தாவி ஓட வைக்க கல்லால் அடித்த பார்வையாளர்கள்... பரிதாபமாக உயிரிழந்த கங்காரு!
சீனாவில் பார்வையாளர்கள் கங்காருவை கல்லால் அடித்துக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பீஜிங் : சீனாவில் உயிரியல் பூங்காவில் பார்வையாளர்கள் செங்கற்களால் தாக்கியதில் கங்காரு ஒன்று பரிதாபமாக உயிரிழந்தது. மற்றொரு கங்காரு காயமடைந்தது மக்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
சீனாவின் தென்கிழக்கு பகுதியில் ஃயூஜியன் மாகாணத்தில் உள்ள ஃபூலோவ் உயிரியல் பூங்காவில் ஏராளமான கங்காருகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இங்கு வரும் பார்வையார்கள் கங்காருகளை துள்ளி குதித்து ஓட வைப்பதற்காக கற்களை தூக்கி எறிவது வாடிக்கையாக உள்ளது.

உயிரியல் பூங்கா நிர்வாகித்தினர் முறையாக கண்காணிக்காததால் இதுபோன்ற நிகழ்வுகள் தொடர்கின்றன. கடந்த பிப்ரவரி மாதம் 28ம் தேதி பார்வையார்கள் கல்லால் அடித்ததில், 12 வயதான பெண் கங்காரு ஒன்றுக்கு காலில் அடிபட்டது. பின் அது சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் இறந்தது.
இந்த சம்பவம் நிகழ்ந்த சில வாரங்களில், அதே உயிரியல் பூங்காவில் உள்ள 5 வயதான ஆண் கங்காரு ஒன்றும் இதேபோல் தாக்கப்பட்டுள்ளது. அந்த கங்காருவுக்கு காலில் லேசாக அடிப்பட்டுள்ளது. வியாழக்கிழமை இரவு இதுபற்றிய செய்தி வெளியானதைத் தொடர்ந்து, விலங்கியல் ஆர்வலர்கள் கொந்தளிக்கத் தொடங்கியுள்ளனர்.
இதையடுத்து இதுபோன்ற தடுக்க, பார்வையார்களை கட்டுப்படுத்தும், கண்காணிக்கவும் சி.சி.வி.டி. கேமராக்கள் பொருத்த பூங்கா நிர்வாகம் முடிவு செய்துள்ளது. சம்பந்தப்பட்ட பகுதியில் இருந்து, கற்களை அகற்றிய பின்பும் வேறு இடத்தில் இருந்து கற்களை கொண்டு வரும் சுற்றுலாப் பயணிகள் விலங்குகளை தாக்குவதாக உயிரியல் பூங்கா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து கற்களை வீசிய சுற்றுலா பயணிகள் கைது செய்யப்படுவார்கள் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
சீனாவில் உயிரியல் பூங்காக்கள் சரிவரக் கண்காணிக்கப்படுவது இல்லை என்ற குற்றச்சாட்டு பரவலாக உள்ளது குறிப்பிடத்தக்கது. அடிக்கடி இது போன்று பூங்கா விபத்துக்களில் விலங்குகள் அல்லது மனிதர்கள் காயமடைவது அங்கு தொடர்கதையாகி வருகிறது.
கடந்த சில மாதங்களுக்கு முன்னர், அங்குள்ள உயிரியல் பூங்கா ஒன்றில் புலி தாக்கியதில் பார்வையாளர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தது நினைவு கூரத்தக்கது.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications