அதிபர் புதின் மீது கொலை முயற்சி? திடீரென வெடித்து சிதறிய கார்.. நொடிப்பொழுதில் நிகழ்ந்த பயங்கரம்
மாஸ்கோ: உலகில் அதிகபட்ச பாதுகாப்பைக் கொண்ட தலைவர்களில் ஒருவராக ரஷ்ய அதிபர் புதின் இருக்கிறார். இந்தச் சூழலில் ரஷ்ய அதிபர் புதினின் கான்வாயில் இடம்பெற்று இருக்கும் ஒரு கார் திடீரென வெடித்துச் சிதறியுள்ளது. அந்த கார் ரஷ்ய உளவுப்படை அலுவலகம் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டபோது திடீரென வெடித்துச் சிதறியிருக்கிறது.
ரஷ்ய அதிபராக இருக்கும் புதின், உலகில் அதிகபட்ச பாதுகாப்பைக் கொண்ட தலைவர்களில் ஒருவர் ஆவார். அவரது உயிருக்குப் பல அச்சுறுத்தல்கள் இருப்பதால் அவரை பாதுகாக்க ரஷ்ய சீக்ரெட் சர்வீஸ் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அவர் ஒரு இடத்தற்குச் செல்வதற்குப் பல வாரங்களுக்கு முன்பே கூட பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடங்கிவிடுமாம்.

கார் வெடித்து சிதறியது
இதற்கிடையே விளாடிமிர் புதினின் பாதுகாப்பு கான்வாயில் இடம்பெற்றிருந்த கார் ஒன்று திடீரென வெடித்துச் சிதறியுள்ளது. ரஷ்யாவை சேர்ந்த ஆரஸ் நிறுவனம் தயாரித்த இந்த ஆரஸ் லிமோசின் கார் மாஸ்கோ சாலைகளில் திடீரென வெடித்துச் சிதறியுள்ளது. இது தொடர்பான வீடியோவும் இணையத்தில் வெளியாகி பகீர் கிளப்பியுள்ளது.
இந்த கார் ரஷ்ய உளவுத்துறையான FSB தலைமையகத்திற்கு அருகே நிறுத்தப்பட்டு இருந்த நிலையில், திடீரென அந்த கார் வெடித்துத் தீப்பிடித்தது. இந்த காரின் மதிப்பு $3,55,796 அதாவது சுமார் ரூ.3 கோடி இருக்கும் என சொல்லப்படுகிறது. முதலில் இஞ்சனில் தீ விபத்து ஏற்பட்ட நிலையில், பிறகு அது மெல்ல உட்புறம் வரை பரவியதாகத் தெரிகிறது.
தெளிவான தகவல்கள் இல்லை
இந்த கார் ரஷ்ய அதிபர் மாளிகையின் அதிபர் சொத்து மேலாண்மைத் துறைக்குச் சொந்தமானது என்று கூறப்படுகிறது. இருப்பினும், திடீரென கார் வெடித்துச் சிதற என்ன காரணம்.. கார் வெடித்துச் சிதறிய போது உள்ளே யாராவது இருந்தார்களா என்பது போன்ற தகவல்கள் தெளிவாகத் தெரியவில்லை. அதேநேரம் இந்த சம்பவத்தால் யாருக்கும் காயம் அல்லது உயிரிழப்புகள் ஏற்படவில்லை என்று டெய்லி எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
புதின் மீதான கொலை முயற்சி?
72 வயதான ரஷ்ய அதிபர் புதின் பெரும்பாலும் ரஷ்ய ஆட்டோமொபைல் நிறுவனமான ஆரஸ் கார்களையே அதிகம் பயன்படுத்துவார். மேலும் வட கொரியாவின் கிம் ஜாங்-உன் உட்பட வெளிநாட்டுத் தலைவர்களுக்கும் புதின் ஆரஸ் கார்களையே பரிசாக அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது. ரஷ்ய அதிபர் புதினை கொலை செய்யச் சதித்திட்டங்கள் நடந்து வருவதாகக் கூறப்படும் நிலையில், இந்தச் சம்பவம் பகீர் கிளப்புவதாக இருக்கிறது. அதேநேரம் இது சம்பவம் தொடர்பாக ரஷ்ய அரசு இதுவரை எந்தவொரு விளக்கத்தையும் அளிக்கவில்லை.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு, புதினின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்த எந்தவொரு நாடு முயன்றாலும் அணு குண்டை வீசுவோம் என்று ரஷ்ய அதிபர் மாளிகை எச்சரித்து இருந்தது. மேலும், கடந்த காலங்களில் பல முறை புதின் மீது படுகொலை முயற்சிகள் நடந்துள்ளதாக உக்ரைன் ராணுவ உளவுத்துறைத் தலைவர் கைரிலோ புடனோவ் கூறியிருந்தார்
ஜெலன்ஸ்கி
மேலும் சமீபத்தில் தான் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியும் கூட ரஷ்ய அதிபர் புதின் சீக்கிரம் உயிரிழப்பார் என்று கூறியிருந்தார். அதாவது புதின் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் விரைவில் இறந்துவிடுவார் என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும், புதின் இறந்துவிட்டால் எல்லாமே ஓவர் என்றும் அவர் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது












Click it and Unblock the Notifications