தப்பு பண்ணிட்டார்.. புடினை விட்டு விலகிய "லெப்ட் ஹேண்ட்".. ரஷ்ய அதிபரின் ஆலோசகர் ராஜினாமா! ஏன்?
மாஸ்கோ: உக்ரைன் மீதான போருக்கு நடுவே ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினின் ஆலோசகர் அனடோலி சுபைஸ் பதவி விலகியதோடு, நாட்டை விட்டு வெளியேறினார். இனி ரஷ்யாவுக்கு அவர் திரும்ப போவதில்லை எனவும், உக்ரைன் மீதான போரை கண்டித்து அவர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
Recommended Video
உக்ரைன் மீது ரஷ்யா கடந்த மாதம் 24ல் போரை துவக்கியது. தற்போது வரை உக்ரைனில் இருநாட்டு படை வீரர்கள் இடையே மோதல் நடக்கிறது. மேலும், ரஷ்யா ஏவுகணை தாக்குதல் நடத்தி வருகிறார்.
இதனால் உக்ரைனும், அந்நநாட்டு மக்களும் அதிகமாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். போர் தொடங்கி ஒரு மாதமாகியும் ரஷ்யாவால், உக்ரைன் தலைநகர் கீவ் நகரை இன்னும் கைப்பற்ற முடியவில்லை.

ரஷ்யா கோபம்
இதற்கிடையே அமெரிக்கா, பிரிட்டன் உள்பட பல மேற்கத்திய நாடுகள் ரஷ்யா மீது பொருளாதார தடைகளை விதித்துள்ளதோடு, உக்ரைனுக்கு உதவி செய்து வருகின்றன. இது ரஷ்யாவை கோபப்படுத்தி உள்ளது. இதனால் போரை தீவிரப்படுத்த ரஷ்யா முயன்றுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் பல நகரங்களில் இருந்து பொதுமக்கள் பாதுகாப்பாக வெளியேற ரஷ்யா வழி ஏற்படுத்தி கொடுத்துள்ளது.

புதின் ஆக்ரோஷம்
இதற்கிடையே சமீபத்தில் விளாடிமிர் புதின் போர் நடவடிக்கையை எதிர்க்கும் நபர்கள் குறித்து பேசினார். அப்போது அவர், ‛‛அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கு சிலர் ரகசியமாக வேலை செய்கின்றனர். இவர்கள் துரோகிகள். இவர்களை களையெடுப்பேன். மேலும் ரஷ்யாவை மேற்குலக நாடுகள் தனித்து விட்டு பொருளாதார சரிவை ஏற்படுத்த விரும்புகின்றன. உக்ரைன் மீதான ராணுவ நடவடிக்கையில் தலையிடும் நாடுகள் மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும்'' என எச்சரிக்கை விடுத்திருந்தார்.

புதினின் ஆலோசகர் ராஜினாமா
இருப்பினும் ரஷ்யாவின் போர் நடவடிக்கையை உலக நாடுகள் முதல் ரஷ்யாவில் உள்ள மக்களும் தொடர்ந்து எதிர்த்து வருகின்றனர். போரை கைவிடும்படி அவர்கள் கூறி வருகின்றனர். இந்நிலையில் தான் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினின் ஆலோசகர் அனடோலி சுபைஸ் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். மேலும் அவர் நாட்டை விட்டு வெளியேறி உள்ளார். இதுதொடர்பாக அவர் தனது சக ஊழியர்கள், நண்பர்களுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் ராஜினாமா முடிவு குறித்து குறிப்பிட்டுள்ளார். மேலும், நாட்டின் சில தவறான நடவடிக்கைகளை சுட்டிக்காட்டியுள்ளதாக கூறப்படுகிறது.

யார் இவர்
66 வயது நிரம்பிய அனடோலி சுபைஸ், 1990 காலக்கட்டத்தில் ரஷ்யாவில் பெருளாதார சீர்த்திருத்தங்களை மேற்கொண்டவர்களில் முக்கிய நபர்களில் இவரும் ஒருவர் ஆவார். தனியார்மயமாக்கல் கொள்கைகளை சிறப்பாக செயல்படுத்தினார். மேலும் துவக்க காலம் முதல் மேற்கத்திய நாடுகளின் அதிகாரிகளுடன் நெருங்கிய தொடர்பை கொண்டிருந்தார். விளாடிமிர் புதின் ஆட்சிக்கு வந்ததை இவர் தொடர்ந்து ஆதரித்தார். இதையடுத்து நீடித்த வளர்ச்சிக்கான தூதர் உள்பட பல பதவிகளை புதின் அவருக்கு வழங்கினார். தற்போது புதினின் ஆலோசகராகவும், காலநிலை தொடர்பான தூதுவராகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது.

2 வது நபராக ராஜினமா
முன்னதாக கடந்த வாரம் ரஷ்யாவின் முன்னாள் அதிபர் டிமிட்ரி மெட்வேடேவிடம் மூத்த பொருளாதார ஆலோசகராக பணியாற்றியவரும், முன்னாள் துணை பிரதமருமான ஆர்கடி டுவோர்கோவிச் உக்ரைன் மீதான போர் நடவடிக்கையை கண்டித்து ஸ்கோல்கோவா தொழில்நுட்ப நிதியத்தின் தலைவர் பதவியில் இருந்து விலகினார். சர்வதேச செஸ் சம்மேளனத்தின் தலைவரான டுவோர்கோவிச், போருக்கு எதிராகப் பேசிய சில முன்னாள் மூத்த அதிகாரிகளில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது 2வது நபராக அனடோலி சுபைஸ் ராஜினாமா செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications