறைகளிலும் தங்களால் வாழ முடியாது என்று பல்லாயிரக்கணக்கான மக்கள் நாட்டை விட்டு வெளியேறி கொண்டிருப்பதால் பதற்றம் நீடித்து கொண்டே வருகிறது.

தாலிபன்கள்
1990களில் ஆட்சியை கைப்பற்றியபோது தாலிபன்கள் பெண்கள் மீது கடுமையான அடக்குமுறைகளையும் கட்டுப்பாடுகளையும் விதித்து வந்த நிலையில், மறுபடியும் அப்படி ஒரு சூழல் ஏற்படுமோ என்ற கலக்கத்தில் உள்ளனர்.. நேற்று ஒரு பெண் பத்திரிகையாளரின் பேட்டியை கண்டு பொதுமக்கள் மேலும் பதறிவிட்டனர்.. "இந்த 24 மணி நேரத்தில் தங்கள் வாழ்க்கையே மாறிவிட்டது" என்று அந்த பெண் பத்திரிகையாளர்களும் அச்சம் தெரிவித்திருந்ததை பிற உலக நாடுகளும் கவனித்தன.

விமானங்கள்
தொடர்ந்து ஒருவித பரபரப்பும், பதட்டமும், கலக்கமும் அந்த நாட்டை கவ்வியுள்ள நிலையில், அந்த பதற்றத்தைத் தணிக்கும் வகையில்தான், அனைவருக்கும் பொதுமன்னிப்பு என்ற ஒரு அறிவிப்பு வெளியானது.. அடுத்ததாக, அரசாங்கத்தில் பெண்கள் சேர வேண்டும் என்று தாலிபான்கள் அழைப்பு விடுத்தனர். "தாலிபான் கலாச்சார ஆணையத்தின் உறுப்பினரான எனமுல்லா சமங்கனி இதைபற்றி சொல்லும்போது, "இஸ்லாமிக் எமிரேட்ஸ் பெண்களை பலியாட்களாக ஆக்க விரும்பவில்லை, ஷரியா சட்டத்தின்படி அவர்கள் அரசாங்கத்தின் ஒரு அங்கமாக இருக்க வேண்டும்.. அரசின் பல்வேறு துறைகளிலும் பணியாற்றியவர்கள் தத்தம் பணிகளுக்குத் தயக்கமின்றி திரும்பலாம் " என்ற வேண்டுகோள் விடுத்திருந்தார்.

கல்வி
அந்நாட்டில் நிலவும் பதற்றத்தை தணிக்கும் விதமாகவே இந்த அறிவிப்பு பார்க்கப்படுகிறது. ஆனாலும் இதெல்லாம் ஆப்கன் மக்களிடம் எடுபடுமா என்று தெரியவில்லை.. ஏனென்றால், ஆப்கன் மக்களில் சிலர் தாலிபன்கள் பக்கம் நின்றாலும், ஏராளமானோர் தாலிபன்கள் வருகையை விரும்பவில்லை. அதுமட்டுமல்ல,இனி அந்த நாட்டின் பல்கலைக்கழகங்கள், லைப்ரரிகள், கல்விக்கூடங்கள் என்னாகும் என்ற அடுத்த கவலையும் எழுந்துள்ளது.

ஆட்சி
இந்த ஆட்சி எந்த மாதிரியாக கட்டமைக்கப்படும் என்பதும் உறுதியாக தெரியாவிட்டாலும், முழுக்க முழுக்க இஸ்லாமிய தலைமையின் கீழ் ஆட்சி அமையும் என்பது மட்டும் ஓரளவு யூகிக்க முடிகிறது.. கடுமையான சட்டங்களுக்கிடையே அந்த நாட்டு பெண்களின் நிலை என்னாகும் என்ற கவலை எழுந்து வரும் நிலையில்தான், தாலிபன்கள் சிரிக்கும் ஒரு வீடியோ தற்போது வைரலாகி கொண்டிருக்கிறது.
|
வீடியோ
பெண் பத்திரிகை நிருபர் ஒருவர் தாலிபான்களிடம் கேள்வி எழுப்பினார்... "தாலிபான்கள் பெண்களுக்கு உரிமையளிப்பார்களா?" என்று கேட்டார்.. அதற்கு அவர்கள் "இஸ்லாமிய ஷரியா சட்டத்தின் கீழ் பெண்ணுரிமை காக்கப்படும்" என்றனர். பிறகு அதே பெண் செய்தியாளர், "பெண் அரசியல்வாதிகளுக்கு வாக்களித்து ஆட்சியதிகாரத்துக்கு ஆப்கன் மக்கள் அனுப்புவார்களா?" என்று கேட்டார்..

சிரிப்பு
உடனே அங்கிருந்த தாலிபன்கள் அதை கேட்டு சிரிக்க ஆரம்பித்துவிட்டனர்... "இந்த நிருபர் கேட்கும் கேள்வியால் சிரிப்புதான் வருது" என்கிறார்... அங்கு வீடியோ பதிவாகி கொண்டிருப்பதை பார்த்ததும் சுதாரித்து கொண்ட தாலிபன்கள், "வீடியோ எடுக்காதே நிறுத்து" என்று தடுத்தனர்... இது அத்தனையும் அந்த வீடியோவில் பதிவாகி உள்ளது..
Recommended Video

பேட்டி
ஆனால், பெண் செய்தியாளர்களிடம் தாலிபன்கள் சொன்ன பதிலைதான், தாலிபான்களின் தலைவர் நேற்று முன்தினம் துன்னுடைய முதல் செய்தியாளர்கள் சந்திப்பில் சொல்லி இருந்தார்... "பெண்கள் சமூகத்தில் செயல்பூர்வமாக இருப்பார்கள் ஆனால் இஸ்லாமியம் என்ன கூறுகிறதோ அந்த சட்ட திட்டங்களுக்குட்பட்டுத்தான்" என்றார். அரசாங்கத்தில் பெண்கள் சேர வேண்டுமாம், ஆனால் இஸ்லாத்துக்கு கட்டுப்பட்டு என்பதன் அர்த்தம் என்ன? என்று புரியாமலும், மேலும் கலக்கத்தில் அந்த நாட்டு பெண்கள் உள்ளனர்.
-
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க!












Click it and Unblock the Notifications