டிரம்பின் மாஸ்டர் மூவ்.. முடிவுக்கு வரும் ரஷ்யா - உக்ரைன் போர்? உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி குட்நியூஸ்
கீவ்: உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் நடவடிக்கை தொடங்கி 3வது ஆண்டு நிறைவடைய உள்ளது. போர் நிறுத்தம் என்பது இன்னும் சாத்தியமாகவில்லை. இந்நிலையில்தான் அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றவுடன் உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் முடிவுக்கு வரும் என்று உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி அறிவித்துள்ளார்.
ரஷ்யா-உக்ரைன் இடையே எல்லை பிரச்சனை இருந்தது. இதற்கிடையே தான் ரஷ்யாவை சமாளிக்கும் நோக்கத்தில் உக்ரைன் நேட்டோ நாடுகள் பட்டியலில் இடம்பெற துடித்தது. இதற்கு ரஷ்யா கடும் எதிர்ப்பு தெரிவித்தது. ஆனாலும் உக்ரைன் தனது முடிவில் உறுதியாக இருந்தது.

இந்நிலையில் தான் உக்ரைன் மீது 2022ம் ஆண்டு பிப்வரி மாதம் 24ல் ரஷ்யா போர் தொடுக்க துவங்கியது. தற்போது இந்த போர் 3வது ஆண்டை நெருங்கி வருகிறது. உக்ரைனுக்குள் நுழைந்து ரஷ்யா படைகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றன. அதேபோல் உக்ரைனும், ரஷ்யா படைகளுக்கு பதிலடி கொடுத்து வருகின்றன.
இந்த போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்கா உள்பட பலநாடுகள் முயன்றன. ஆனால் ரஷ்யா - உக்ரைன் இடையேயான மோதல் போக்கால் இன்னும் ‛எண்ட் கார்டு' போட முடியாத நிலை உள்ளது. மேலும் உக்ரைனுக்கு, அமெரிக்கா தொடர்ந்து உதவி செய்து வருகிறது. இதுவும் உக்ரைன் மீதான போரை ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் கைவிடாமல் இருப்பதற்கு முக்கிய காரணமாகும்.
தற்போது அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடந்து முடிந்துள்ளது. இதில் தற்போதைய அதிபர் ஜோ பைடனின் ஜனநாயக கட்சி வேட்பாளர் கமலா ஹாரிஸ் தோல்வியடைந்துள்ளார். குடியரசு கட்சியின் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றுள்ளார். டொனால்ட் டிரம்ப் அடுத்த ஆண்டு 2025 ஜனவரி 20ல் அமெரிக்க அதிபராக செயல்பட உள்ளார். அவர் இருநாடுகளுக்கு இடையேயான போர் மற்றும் மோதலை முடிவுக்கு கொண்டு வருவதில் ஆர்வம் காட்டி வருகிறார். இதனால் அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றவுடன் உலகளவில் பெரியஅளவில் மாற்றம் நிகழும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் தான் அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றவுடன் ரஷ்யா - உக்ரைன் போர் என்பது முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. டொனால்ட் டிரம்ப் தலையீடு காரணமாக இந்த போர் முடிவுக்கு வரும் என்று கூறப்படுகிறது. இதனை தற்போது உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி உறுதி செய்துள்ளார். உக்ரைன் நாட்டின் Suspilne எனும் ஊடகத்துக்கு விளாடிமிர் ஜெலன்ஸ்கி அளித்த பேட்டியில் கூறியதாவது:
அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றுள்ளார். அவருடன் தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்து உரையாடினேன். இந்த வேளையில் போர் நிறுத்தம் குறித்து ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தை நடந்தது. எங்கள் நாட்டின் நிலைப்பாட்டுக்கு எதிராக நான் அவரிடம் எதுவும் கேட்கவில்லை.
அடுத்த ஆண்டு டொனால்ட் டிரம்ப் அமெரிக்க அதிபராக பொறுப்பேற்றவுடன் எங்கள் நாட்டின் மீதான ரஷ்யாவின் போர் முடிவுக்கு வரும். வெள்ளை மாளிகையின் உதவியுடன் போர் நிறுத்தப்படும். பலமான ராணுவத்துடன் போரை முடிவுக்கு கொண்டு வருவதாக டிரம்ப் உறுதியளித்துள்ளது. நிச்சயம் போர் முடிவுக்கு வரும். ஆனால் போர் முடிவுக்கு வரும் சரியான தேதி என்ன ? என்பது இப்போது தெரியாது'' என்றார்.
இதனால் டொனால்ட் டிரம்ப் அதிபரான பிறகு உடனடியாக ரஷ்யா - உக்ரைன் போர் முடிவுக்கு வரும் என்ற பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் ரஷ்யாவின் போர் நடவடிக்கையை சமாளிக்க உக்ரைனுக்கு, அமெரிக்கா தான் தொடர்ந்து உதவி வருகிறது. அமெரிக்காவின் தற்போதைய அதிபர் ஜோ பைடன் தலைமையிலான அரசு உக்ரைனுக்கு ஆயுத உதவி, நிதி உதவி வழங்கி வருகிறது. இதனை டொனால்ட் டிரம்ப் விமர்சனம் செய்து இருந்தார்.
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடங்கியதில் இருந்து பல்லாயிரக்கணக்கான பில்லியன் டாலர் அளவுக்கு அமெரிக்கா, உக்ரைனுக்கு உதவி இருப்பதாக கூறி விமர்சனம் செய்தார். ஆனாலும் கூட தான் அமெரிக்க அதிபராக பொறுப்பேற்ற அடுத்த 24 மணிநேரத்தில் போரை முடிவுக்கு கொண்டு வருவதாகவும் உறுதியளித்தார். இருப்பினும் போரை முடிவுக்கு கொண்டு வருவது எப்படி என்பது பற்றி டொனால்ட் டிரம்ப் எதுவும் சொல்லவில்லை.
இதற்கிடையே தான் டொனால்ட் டிரம்ப் அமெரிக்க அதிபர் தேர்தலில் வென்ற பிறகு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினும் வாழ்த்து தெரிவித்தார். மேலும் டொனால்ட் டிரம்புடன் பேச தயாராக இருப்பதாகவும் கூறினார். அதேபோல் டொனால்ட் டிரம்பும், விளாடிமிர் புதினுடன் பேச்சுவார்த்தை எதிர்க்காலத்தில் நடக்கலாம் என்று கூறியிருந்தார். தற்போது உக்ரைன் அதிபரும் ஜெலன்ஸ்கியும், டொனால்ட் டிரம்ப் பதவியேற்றவுடன் போர் நிறுத்தப்படும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார். இதனால் 2025 ஜனவரி மாதம் 20ம் தேதி டொனால்ட் டிரம்ப் அதிபராகும் காலத்தை அனைவரும் எதிர்நோக்கி காத்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
கடலோர மக்களுக்கு குடிநீர் இல்லை.. ஏரிகளை தகர்த்தது அமெரிக்கா.. ஈரான் பரபரப்பு குற்றச்சாட்டு -
அமெரிக்காவில் இந்திய தொழிலதிபர் குடியுரிமை பறிப்பு.! டிரம்ப் அரசு அதிரடி நடவடிக்கை.. பரபர பின்னணி -
ஹார்முஸ்-இல் சுட்டு வீழ்த்தப்பட்ட ஹெலிகாப்டர்.. டிரம்ப் கோபம்! ஈரான் மீது அமெரிக்கா பதிலடி தாக்குதல் -
நீங்கள் தனித்து விடப்படுவீங்க.. பெஞ்சமின் நெதன்யாகுவை போனில் லெஃப்ட் ரைட் வாங்கிய டிரம்ப்! -
டிரம்ப் போட்ட அந்த ஒரு போஸ்ட்.. கப்சிப் ஆன ஈரான்.. மத்திய கிழக்கில் ஒரே நேரத்தில் எல்லாம் மாறுதே -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே!












Click it and Unblock the Notifications