அதிகாலையில் எழுந்தாலும், பொறுப்பற்ற மாணவனாக வளர்ந்த ஒபாமா...
வாஷிங்டன்: அதிகாலையில் எழுந்து படித்தாலும் கூட தான் பொறுப்பற்ற மாணவராகவே இருந்ததாக தெரிவித்துள்ளார் அமெரிக்க அதிபர் ஒபாமா.
அமெரிக்காவில் டென்னெஸ்கி நகரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அதிபர் ஒபாமா , அங்கு நிகழ்த்திய உரையில் தனது மாணவப் பருவத்தை குறித்து நினைவு கூர்ந்தார்.
அப்போது அவர் கூறியதாவது :-

தாயின் பராமரிப்பு....
என்னுடைய பால்ய பருவத்தில் என்னுடைய தாய் என்னை தனி ஆளாக இருந்து வளர்த்தார். என்னுடைய தாத்தா, பாட்டியின் துணையோடு எங்கள் அனைவரையும் நன்றாக கவனித்துக்கொண்டார்.

தாயாரின் கவலை....
6 வயதில் நான் வெளிநாட்டில் வளர்ந்தேன். எனவே படிப்பில் பின் தங்கி விடுவேன் என்ற கவலை எனது தாயாருக்கு இருந்தது. எனவே, அதிகாலை 4.30-5.00 மணிக்கே என்னை தட்டி எழுப்பி படிக்க செய்வார்.

எழுந்திருக்க அடம்....
ஆனால் அது எனக்கு பிடிக்காது. எனவே எழுந்திருக்க அடம் பிடிப்பேன். அதே நேரத்தில் 8 வயதான போது அதிகாலை 4 மணிக்கே எழுந்து படித்தேன்.

பொறுப்பில்லாத மாணவன்....
பொருளாதார ரீதியில் மிகவும் கஷ்டப்பட்டோம். எங்களிடம் பணம் இல்லாததால் அரசின் கல்வி உதவி தொகை மூலமே படிக்க முடிந்தது. படிக்கும் போது சில நல்ல பழக்க வழக்கங்களை கடை பிடித்தாலும் எனது பள்ளிப்பருவம் முழுவதும் பொறுப்பில்லாத மாணவனாகத்தான் இருந்தேன்' என இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
-
நியூயார்க் மயானத்தில் பூமிக்கு அடியில் 56 லட்சம் தேனீக்கள்! உலக அதிசயமாக மாறிய கல்லறைத் தோட்டம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications