அடுத்த குறி மாஸ்கோ? முழு வீச்சில் இறங்கும் வாக்னர்! புதின் வார்னிங் கொடுத்தும் கேட்காத பிரிகோஜின்
மாஸ்கோ: ரஷ்யாவில் இப்போது பெரிய குழப்பமான ஒரு சூழல் ஏற்பட்டுள்ள நிலையில், வாக்னர் குழு அடுத்தடுத்து மாஸ்கோ உள்ளிட்ட நகரங்களை நோக்கி முன்னேற உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
ரஷ்ய அதிபர் புதின் இப்போது மிகப் பெரிய நெருக்கடியை எதிர்கொண்டுள்ளார். அவர் பல ஆண்டுகளாக ரஷ்யாவின் டாப் பதவியில் இருந்து வந்தாலும், இத்தனை ஆண்டுகளில் அங்கே மிகப் பெரிய நெருக்கடியை எதையும் அவர் சந்தித்ததே இல்லை.
இந்தச் சூழலில், இத்தனை ஆண்டுகளாக ரஷ்யாவுக்குப் பக்கபலமாக இருந்த தனியார் ராணுவமான வாக்னர் ரஷ்யாவுக்கு எதிராகத் திரும்பியுள்ளன. இதனால் அங்கே உள்நாட்டுப் போர் சூழலும் ஒரு மோசமான நிலைமை ஏற்பட்டுள்ளது. அங்கே ரஷ்யாவில் எரிபொருள் கிடங்குகளில் எல்லாம் வெடிகுண்டு வீசப்பட்டுள்ளது. இதனால் அங்கே ஒரு வித பதற்றம் ஏற்பட்டுள்ளது.
அடுத்து மாஸ்கோ தான்: ரஷ்ய தனியார் மில்லடரி குழுவின் தலைவர் பிரிகோஜின் இன்று 1,200 கி.மீ தூரத்திற்கு ஆயுதமேந்திய கான்வாய் ராணுவ வீரர்களை ரஷ்ய தலைநகர் மாஸ்கோவுக்கு அனுப்பியுள்ளார். உக்ரைன் எல்லையில் உள்ள ஐரோப்பிய ரஷ்யாவின் தெற்குப் பகுதியை மாஸ்கோவுடன் இணைக்கும் பிரதான நெடுஞ்சாலையில் ராணுவம் அணி வகுப்பதால் அந்த சாலையைத் தவிர்க்குமாறு பொதுமக்களுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

திடீர் வதெற்கு ரஷ்யாவில் உள்ள ரோஸ்டோவ் நகரில் இருக்கும் ராணுவ தலைமையகத்தைத் தான் கைப்பற்றியுள்ளதாகவும் நகரில் இருக்கும் ராணுவ தளங்களை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளதாகவும் ப்ரிகோஜின் அறிவித்துள்ளார். இதற்கிடையே ரஷ்யாவின் தெற்கு நகரமான வோரோனேஜில் எரிபொருள் கிடங்கிற்கு தீ வைக்கப்பட்டுள்ளது. இது அங்கே பதற்றத்தை மேலும் அதிகரிப்பதாக அமைகிறது. அங்கே கொழுந்து விட்டு எரியும் தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர்.
பெரும் குழப்பம்: 100 தீயணைப்பு வீரர்கள் மற்றும் 30க்கும் மேற்பட்ட வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். இந்த மோசமான தீ விபத்தில் யாரும் பாதிக்கப்பட்டதாக இதுவரை தெரியவில்லை. இந்த மோசமான வெடிப்பு நடப்பதற்கு முன்பு அங்கே ஹெலிகாப்டர் ஒன்று பறக்கும் வீடியோவும் இப்போது இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது. இருப்பினும், அது யாருக்குச் சொந்தமான ஹெலிகாப்டர் என்பது இதுவரை தெளிவாகத் தெரியவில்லை.
வாக்னர் குழுவின் நடவடிக்கையை ரஷ்ய அதிபர் புதின் மிகக் கடுமையாக விமர்சித்துள்ளார். இது தொடர்பாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள புதின், "பிரிகோஜின் மற்றும் வாக்னர் கூலிப்படை இப்போது ரஷ்யாவிற்குக் கொடிய அச்சுறுத்தலாக மாறியுள்ளது. அவர்கள் இந்த நாட்டிற்குச் செய்தது தேசத்துரோகம் ஆகும். இந்த துரோகிகள் நிச்சியம் தண்டிக்கப்படுவார்கள்" என்று அவர் கூறியிருந்தார்.
புதினின் இந்த உரைக்குப் பிறகு ப்ரிகோஜின் இதற்குப் பதிலடி தரும் வகையில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த சூழலில் சரணடைய வாய்ப்பே இல்லை என அவர் நிராகரித்துள்ளார். மேலும், வாக்னர் போராளிகளைத் துரோகிகள் என்று அழைத்து ரஷ்ய அதிபர் மிகப் பெரிய தவறை செய்துவிட்டதாகவும் ப்ரிகோஜின் விமர்சித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில், "நாங்கள் துரோகிகளாம். நாங்கள் தான் எங்கள் தாய்நாட்டின் தேசபக்தர்கள். யார் சொன்னாலும் சரணடையவும் வாய்ப்பில்லை" என்றார்.
பரபர சூழல்: வாக்னர் குழு ஆரம்பித்துள்ள இந்த கிளர்ச்சி ரஷ்யாவின் இருக்கும் அரசியல் குழப்பத்தை எடுத்துக் காட்டுவதாக உள்ளதாக உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில், "ரஷ்யாவின் பலவீனமாக இருக்கிறது. இது நமக்கு வெளிப்படையாகவே தெரிகிறது. ரஷ்யா எங்கள் நாட்டில் எத்தனை குழப்பங்களையும் வலியையும் பிரச்சினைகளையும் ஏற்படுத்துகிறதோ.. அது நிச்சயம் அவர்களுக்கே திரும்ப வரும்
ரஷ்யாவின் தீமை, குழப்பம் ஐரோப்பாவில் பரவுவதை நாங்கள் தான் தடுத்து நிறுத்தியுள்ளோம். நீண்ட காலமாக, ரஷ்யா தனது பலவீனத்தையும் அதன் முட்டாள்தனத்தையும் மறைக்கப் போலியான ஒரு பிரச்சாரத்தை முன்னெடுத்து வந்தது" என்று அவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications