அமெரிக்கா விடுத்த எச்சரிக்கை! வெளியேறும் இஸ்ரேலியர்கள்..? இலங்கையில் பதற்றம்!
அம்பாறை: இலங்கையில் உள்ள பிரபல சுற்றுலாத் தலமான அறுகம்பே பகுதியில் உள்ள வெளிநாட்டினர் பாதுகாப்பாக இருக்குமாறும் உடனடியாக அங்கே இருந்து வெளியேறுமாறும் அமெரிக்கத் தூதரகம் ஒரு எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில், அந்தப் பகுதியில் ஒரு பதற்றம் நிலவிவருகிறது.
அமெரிக்கத் தூதரகம் வெளியிட்ட ஒரு எச்சரிக்கை செய்தி இலங்கை மக்கள் மத்தியில் மிகப்பெரிய அதிர்வலைகளை உருவாக்கி இருக்கிறது. இலங்கை ஊடகங்களில் தலைப்புச் செய்தியாக வெளியான இந்த விவகாரம் பெரிய அளவில் இந்தியா போன்ற அண்டை நாடுகளில் கவனம் பெறவில்லை. அப்படி என்ன அறிவிப்பை இலங்கையில் உள்ள அமெரிக்கத் தூதரகம் வெளியிட்டுள்ளது?

இலங்கையின் மிக முக்கியமான சுற்றுலா தலம்தான் அறுகம் பே. இந்த அறுகம் குடா என்று சொல்லப்படும் சுற்றுலா பகுதி இலங்கை கிழக்கு மாகாணத்தில் அம்பாறை மாவட்டம் பொத்துவிலில் இருக்கிறது. இது ஒரு கடற்கரைப் பிரதேசமாகும். இங்கு ஆண்டு முழுவதும் அதிக வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் வந்து குவிந்து கிடப்பார்கள். இந்தப் பகுதிதான் யாரும் சுற்றுலா செல்லவேண்டாம் என்று இலங்கையில் உள்ள அமெரிக்கத் தூதரகம் தனது வலைத்தளத்தில் அறிவிப்பை நேற்று வெளியிட்டது. அதை அடுத்து ஆட்சியாளர்கள் மத்தியிலும் எதிர்க்கட்சிகள் மத்தியிலும் இந்த விவகாரம் தீ போலப் பற்றி எரியத் தொடங்கிவிட்டது.
மறு அறிவிப்பு வரும்வரை அங்கே அமெரிக்கச் சுற்றுலாவாசிகள் யாரும் போக வேண்டாம் என எச்சரிக்கும் அளவுக்கு என்ன நடந்தது? இங்கே உள்ள வெளிநாட்டவரைக் குறிவைத்துத் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டுள்ளதாக ஒரு தகவல் அமெரிக்க உளவு படைக்குக் கிடைத்திருக்கிறது. அந்த அச்சம் காரணமாகவே இந்தத் தடை உத்தரவை வெளியிட்டுள்ளது தூதரகம்.
போர் சூழல் காரணமாக இங்கே இஸ்ரேலில் சுற்றுலாப் பயணிகள் அதிகமாகத் தங்கி உள்ளனர். போர் தாக்குதலுக்குப் பதிலடிக் கொடுக்கும் விதமாக இஸ்ரேல் பிரஜைகளைக் குறிவைத்துத் தாக்குதல் நடத்தப்படலாம், அதில் அமெரிக்கப் பயணிகளும் பாதிக்கப்படலாம் என்று அஞ்சியே அமெரிக்கா இதைக் கூறியுள்ளது.
கடந்த மார்ச் மாதம் முதலே இங்கே அதிகமாக இஸ்ரேலியர்கள் வந்து குவிந்து இருப்பதோடு அவர்களே சில கடைகளைக்கூட நடத்தி வருவதாகவும் இலங்கை மக்கள் மத்தியில் ஒரு புகார் சொல்லப்பட்டு வந்தது. இந்தநிலையில் தான் கடந்த 2 ஆம் தேதி ருகி ஃபெர்னாண்டோ என்பவர் அவரது எக்ஸ் தளத்தில் ஒரு பதிவைப் போட்டிருந்தார். அதில், அறுகம்பேவில் இஸ்ரேலியர்களுக்கு என்று தனி மசூதி ஒன்று இருப்பதாகவும், அந்தப் பகுதியில் உள்ள மதில் சுவர்களில் இஸ்ரேலிய ராணுவத்தினரைக் குறிக்கும் வகையில் ஓவியங்கள், நாட்டின் சின்னங்கள் வரையப்பட்டுள்ளன என்றும் அவர் எழுதி இருந்தார். அந்த ஓவியங்களில் உள்ள எழுத்துகள் அனைத்தும் இஸ்ரேலிய மொழியில் எழுதப்பட்டுள்ளதைப் படமாக எடுத்துப் பதிவிட்டிருந்தார்.
இவர் பதிவிட்டுள்ள படங்களில் உணவகங்களில் கூட இஸ்ரேலிய மொழியில்தான் அறிவிப்புப் பலகைகள் வைக்கப்பட்டுள்ளன. இவர்களின் குடியேற்றத்தால், கடைகளை நடத்துவதால் அறுகம் பே பகுதி இலங்கை வாழ் வர்த்தகர்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாக மற்றொரு புறம் ஒரு குற்றச்சாட்டையும் அந்நாட்டு மக்கள் எழுப்பி வருகின்றனர். இதனைத் தொடர்ந்து இலங்கை ராணுவத்தினரின் பாதுகாப்பைப் பலப்படுத்தி இருக்கிறார் அதிபர் ஏகேடி. ஏனெனில் இதற்கு முன்பாகவே கடந்த 2019 ஆண்டு மிகப்பெரிய குண்டு வெடிப்பு ஒன்று இலங்கையில் உள்ள தேவாலயத்தில் நடந்தது. அதை எல்லாம் கணக்கில் கொண்டு பாதுகாப்பைப் பலப்படுத்தி இருக்கிறது இலங்கை காவல்துறை.

இலங்கையில் உள்ள அறுகம்பே பகுதியில் மொத்தம் எவ்வளவு இஸ்ரேலியர்கள் இருக்கிறார்கள் என்ற கணக்கை அறிவதற்காக அந்நாட்டு சுற்றுலா தலத்தில் உள்ள தகவலை தேடிப் பார்த்தபோது, இந்த செப்டம்பர் மாதம் வரை 14 லட்சத்து 87 ஆயிரத்து 303 சுற்றுலாப் பயணிகள் இங்கே தங்கி இருக்கின்றனர் எனத் தெரியவருகிறது. கிட்டத்தட்ட 15 லட்சம் இஸ்ரேலியர்கள் இந்த அழகிய நகரமான அறுகம்பே பகுதிக்கு வருகை தந்துள்ளனர். அதில் 20 ஆயிரம் பேர் மாதக் கணக்கில் இங்கே வாழ்ந்து வருகின்றனர்.
இதை உணர்ந்த இஸ்ரேல் பாதுகாப்பு கவுன்சில் ஒரு அறிவிப்பை தங்கள் நாட்டுப் பிரஜைகளுக்காக வெளியிட்டுள்ளது. அதில் இலங்கை கடற்கரை நகரங்களில் வசிப்பவர்கள் உடனே வெளியேறுங்கள். கூட்டமாக ஒரே இடத்தில் கூடுவதைத் தவிர்க்க வேண்டும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications