இந்தியா முதுகில் குத்தும் புதின்? பாகிஸ்தானுடன் கைகோர்த்த ரஷ்யா! கராச்சிக்கு விரைந்த போர்கப்பல்கள்
இஸ்லாமாபாத்: ரஷ்யாவுக்கும், நமக்கும் நல்ல நட்பு என்பது உள்ளது. இந்நிலையில் ரஷ்ய கடற்படை கப்பல்கள் பாகிஸ்தானுக்கு சென்றுள்ளன. அங்கு ரஷ்யாவும், பாகிஸ்தானும் சேர்ந்து கூட்டு பயிற்சி மேற்கொள்ள உள்ள நிலையில் விளாடிமிர் புதின் இந்தியாவின் முதுகில் குத்துகிறாரா? அல்லது இந்தியாவுக்கு மறைமுகமாக மெசேஜ் அனுப்புகிறாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த சம்பவம் குறித்த முழு விபரம் வருமாறு:
நம் நாட்டுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே தொடக்கம் முதலே நல்ல உறவு என்பது இல்லை. பாகிஸ்தான் பயங்கரவாதத்துக்கு ஆதரவு தெரிவித்து நமக்கு சொந்தமான காஷ்மீருக்கு உரிமை கொண்டாடி வருகிறது. அதோடு பயங்கரவாதிகளை வைத்து நம் நாட்டின் தாக்குதல்களை பாகிஸ்தான் நடத்தியது. இதற்கு நம் நாடும் உரிய பதிலடி கொடுத்தது.

இதுபோன்ற காரணங்களால் இருநாடுகள் இடையே நல்ல உறவு என்பது இல்லை. பாகிஸ்தான் எப்போது பயங்கரவாதத்தை கைவிடுகிறதோ? அப்போது தான் பேச்சுவார்த்தையை தொடங்குவோம் என்று நம் நாடு அறிவித்துள்ளது. ஆனால் பாகிஸ்தானை பொறுத்தவரை பயங்கரவாதத்தை கைவிடும் எண்ணம் என்பது இப்போது வரை இல்லை.
இப்படி நம் நாட்டுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே பிரச்சனை உள்ள நிலையில் பிற உலக நாடுகள் இருஅணியாக பிரிந்து ஆதரவு என்பது கொடுத்து வருகின்றன. அதன்படி இந்தியாவுக்கு பல்வேறு உலக நாடுகளும், பாகிஸ்தானுக்கு சில உலக நாடுகளும் ஆதரவு தெரிவித்து வருகின்றன. இதில் குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் நம் நெருங்கிய நட்பு நாடான ரஷ்யா தொடர்ந்து நம் நாட்டுக்கு ஆதரவாக இருந்து வருகிறது. பாகிஸ்தான் விவகாரத்திலும் நம் நாட்டுக்கு பக்கபலமாக ரஷ்யா இருந்து வந்தது. பாகிஸ்தானுக்கு தொடர்ந்து அமெரிக்கா ஆதரவு தந்து வந்தது.
உதாரணமாக 1971ல் வங்கதேசம் உருவாக பாகிஸ்தானுக்கு எதிராக நம் நாட்டு வீரர்கள் போர் புரிந்தனர். அப்போது அமெரிக்கா, பிரிட்டன் போர்கப்பல்கள் நம்மை தாக்க வந்தபோது அதற்கு பதிலடியாக ரஷ்யா நம் நாட்டுக்கு ஆதரவாக போர்கப்பல்களை அனுப்பியதை கூறலாம். இப்படியாக நம் நாட்டுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே நெருங்கிய பந்தம் இருந்து வருகிறது. இந்த நெருங்கிய உறவு என்பது ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் - பிரதமர் நரேந்திர மோடி இடையேயும் தொடர்ந்து வருகிறது.
இதற்கிடையே தான் தற்போது திடுக்கிட வைக்கும் தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. அதாவது பாகிஸ்தான் கடற்படையுடன் சேர்ந்து ரஷ்யா கடற்படை கூட்டு பயிற்சி என்பது மேற்கொள்ள உள்ளதாம். பொதுவாக இருநாடுகள் இடையே நல்ல உறவு இருக்கும்போது மட்டுமே ராணுவம், விமானம், கடற்படை சார்ந்த கூட்டு பயிற்சிகள் மேற்கொள்ளப்படும். அந்த வகையில் தான் இப்போது பாகிஸ்தானும், ரஷ்யாவும் கடற்படை சார்ந்த கூட்டு பயிற்சியில் ஈடுபட திட்டமிட்டுள்ளனர்.
இந்த கூட்டு பயிற்சிக்காக ரஷ்யா கடற்படை சார்பில் போர்க்கப்பல்கள் பாகிஸ்தானுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. RFS REZKIY, RFS ALDAR TSYDENZHAPOV என்ற பெயர் கொண்ட ரஷ்யாவின் போர்க்கப்பல்கள் மற்றும் மீடியம் சைஸ் கொண்ட ரஷ்யாவின் கடல் டேங்கர் RFS PECHENGA ஆகியவை கராச்சி துறைமுகத்துக்கு சென்றுள்ளது. இந்த 3 கப்பல்களும், பாகிஸ்தானின் கடற்படை கப்பல்களுடன் சேர்ந்து போர் பயிற்சியை தொடங்கி நடத்த உள்ளன. கராச்சிக்கு சென்ற கப்பல்களுக்கு பாகிஸ்தான் கடற்படை மற்றும் அங்குள்ள ரஷ்ய தூதரக அதிகாரிகள் வரவேற்பு அளித்தனர்.
இதுதொடர்பாக பாகிஸ்தானின் கடற்படையின் மக்கள் தொடர்பு இயக்குநரகம் சார்பில் தனது எக்ஸ் பக்கத்தில் வீடியோ வெளியிட்டுள்ளது. அதோடு அந்த பதிவில், ‛‛"ரஷ்யா மற்றும் பாகிஸ்தான் கடற்படைக் கப்பல்கள் கடல்சார் ஒத்துழைப்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு கூட்டு பயிற்சிகளை மேற்கொள்ள உள்ளது. RFS REZKIY,RFS ALDAR TSYDENZHAPOV போர்க்கப்பல்கள் மற்றும் மீடியம்சைஸ் கடல் டேங்கர் RFS PECHENGA ஆகிய 3 ரஷ்ய கடற்படை கப்பல்கள் பாகிஸ்தான் வந்துள்ளன. ரஷ்ய கடற்படை கப்பல்களின் இந்த வருகை என்பது இருநாடுகள் இடையேயான உறவில் சிறந்த மைல்கல்லாக இருக்கும். இருநாடுகள் இடையேயான பாதுகாப்பு சார்ந்த ஒத்துழைப்பை அதிகரிக்கும் வகையில் உள்ளது'' என்று கூறப்பட்டுள்ளது.
ரஷ்யா - பாகிஸ்தானின் இந்த செயல் என்பது நம் நாட்டுக்கு அச்சுறுத்தலாக பார்க்கப்படுகிறது. ஏனென்றால் இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே மோதல் உள்ளது. இப்படியான சூழலில் நம் நட்பு நாடான ரஷ்யா, பாகிஸ்தானுடன் இணைந்து கடற்படை கூட்டு பயிற்சி மேற்கொள்வது என்பது நம் நாட்டுக்கு பாதுகாப்புக்கு ஏற்றதாக இருக்காது. இதனால் உடனடியாக இந்தியா இந்த விவகாரத்தை தீவிரமாக எடுத்து கொள்ள வேண்டும் என்கின்றனர் சர்வதேச அரசியல் வல்லுநர்கள்.
மேலும் இன்னொரு தகவலும் வெளியாகி வருகிறது. அதாவது பாகிஸ்தானுடன் சேர்ந்து ரஷ்ய கடற்படை கூட்டு பயிற்சி மேற்கொள்வதன் மூலம் ரஷ்யா நமக்கு வார்னிங்கை கொடுப்பதை முதன்மை நோக்கமாக வைத்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. அதாவது நம் நாட்டுக்கு தேவையான ராணுவ தளவாடங்கள், விமானங்களை அதிகளவில் ரஷ்யாவிடம் இருந்து தான் நாம் வாங்கி வருகிறோம். ஆனால் சமீபத்தில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், பிரதமர் மோடி ஆகியோர் சந்தித்தனர். இந்த சந்திப்பின்போது இந்தியா அமெரிக்காவிடம் இருந்து எஃப் 35 ரக போர் விமானங்கள் உள்பட ராணுவ தளவாடங்களை வாங்க வேண்டும் என்று டிரம்ப் கூறினார்.
இது நடக்கும் பட்சத்தில் ரஷ்யாவிடம் இருந்து நம் நாடு வாங்கும் ராணுவ தளவாடங்களின் பொருட்களின் எண்ணிக்கை குறையலாம். ஏற்கனவே உக்ரைன் மீதான போர் நடவடிக்கையால் ரஷ்யா பொருளாதார தடைகளை எதிர்கொள்கிறது. இப்படி இருக்கும்போது நம் நாடும் அமெரிக்கா பக்கம் சாய்ந்தால் அது ரஷ்யாவுக்கு சிக்கலை தரும். இதனால் அமெரிக்காவின் பக்கம் போகாமல் இருக்க வேண்டும் என்பதை மறைமுகமாக கூறும் வகையில் பாகிஸ்தான் கடற்படையுடன் சேர்ந்து ரஷ்ய கடற்படை கப்பல்கள் கூட்டு பயிற்சியை தொடங்கி இருக்கலாம் என்கின்றனர் விபரம் அறிந்தவர்கள்.












Click it and Unblock the Notifications